திரேசா கோக்
திரேசா கோக் சு சிம் (மலாய்: Teresa Kok Suh Sim; சீனம்: 郭素沁; ஆங்கிலம்: Teresa Kok Suh Sim) (பிறப்பு: 31 மார்ச் 1964) என்பவர் முன்னாள் பாக்காத்தான் (Pakatan Harapan) நிர்வாகத்தில் 2018 சூலை முதல் 2020 பிப்ரவரி வரையில் மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சராக பணியாற்றிய மலேசிய அரசியல்வாதி ஆவார்.
திரேசா கோக் Teresa Kok 郭素沁 | |
---|---|
2018-ஆம் ஆண்டில் திரேசா கோக் | |
மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சர் | |
பதவியில் 2 சூலை 2018 – 24 பிப்ரவரி 2020 | |
ஆட்சியாளர்கள் | சுல்தான் ஐந்தாம் முகமது (2018–2019) அப்துல்லா (2019–2020) |
பிரதமர் | மகாதீர் பின் முகமது |
தொகுதி | செபுத்தே நாடாளுமன்றத் தொகுதி |
சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமைச்சர் (முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்) | |
தொகுதி | கின்ராரா சட்டமன்றத் தொகுதி |
மலேசியர் நாடாளுமன்றம் செபுத்தே நாடாளுமன்றத் தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 29 நவம்பர் 1999 | |
பெரும்பான்மை | 67,187 (2022) 56,059 (2018) 51,552 (2013) 36,492 (2008) 12,895 (2004) 5,200 (1999) |
சட்டமன்ற உறுப்பினர் Member கின்ராரா சட்டமன்றத் தொகுதி சிலாங்கூர் மாநில சட்டமன்றம் | |
பதவியில் 8 மார்ச் 2008 – 5 மே 2013 | |
பெரும்பான்மை | 5,739 (2008) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திரேசா கோக் சு சிம் Teresa Kok Suh Sim 31 மார்ச்சு 1964 சிலாங்கூர், மலேசியா |
குடியுரிமை | மலேசியர் |
அரசியல் கட்சி | ஜனநாயக செயல் கட்சி (DAP) |
பிற அரசியல் தொடர்புகள் | பாக்காத்தான் (PH) பாக்காத்தான் ராக்யாட் (PR) மாற்று முன்னணி (BA) மக்கள் சக்தி (GR) |
முன்னாள் கல்லூரி | மலாயா பல்கலைக்கழகம் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழக கல்லூரி |
வேலை | அரசியல்வாதி |
இணையத்தளம் | www |
1999 நவம்பர் முதல் செபுத்தே நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக (MP) பணியாற்றி வருகிறார். அத்துடன் 2008 மார்ச் தொடங்கி 2013 மே மாதம் வரையில் சிலாங்கூர் மாநில சட்டமன்ற செயற்குழு உறுப்பினராகவும் (Selangor State Executive Councillor); சிலாங்கூர் மாநில கின்ராரா சட்டமன்ற உறுப்பினராகவும் (Selangor State Kinrara State Constituency) பணியாற்றியவர் ஆகும்.
தற்போது இவர் ஆளும் பாக்காத்தான் (Pakatan Harapan) கூட்டணியின் ஓர் அங்கமான ஜனநாயக செயல் கட்சியின் (Democratic Action Party) உறுப்பினரும் ஆவார்.
பொது
தொகுகோலாலம்பூரில் பிறந்து வளர்ந்த திரேசா கோக், சீன வம்சாவளியைச் சேர்ந்த மூன்றாம் தலைமுறை மலேசியர் ஆகும். இவரின் மூதாதையர்கள் சீனாவின் குவாங்டாங் மாநிலத்தில் (Guangdong Province) உள்ள ஊய்சோ பகுதியைச் சேர்ந்தவர்கள்.
சீன மொழியின் ஒரு பிரிவான கேசிய மொழி (Hakka); மற்றும் கண்டோனீயம் (Cantonese) ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசக் கூடியவர். மலாய் மொழி, ஆங்கிலம் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர். இவர் ஒரு கத்தோலிக்கர்.[1]
தத்துவத் துறையில் முதுகலை பட்டம்
தொகு1990இல் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் (Universiti Sains Malaysia) தகவல்தொடர்பு துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். மேலும் மலாயா பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறையில் முதுகலை பட்டம் பெற்றார். முதுகலை பட்டத்திற்கு "டாக்டர் மகாதீரின் சகாப்தத்தில் (1981-2001) அம்னோவில் பிரிவுவாதம்" (Factionalism in Umno During Dr Mahathir's Era: 1981–2001) என்ற தலைப்பில் ஆய்வுகள் செய்தார். மலேசியாவின் சின் சிவ் டெய்லி (Sin Chew Daily) சீன நாளிதழுக்கு எழுதி வருகிறார்.
அரசியல் வாழ்க்கை
தொகு1990 முதல் 1995 வரை மலேசியாவின் எதிர்க்கட்சித் தலைவர் லிம் கிட் சியாங்கின் (Lim Kit Siang) அரசியல் செயலாளராக இருந்தார். 1995-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதியில் ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.
ஆனாலும் மலேசிய சீனர் சங்க (Malaysian Chinese Association) வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார். அதன் பிறகு தன் படிப்பை மேற்கொள்வதற்காக அரசியல் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் 1996 முதல் 1998 வரை பர்மாவில் மக்களாட்சியை ஊக்குவிக்கும் அரசியல் தலைவர்கள் வலையமைப்பின் செயலகத்தில் (Secretariat of the Political Leaders Network Promoting Democracy in Burma) பகுதிநேரமாகப் பணியாற்றினார்.
வாக்குகள் பெரும்பான்மை
தொகு1999-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், கோலாலம்பூர், செபுத்தே நாடாளுமன்றத் தொகுதியில் 5,200 பெரும்பான்மையில் திரேசா கோக் வெற்றி பெற்றார். மேலும் 2004-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் 12,895 பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் இந்த வெற்றி அப்போதைக்கு மிகப்பெரிய வாக்குகள் பெரும்பான்மை என அறியப்படுகிறது.
2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், 36,492 பெரும்பான்மையில் செபுத்தே தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார். இது மலேசியாவில் எந்தத் தொகுதியிலும் இல்லாத மிகப்பெரிய பெரும்பான்மையாக அறியப் படுகிறது. மற்றும் அதே வேளையில் சிலாங்கூர் மாநில சட்ட மன்றத்தின் கின்ராரா தொகுதியிலும் (Kinrara State Constituency) வெற்றி பெற்றார்.
2013 பொதுத் தேர்தல் சாதனை
தொகுஅதன் பின்னர் அவர் புதிய சிலாங்கூர் மாநில சட்ட மன்றத்தின் செயற்குழுவிற்கு (Selangor State Executive Council) தேர்ந்தெடுக்கப்பட்டார்; இதன் தொடர்ச்சியாக அனைத்து நிதிகளும் மலேசியர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு அமைச்சராக (Executive Councillor) நியமிக்கப்பட்டார்.
2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், அவர் மீண்டும் செபுத்தே தொகுதியில் வெற்றி பெற்றார். இந்த முறை செபுத்தே தொகுதியின் மொத்த வாக்குகளில் 86 விழுக்காடு வாக்குகளைப் பெற்று சாதனையும் படைத்தார். 2018 பொதுத் தேர்தலில் ஐந்தாவது முறையாக செபுதே தொகுதிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இறுதியாக 2022 பொதுத் தேர்தலில் 73,234 வாக்குகள் (83.74%) பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
சர்ச்சைகள்
தொகு2008-ஆம் ஆண்டில், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (Internal Security Act) கைது செய்யப்பட்டார். இந்தச் சட்டத்தின் கீழ், குற்றம் ஏதேனும் இருந்தாலும் அதை வெளியிட வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லாததால், திரேசா கோக் எதற்காகக் கைது செய்யப்பட்டார் எனும் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
மலாய் நாளிதழ் உத்துசான் மலேசியா (Utusan Malaysia), அவர் பூச்சோங்கில் உள்ள ஒரு மசூதிக்கு அசான் (Azan) செய்யும் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று "அறிவுரை" செய்ததாக செய்தி வெளியிட்டது. திரேசா கோக் அந்தக் குற்றச்சாட்டை மறுத்தார்.[2] மசூதியில் அசான் ஒலிபரப்பப் படாததற்கு, பழுதடைந்த ஒலிபெருக்கி அமைப்புதான் காரணம் என்பது பின்னர் தெரியவந்தது.[3][4]
அவர் 19 செப்டம்பர் 2008-இல் விடுவிக்கப்பட்டார்.[5] பின்னர் 2008 செப்டம்பர் 27-ஆம் தேதி, இரண்டு மொலோடோவ் வெடிச் சாதனங்கள் (Molotov Cocktails) அவரின் வீட்டின் வளாகத்தில் வீசப்பட்டன. அதனுடன் ஓர் எச்சரிக்கை கடிதமும் இருந்தது. அந்தச் சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "About Teresa". Archived from the original on 2018-07-02. பார்க்கப்பட்ட நாள் 2023-04-05.
- ↑ "Saya Akan Ambil Tindakan Terhadap Utusan Malaysia & Zaini Hassan". Teresa Kok. 11 September 2008 இம் மூலத்தில் இருந்து 28 மார்ச் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220328172820/https://www.teresakok.com/2008/09/11/saya-akan-ambil-tindakan-terhadap-utusan-malaysia-zaini-hassan/.
- ↑ "Faulty PA system the cause of 'silent' azan". Malaysiakini. 12 September 2008. http://malaysiakini.com/news/89556.
- ↑ "Petition not about 'azan' but religious 'ceramah'". Malaysiakini. 12 September 2008. http://malaysiakini.com/news/89587.
- ↑ "Teresa Kok released". TheEdgeDaily. 19 September 2008 இம் மூலத்தில் இருந்து 20 செப்டம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080920150354/http://www.theedgedaily.com/cms/content.jsp?id=com.tms.cms.article.Article_790406d5-cb73c03a-1f195fc0-c0da1060.
- ↑ "TERESA KOK SEES MOLOTOV COCKTAIL INCIDENT AS SCARE TACTIC". Yahoo! News. 28 September 2008. http://malaysia.news.yahoo.com/bnm/20080927/tts-teresa-bomb-993ba14.html.[தொடர்பிழந்த இணைப்பு]
மேலும் காண்க
தொகு- Kok, Teresa (2002). "Government Should Not Send The Rohingya Refugees Who Broke Into The UNHCR Office Back To Burma". Retrieved 5 November 2005.
- Kok, Teresa (2005). "Teresa Kok Suh Sim". Retrieved 29 October 2005.
வெளி இணைப்புகள்
தொகு- Teresa Kok's blog.
- Teresa Kok's Parliamentary Web Page பரணிடப்பட்டது 2007-02-13 at the வந்தவழி இயந்திரம்