மரியாதைத் தலைப்பு
மரியாதைத் தலைப்பு அல்லது மரியாதை அடைமொழி என்பது ஒருவரை அழைக்கும் போது அவரது பெயருடன் அடைமொழியாகப் பயன்படுத்தும் மரியாதை தரும் சொல் ஆகும். ஏனைய மொழிகளுக்குச் சமாந்தரமாக தமிழில் பல மரியாதைத் தலைப்புகளைக் காணலாம். எ.கா.: திரு, திருமதி, செல்வி, வணக்கத்துக்குரிய இவை ஒருவரின் தொழில்சார் அடைமொழியாக அல்லாமல் சமூகம் சார் அடைமொழியாகக் காணப்படுகின்றது.
பொதுவான மரியாதைத் தலைப்புகள்
தொகு- திரு: திருமணமான ஆணைக் குறிக்கும் மற்றும் 18 வயது நிரம்பிய ஆணையும் குறிக்கும்.திருவாளர் என்பதன் சுருக்கம்.
- திருமதி: திருமணமான பெண்ணைக் குறிக்கும், திருவாட்டி என்பதன் சுருக்கம்.
- திருமிகு: திருமணமான ஆண்,பெண் இருவரையும் குறிக்கும்.
- செல்வி: திருமணம் ஆகாத பெண்னைக் குறிக்கும்.
- செல்வன்:18 வயதுக்கு குறைவான ஆணைக் குறிக்கும்.
பெரும்பாலும் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பயன்படுகிறது.
மதம் சார் மரியாதைத் தலைப்புகள்
தொகு- சங்கைக்குரிய:
- வணக்கத்துக்குரிய:
- போற்றுதலுக்குரிய:
- அருட்திரு:
- தவத்திரு:
- சுவாமி:
- சிவத்திரு:
- யதிராஜர்:
முஸ்லிம்கள்
தொகு- ஹாஜி - ஹஜ் செய்தவர்களை அழைப்பதற்காக
- ஜனாப் - வயதானவர்களின் பெயருக்கு முன்பு, ஹாஜி ஜனாப் என்றும் சேர்த்து அழைக்கிறார்கள்
- மர்ஹும் - இறந்தவர்களின் பெயருக்கு முன்பு.
இறந்தவர்களை குறிக்கும் மரியாதைத் தலைப்பு
தொகு- தெய்வத்திரு:
- அமரர்:
கல்விசார் மரியாதைத் தலைப்புகள்
தொகு- பண்டிதர்
- புலவர்:
- பெரும்புலவர்:
- வித்துவான்:
- பேராசிரியர்:
- முனைவர்:
அரசியல் அல்லது பதவிசார் மரியாதைத் தலைப்புகள்
தொகு- நீதியரசர்
- மாண்புமிகு, மேதகு அதிமேதகு - "அதி மேன்மை தகுந்த" என்பது இதன் விரிவு ஆகும். இதனை அந்நாட்டு சனாதிபதியை அழைக்க அவரின் பெயருக்கு முன்னால் இட்டு அழைப்பதுண்டு.
- தமிழகத்தில் மாகராட்சியின் மேயர்கள் "வணக்கத்திற்குரிய" என்னும் மதிப்புச்சொல்லால் அழைக்கப்பட்டனர் தற்போதைய அரசாணையின் வாயிலாக மாண்புமிகு என்று அழைக்கப்பெறுகின்றனர்.[1]
அமைப்புகள் சார் மரியாதைத் தலைப்புகள்
தொகு- அரிமா: அரிமா அமைப்பின் உறுப்பினர்கள் தம்மைக் குறிப்பிடும் போது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-15. பார்க்கப்பட்ட நாள் 2015-09-30.