மலேசியப் பொதுத் தேர்தல், 1974


மலேசியப் பொதுத் தேர்தல், 1974 (ஆங்கிலம்: 1974 Malaysian General Election; மலாய்: Pilihan raya umum Malaysia 1974) என்பது 1974 ஆகஸ்டு மாதம் 24-ஆம் திகதி தொடங்கி 1974 செப்டம்பர் மாதம் 14-ஆம் திகதி வரையில், மலேசியாவில் நடைபெற்ற 4-ஆவது பொது தேர்தலைக் குறிப்பிடுவதாகும். மலேசியாவின் அப்போதைய 154 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவுகள் நடைபெற்றன.

மலேசிய பொதுத் தேர்தல், 1974

← 1969 24 ஆகஸ்டு - 14 செப்டம்பர் 1974 1978 →

மலேசிய மக்களவையின் 154 இடங்கள்
அதிகபட்சமாக 78 தொகுதிகள் தேவைப்படுகிறது
பதிவு செய்த வாக்காளர்கள்4,017,266
வாக்களித்தோர்75.00%
  First party Second party Third party
  SNAP
தலைவர் அப்துல் ரசாக் லிம் கிட் சியாங் ஜேம்ஸ் ஓங்
கட்சி
பாரிசான் நேசனல்

ஜசெக

சரவாக் தேசியக் கட்சி
முந்தைய
தேர்தல்
82.35%, 121 இடங்கள் 11.96%, 13 இடங்கள் 2.70%, 9 இடங்கள்
வென்ற
தொகுதிகள்
135 9 9
மாற்றம் Increase 14 4
மொத்த வாக்குகள் 1,287,400 387,845 117,566
விழுக்காடு 60.81% 18.32% 5.55%
மாற்றம் 21.54pp Increase6.36pp Increase2.85pp

தொகுதி வாரியாக முடிவுகள்

முந்தைய பிரதமர்

அப்துல் ரசாக் உசேன்
பாரிசான் நேசனல்

பிரதமர்-அமர்வு

அப்துல் ரசாக் உசேன்
பாரிசான் நேசனல்

ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு மக்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தது. அதே நாளில் மலேசியாவின் 11 மாநிலங்களில் உள்ள 360 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் மலேசிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றன. சபா மாநிலத்தில் மட்டும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவில்லை.

இந்தத் தேர்தலில் அம்னோ தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி, மொத்த 154 இடங்களில் 135 இடங்களை வென்றது. பாரிசான் நேசனல் கூட்டணிக்கு கிடைத்த வாக்குப்பதிவு 60.81%.[1]

பொது

தொகு

1970-இல் துன் அப்துல் ரசாக் உசேன், பிரதமராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து அவர் சந்தித்த முதல் மற்றும் ஒரே பொதுத் தேர்தல் இதுவாகும். அத்துடன், இந்தத் தேர்தலில் மலேசிய கூட்டணி கட்சிக்கு (Alliance Party) பதிலாக புதிய பாரிசான் நேசனல் (Barisan Nasional) அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டது. பாரிசான் நேசனல் கூட்டணியில் மலேசிய இசுலாமிய கட்சி; கெராக்கான்; மக்கள் முற்போக்கு கட்சி; ஆகியவை இணைந்து கொண்டன.

1974 ஆம் ஆண்டு சூலை 31-ஆம் திகதி மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், மலேசிய தேர்தல் ஆணையம் 1974-ஆம் ஆண்டு ஆகஸ்டு 8-ஆம் திகதியை வேட்புமனு நாளாகவும், ஆகஸ்டு 24-ஆம் திகதியை வாக்களிப்பு நாளாகவும் நிர்ணயித்தது. 47 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றனர். எனவே இந்தத் தொகுதிகளைச் சேர்ந்த 1,060,871 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. மற்றும் 88 பாரிசான் நேசனல் கூட்டணி உறுப்பினர்கள் பின்னர் வெற்றி பெற்றனர். 1974-ஆம் ஆண்டில் தீபகற்ப மலேசியாவில் 10 நாடாளுமன்றத் தொகுதிகள் கூடுதலாக உருவாக்கப்பட்டன.

மலேசியப் பொதுத் தேர்தல்

தொகு

மலேசியப் பொதுத் தேர்தல் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. தேசியத் தேர்தல் ஒரு வகை. மாநிலத் தேர்தல் மற்றொரு வகை. மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காகத் தேசியப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.

நாடாளுமன்றத்தின் மக்களவையை டேவான் ராக்யாட் என்று அழைக்கிறார்கள். மலேசிய மாநிலங்களின் சட்ட மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக, மாநில அளவிலான மாநிலத் தேர்தல் நடைபெறுகிறது.[2]

தேசிய அளவில் அரசாங்கத்தை நிர்வாகம் செய்யும் தலைவரை மலேசியப் பிரதமர் அல்லது மலேசியப் பிரதம மந்திரி என்று அழைக்கிறார்கள். மாநிலச் சட்டப் பேரவைகள் அல்லது மாநிலச் சட்டமன்றங்கள் கலைக்கப்படுவதற்கு, மத்திய அரசாங்கத்தின் அனுமதி தேவை இல்லை. மாநிலச் சட்டமன்றங்கள் தனிச்சையாக இயங்கக் கூடியவை. அதனால், மாநில சுல்தான்களின் அனுமதியுடன் அவை கலைக்கப்பட முடியும்.[3]

மலேசிய நாடாளுமன்றம்

தொகு

மலேசிய நாடாளுமன்றம், மக்களவை; மேலவை என இரு அவைகளைக் கொண்டது. மக்களவை 222 உறுப்பினர்களைக் கொண்டது. ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்து எடுக்கப்படுகிறார். மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி வரையறுக்கப்படுகிறது. மக்களவையில் பெரும்பான்மை பெற்ற ஓர் அரசியல் கட்சி மத்திய அரசாங்கத்தை நிர்வாகம் செய்கிறது.

ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பது சட்ட அரசியல் அமைப்பு விதியாகும். இருப்பினும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே, மலேசிய மாமன்னரின் அனுமதியுடன் மலேசியப் பிரதமர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட இரண்டே மாதங்களில், மேற்கு மலேசியாவில் பொதுத் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். கிழக்கு மலேசியாவில் மூன்று மாதங்களில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தேர்தல் முடிவுகள்

தொகு
கட்சி அல்லது கூட்டணிவாக்குகள்%இருக்கைகள்+/–
பாரிசான் நேசனல்அம்னோ12,87,40060.8162+10
மலேசிய சீனர் சங்கம்19+6
மலேசிய இசுலாமிய கட்சி13+1
ஐக்கிய சபா தேசிய அமைப்பு130
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி8New
சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி7+2
மலேசிய மக்கள் இயக்கக் கட்சி5–3
மலேசிய இந்திய காங்கிரசு4+2
சபா சீனர் சங்கம்30
மக்கள் முற்போக்கு கட்சி1–3
மொத்தம்135+14
ஜனநாயக செயல் கட்சி3,87,84518.329–4
சரவாக் தேசியக் கட்சி1,17,5665.5590
மலேசிய சமூக நீதிக் கட்சி1,05,7184.991New
மலேசிய மக்கள் கட்சி84,2063.9800
தாயக உணர்வு ஒன்றியம்8,6230.410New
சுதந்திர மக்கள் முன்னேற்றக் கட்சி1,3560.060New
சுயேச்சைகள்1,24,2025.870–1
மொத்தம்21,16,916100.00154+10
செல்லுபடியான வாக்குகள்21,16,91695.48
செல்லாத/வெற்று வாக்குகள்1,00,2694.52
மொத்த வாக்குகள்22,17,185100.00
பதிவான வாக்குகள்29,56,39575.00
மூலம்: Nohlen et al., IPU

மேற்கோள்கள்

தொகு
  1. Dieter Nohlen, Florian Grotz & Christof Hartmann (2001) Elections in Asia: A data handbook, Volume II, p152 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-924959-8
  2. Rahman, Rashid A. (1994). The Conduct of Elections in Malaysia, p. 10. Kuala Lumpur: Berita Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-969-331-7.
  3. Chow, Kum Hor (10 August 2005). "'Third government' is ratepayers' bugbear". New Straits Times. 

வெளி இணைப்புகள்

தொகு