மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள்

1896-ஆம் தொடங்கி 1946-ஆம் ஆண்டு வரையில் தீபகற்ப மலேசியாவின் சிலாங்கூர், பேராக், நெகிரி செம்பிலான், பக

மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் (ஆங்கிலம்: Federated Malay States (FMS); மலாய் மொழி: Negeri-negeri Melayu Bersekutu; சீனம்: 马来联邦; ஜாவி:نݢري٢ ملايو برسکوتو) என்பது 1896-ஆம் தொடங்கி 1946-ஆம் ஆண்டு வரையில், தீபகற்ப மலேசியாவின் சிலாங்கூர், பேராக், நெகிரி செம்பிலான், பகாங் மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும். அந்த நான்கு மாநிலங்களும் பிரித்தானிய மலாயா நிர்வாகத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட மாநிலங்களாக இருந்தன.

மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள்
Federated Malay States
1895–1942
1945–1946
கொடி of Malaysia
கொடி
சின்னம் of Malaysia
சின்னம்
குறிக்கோள்: கடவுளின் பாதுகாப்பின் கீழ்
Dipelihara Allah
Under God's Protection
1922-இல் மலாயா:
  மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள்
  மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள்
  நீரிணை குடியேற்றங்கள்
நிலைஐக்கிய இராச்சியத்தின் காப்பரசு
தலைநகரம்கோலாலம்பூர்1
பேசப்படும் மொழிகள்
சமயம்
இசுலாம்
அரசி 
• 1895–1901 (முதல்)
விக்டோரியா
• 1936–1946 (கடைசி)
ஜோர்ஜ் VI
தலைமை ஆளுநர்
(Resident General)
 
• 1896–1901 (முதல்)
பிராங்க் சுவெட்டன்காம்
(Frank Swettenham)
• 1939-1942 (கடைசி)
இயூ பிரேசர்
(Hugh Fraser)
சட்டமன்றம்கூட்டரசு சட்டமன்றம்
(Federal Legislative Council)
வரலாற்று சகாப்தம்பிரித்தானிய பேரரசு
• கூட்டமைப்பு
1895
• கூட்டமைப்பு உடன்படிக்கை
1 சூலை 1896
1942
• ஜப்பானியர் சரண்
15 ஆகஸ்டு 1945
• மலாயா ஒன்றியம்
31 மார்ச் 1946
மக்கள் தொகை
• 1933[1]
1,597,700
நாணயம்நீரிணை டாலர் 1939 வரை
(Straits Dollar)
மலாயா டாலர் 1953 வரை
(Malayan Dollar) 1953
முந்தையது
பின்னையது
சிலாங்கூர்
பேராக்
நெகிரி செம்பிலான்
பகாங்
மலாயாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்புa
பிரித்தானிய இராணுவ நிர்வாகம் (மலாயா)
மலாயா ஒன்றியம்
தற்போதைய பகுதிகள்மலேசியா
1 Also the state capital of Selangor
² Malay using Jawi (Arabic) script
³ Later Chief Secretaries to the Government and Federal Secretaries

1946-ஆம் ஆண்டில், அந்த நான்கு மாநிலங்களுடன், மலாக்கா; பினாங்கு நீரிணை குடியேற்ற மாநிலங்களும் (Straits Settlements); மற்றும் மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்களும் (Unfederated Malay States) ஒன்றாக இணைக்கப்பட்டு மலாயா ஒன்றியம் (Malayan Union) எனும் ஓர் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மலாயா ஒன்றியம் எனும் அந்த அமைப்பு மலாயா கூட்டமைப்பு ஆனது. 1957-ஆம் ஆண்டில் மலாயா சுதந்திரம் அடைந்தது. இறுதியாக 1963-ஆம் ஆண்டில், வடக்கு போர்னியோ எனும் இன்றைய சபா மாநிலமும் சரவாக்; சிங்கப்பூர் மாநிலங்களும் இணைந்து மலேசியா எனும் பெரும் கூட்டமைப்பாக மாற்றம் கண்டன.

பொது

தொகு

மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் உண்மையான நிர்வாக அதிகாரங்கள் நான்கு உள்ளூர் பிரித்தானிய ஆளுநர்களிடமும் (British Residents); மற்றும் பிரித்தானிய தலைமை ஆளுநரிடமும் (Resident-General) மட்டுமே இருந்தன.

உள்ளூர் சுல்தான்களின் அதிகாரங்கள் "மலாய் மதம் மற்றும் பழக்கவழக்கங்களைத் தொடும்" (Malay Religion and Customs) விசயங்களில் மட்டுமே இருந்தன. அந்த வகையில் உள்ளூர் சுல்தான்களின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டன.

இரண்டாம் உலக போரில், மலாயா கூட்டமைப்பு மாநிலங்களும்; மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்களும்; நீரிணை குடியேற்ற மாநிலங்களும் ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன.

ஜப்பான் சரண் அடைந்து மலாயா விடுதலைக்குப் பிறகு, மலாயா கூட்டமைப்பு வடிவத்திற்குப் பதிலாக நடுவண் அரசு நிர்வாகம் (Federal Form of Government) அமல்படுத்தப் பட்டது.

விளக்கம்

தொகு

மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள்

தொகு
  1. சிலாங்கூர்
  2. பேராக்
  3. நெகிரி செம்பிலான்
  4. பகாங்

மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள்

தொகு
  1. ஜொகூர்
  2. கெடா
  3. கிளாந்தான்
  4. பெர்லிஸ்
  5. திராங்கானு

நீரிணைக் குடியேற்ற மாநிலங்கள்

தொகு
  1. மலாக்கா
  2. பினாங்கு
  3. சிங்கப்பூர்

வரலாறு

தொகு

உருவாக்கம்

தொகு

1874 சனவரி 20-ஆம் தேதி, நீரிணை குடியேற்றங்களின் ஆளுநரான சர் ஆண்ட்ரூ கிளார்க் (Sir Andrew Clarke), பேராக் சுல்தானுடன், பாங்கோர் உடன்படிக்கையை (Treaty of Pangkor 1874) செய்து கொண்டார்.

அதன் மூலம் ஆளுநர் (ரெசிடென்ட்; Resident) எனும் ஒரு பிரித்தானிய அதிகாரிக்கு ஒரு பொருத்தமான குடியிருப்பை வழங்குவதற்குப் பேராக் சுல்தான் (Sultan of Perak) ஒப்புக் கொண்டார்.

பிரித்தானிய ஆளுநர் முறை

தொகு
 
1906-இல் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களுக்காக வெளியிடப்பட்ட அஞ்சல் தலை

பேராக் மாநிலத்தில், மலாய் மதம் மற்றும் கலாசாரப் பழக்கவழக்கங்களைத் தொடும் விசயங்களைத் தவிர (Malay Religion and Customs) மற்ற எல்லா விசயங்களிலும் பிரித்தானிய அதிகாரியின் ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்படவும் பேராக் சுல்தான் ஒப்புக் கொண்டார்.

இதே ஆளுநர் (ரெசிடென்ட்) முறை அதே 1874-ஆம் ஆண்டு சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களிலும் அமல் செய்யப்பட்டது. 1888-இல் பகாங்கிற்கும் நீட்டிக்கப்பட்டது.[2]

உண்மையான அதிகாரங்கள்

தொகு

நிர்வாகத் திறனை அதிக அளவில் மேம்படுத்துவதற்காக, சிலாங்கூர், பேராக், நெகிரி செம்பிலான், பகாங் ஆகிய நான்கு மாநிலங்களும் 1895-1896-இல் மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் (Federated Malay States) என ஒன்றிணைக்கப்பட்டன.

இந்த அமைப்பு மிகவும் மையப்படுத்தப்பட்டது. உண்மையான அதிகாரங்கள் பிரித்தானிய அரசாங்கத்தின் ஆளுநர்களின் கைகளில் இருந்தன. முதலில் தலைமைப் பிரித்தானிய ஆளுநரிடம் (Resident-General) அந்த அதிகாரம் இருந்தது. பின்னர் பிரித்தானிய அரசாங்கத்தின் தலைமைச் செயலாளரிடம் (Chief Secretary of the British Government) ஒட்டு மொத்த கூட்டமைப்பு அதிகாரங்களும் போய்ச் சேர்ந்தன.[2]

மலாயா கூட்டரசு மன்றம்

தொகு
 
மலாயா கூட்டமைப்பு மாநிலங்களுக்கான தலைமைச் செயலாளரின் கொடி

மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் கூட்டமைப்பை நிர்வகிப்பதற்காக 1898-ஆம் ஆண்டு பிரித்தானியர்கள் கூட்டரசுக் கழகம் எனும் கூட்டரசு மன்றத்தை (Federal Council) நிறுவினார்கள்.

இந்த கூட்டரசு மன்றத்திற்கு நீரிணைக் குடியேற்ற மாநிலங்களின் உயர் ஆணையர் (High Commissioner; The Governor of the Straits Settlement) தலைமை பொறுப்பை ஏற்றார். இவருக்கு உதவியாக தலைமைப் பிரித்தானிய ஆளுநர்; மாநிலச் சுல்தான்கள், நான்கு மாநில பிரித்தானிய ஆளுநர்கள் மற்றும் நான்கு நியமன உறுப்பினர்கள் (Nominated Unofficial Members) செயல்பட்டனர்.[3]

டிசம்பர் 8, 1941-இல் ஜப்பானியர்கள் மலாயாவை ஆக்கிரமிக்கும் வரை இந்த மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் கூட்டமைப்பு முறை அமலில் இருந்தது. அதன் பின்னர் மலாயா ஒன்றியம் அமைப்பில் இந்தக் கூட்டமைப்பு முறை இணைக்கப்பட்டது. [4]

மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் நிர்வாகப் பிரிவுகள்

தொகு
 
1939-இல் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் நிர்வாகப் பிரிவுகள்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Annual report of the Medical Department / Federated Malay States". பார்க்கப்பட்ட நாள் 2 September 2021.
  2. 2.0 2.1 Simon C. Smith, "Rulers and Residents: British Relations with the Aden Protectorate, 1937–59", Middle Eastern Studies, Vol. 31, No. 3 (Jul., 1995), p. 511.
  3. "Samuel Joyce THOMAS". homepages.ihug.co.nz. Archived from the original on 13 அக்டோபர் 2015.
  4. "SIR ROGER HALL NEW F.M.S. CHIEF JUSTICE". The Straits Times. 6 September 1937. p. 12.

குறிப்புகள்

தொகு

மேலும் காண்க

தொகு