நீரிணை டாலர்
நீரிணை டாலர் (ஆங்கிலம்: Straits Dollar; மலாய் மொழி: Dolar Selat); என்பது 1898-ஆம் ஆண்டில் இருந்து 1939-ஆம் ஆண்டு வரை தென்கிழக்காசியாவின் நீரிணை குடியேற்றங்களில் (Straits Settlements) பயன்படுத்தப்பட்ட பணத் தாள் (Currency) ஆகும்.[1]
Dolar Selat | |
---|---|
நீரிணை டாலர் (1935) | |
அலகு | |
குறியீடு | $ |
மதிப்பு | |
துணை அலகு | |
1⁄100 | செண்டு |
வங்கித்தாள் | 5, 10, 20, 25, 50 செண்டுகள், 1, 5, 10, 25, 50, 100, 1000 டாலர்கள் |
Coins | 1⁄4, 1⁄2, 1, 5, 10, 20, 50 செண்டுகள் |
மக்கள்தொகையியல் | |
பயனர்(கள்) | கூட்டமைப்பு மாநிலங்கள் சரவாக் இராச்சியம் புரூணை வடக்கு போர்னியோ |
வெளியீடு | |
நடுவண் வங்கி | நாணய ஆணையர்கள் வாரியம் |
This infobox shows the latest status before this currency was rendered obsolete. |
நீரிணைக் குடியேற்றங்கள் என்பது 1826-ஆம் ஆண்டில், தென்கிழக்கு ஆசியாவில், மலாக்கா நீரிணையை ஒட்டி உருவாக்கப்பட்ட பிரித்தானியக் குடியேற்றப் பகுதிகள்; பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர் மாநிலங்களை உள்ளடக்கியவை.
நீரிணைக் குடியேற்றங்களின் பயன்பாட்டிற்காக இந்த நாணயமுறை கொண்டு வரப்பட்டாலும்; மற்ற அண்டைய பிராந்தியங்களான மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் (Federated Malay States) (FMS), மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள் (Unfederated Malay States), சரவாக் இராச்சியம் (Raj of Sarawak), புரூணை (Kingdom of Brunei) மற்றும் பிரித்தானிய வடக்கு போர்னியோ (சபா) (British North Borneo) ஆகிய நிலப்பகுதிகளும் பயன்படுத்தின.
வரலாறு
தொகுபத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், கிழக்கிந்தியத் தீவுகளில் (Spanish East Indies) மிகவும் பொதுவான நாணயமாக எசுப்பானிய டாலர் (Spanish Dollar) இருந்து வந்தது. பிலிப்பீன்சு நாட்டில் பயன்படுத்தப்பட்ட எசுப்பானிய டாலர், [[தென் அமெரிக்கா|தென் அமெரிக்கக் கண்டத்தின் பெரு; வட மெரிக்காவின் மெக்சிகோ நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டன.
மலாயா உள்நாட்டில் வெளியிடப்பட்ட நாணயங்களில் கிளாந்தான் மாநிலத்தில் கிளாந்தான் கெப்பிங் (Kelantan Keping) திராங்கானு மாநிலத்தில் திராங்கானு கெப்பிங் (Trengganu Keping) மற்றும் பினாங்கு மாநிலத்தில் பினாங்கு டாலர் ஆகியவை அடங்கும்.
இந்திய ரூபாய்
தொகு1826-ஆம் ஆண்டில், இந்திய ரூபாய் (Indian Rupee), நீரிணைக் குடியேற்றப் பகுதிகளின் ஒரே அதிகாரப்பூர்வ நாணயமாக மாற்றப்பட்டது. அப்போது நீரிணைக் குடியேற்றங்கள் இந்தியாவின் ஒரு பகுதியாக நிர்வகிக்கப்பட்டன. அதனால், இந்திய ரூபாய் பயன்படுத்தப்பட்டது.
இருப்பினும், இந்திய ரூபாய் வர்த்தகத்திற்கு பொருந்தி வரவில்லை. இந்தியாவில் எசுப்பானியர்களின் ஆதிக்கம் குறைவாக இருந்ததே முக்கியக் காரணம் என்றும் அறியப்படுகிறது. பின்னர் கிழக்கிந்தியத் தீவுகளில் எசுப்பானிய டாலர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டன.
நீரிணை செப்பு நாணயங்கள்
தொகு1844-ஆம் ஆண்டில் 100 செண்டுகள் = 1 டாலர் என்ற முறையைப் பயன்படுத்தி, நீரிணைக் குடியேற்றங்களின் பயன்பாட்டிற்காக செப்பு நாணயங்கள் (Copper Coinage) அங்கீகரிக்கப்பட்டன. அந்த வகையில் 1 நீரிணை டாலரின் மதிப்பு, ஓர் எசுப்பானிய டாலர் (Spanish Dollar); அல்லது ஒரு பிலிப்பீன்சு பெசோ (Philippine Peso) அல்லது ஒரு மெக்சிகோ பெசோவுக்கு (Mexican Peso) சமமான நிலையில் இருந்தது.[2]
அந்தக் காலக்கட்டத்தில் பிலிப்பீன்சு, மெக்சிகோ, பெரு ஆகிய நாடுகள் எசுப்பானிய காலனித்துவ பேரரசின் (Spanish Colonial Empire) கீழ் இருந்தன. 1847 சூன் மாதம் 1-ஆம் தேதி நீரிணை செப்பு நாணயங்கள் நீரிணைக் குடியேற்றங்களில் அறிவிக்கப்பட்டது.[3]
1867-ஆம் ஆண்டில், நீரிணைக் குடியேற்றங்களின் நிர்வாகம் இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டு, நீரிணைக் குடியேற்ற பகுதிகளுக்கு என நீரிணை டாலர் அறிமுகம் செய்யப்பட்டது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Linzmayer, Owen (2013). "Straits Settlements". The Banknote Book. San Francisco, CA: www.BanknoteNews.com.
- ↑ Pridmore, F. (1965). The Coins of the British Commonwealth of Nations Part 2 Asian Territories. Spink & Son Ltd. p. 181.
- ↑ Pridmore, F. (1965). The Coins of the British Commonwealth of Nations Part 2 Asian Territories. Spink & Son Ltd. p. 180.
- ↑ Pridmore, F. (1965). The Coins of the British Commonwealth of Nations Part 2 Asian Territories. Spink & Son Ltd. p. 186.
வெளி இணைப்புகள்
தொகுமேலும் காண்க
தொகு