எசுப்பானியப் பேரரசு

எசுப்பானியப் பேரரசு (Spanish Empire) (எசுப்பானியம்: Imperio Español) என்பது ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஓசியானியா ஆகிய உலகப்பகுதிகளில், எசுப்பானியா நேரடியாக ஆட்சிசெய்த பிரதேசங்களையும் குடியேற்றங்களையும் உள்ளடக்கிய நிலப்பரப்பு ஆகும்.

எசுப்பானியப் பேரரசு (Spanish Empire)
Imperio Español
கொடி of எசுப்பானியப் பேரரசு
கொடி
ஒருகாலத்தில் எசுப்பானியப் பேரரசின் பிரதேசங்களாக இருந்த உலகப் பகுதிகள்.
ஒருகாலத்தில் எசுப்பானியப் பேரரசின் பிரதேசங்களாக இருந்த உலகப் பகுதிகள்.
  ஐபீரிய ஒன்றியக் காலத்தில் (1581–1640) போர்த்துகீசிய பிரதேசங்களாக இருந்த பகுதிகள்.
  ஊட்ரெக்ட்-பாடென் ஒப்பந்தங்கள் (1713-1714) ஏற்படுமுன் எசுப்பானியா வசம் இருந்த பிரதேசங்கள்.
  எசுப்பானிய-அமெரிக்க சுதந்திரப் போர்கள் (1808–1833) நிகழ்ந்ததற்கு முன்னால் எசுப்பானியாவின் வசம் இருந்த பிரதேசங்கள்.
  எசுப்பானிய-அமெரிக்கப் போர் (1898–1899) நிகழ்ந்ததற்கு முன்னால்.எசுப்பானியாவின் வசம்.இருந்த பிரதேசங்கள்.
  எசுப்பானியாவின்.குடியேற்ற ஆதிக்கத்திலிருந்து 1956-1976 காலகட்டத்தில் விடுதலை அடைந்த ஆப்பிரிக்க பிரதேசங்கள்.
  இன்று எசுப்பானியாவின் நிர்வாகத்துக்கு உட்பட்ட பிரதேசங்கள்.

எசுப்பானியப் பேரரசு கண்டுபிடிப்புக் காலத்திலிருந்து தொடங்கியது. எனவே, உலகளாவிய விரிவுகொண்ட முதல் பேரரசுகளுள் ஒன்றாக அது திகழ்ந்தது. ஆப்சுபர்க்கு (Habsburg) வம்ச அரசர்களின் ஆட்சியின்கீழ் எசுப்பானியாவின் உலகளாவிய அதிகாரம் தன் உச்சக்கட்டத்தை எட்டியது.[1] எசுப்பானியா ஓர் உலக வல்லரசாக மாறியது.

எசுப்பானியா 15ஆம் நூற்றாண்டில் பேரரசாக மாறத் தொடங்கியதிலிருந்து, நவீன உலக விரிவாண்மையும் ஐந்து நூற்றாண்டுகளாக ஐரோப்பா உலக அளவில் கோலோச்சிய செயல்பாடும் ஆரம்பித்தது. எசுப்பானியா 1492இல் தொடங்கி அமெரிக்கா நோக்கி கடற்பயணங்களை மேற்கொண்டது. அதிலிருந்து சுமார் ஆறு நூற்றாண்டுகளாக எசுப்பானியாவின் ஆதிக்கம் ஐரோப்பிய எல்லைகளைத் தாண்டிச் சென்றது. எசுப்பானியாவின் குடியேற்ற ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஆப்பிரிக்க பிரதேசங்கள் 1970களில் சுதந்திரம் அடைந்தன. அதுவரையிலும் எசுப்பானியாவின் பேராண்மை உலகளவில் நீடித்தது.

எசுப்பானியாவின் பகுதிகள் ஒன்றுபடுதல் தொகு

எசுப்பானியாவில் நிலவிய மாகாண ஆட்சிகளுள் கஸ்தீலியா பிரதேசமும் அரகோன் பிரதேசமும் முதன்மைபெற்றிருந்தன. கஸ்தீலியாவின் ஆட்சியைப் பிடிக்க 1475-1479 காலகட்டத்தில் நிகழ்ந்த போரில் இசபெல்லா அணி வெற்றிபெற்றது. அதை எதிர்த்த ஹுவானா அணி தோல்வியுற்றது. இசபெல்லா ஏற்கனவே அரகோன் பிரதேச இளவரசரான பெர்டினான்டு என்பவரை மணந்திருந்ததால், கஸ்தீலியாவும் அரகோனும் ஒரே அரசர்களின் கீழ் வரலாயின. இசபெல்லாவும் பெர்டினான்டும் "கத்தோலிக்க அரசர்கள்" (Catholic Monarchs- எசுப்பானியம்: los Reyes Catolicos) என்னும் பெயராலும் அழைக்கப்படுகிறார்கள்.

முசுலீம் ஆட்சி முடிவுறல் தொகு

1472இல், எசுப்பானிய அரசர்களான இசபெல்லா-பெர்டினான்டு தம்பதியர் ஆட்சியின்போது கிரனாடா பிரதேசத்தில் நிலவிய முசுலீம் ஆட்சி முறியடிக்கப்பட்டு, கிரனாடா பகுதி கஸ்தீலியா அரசின் கீழ் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு, எட்டு நூற்றாண்டுகளாக எசுப்பானியாவிலும் போர்த்துகல் பகுதிகளிலும் நிலவிய முசுலீம் ஆட்சி முற்றிலுமாக முடிவுற்றது. இது "ஆட்சி மீட்பு" (Reconquest - எசுப்பானியம்: Reconquista) என அழைக்கப்படுகிறது.

கிறிஸ்டோபர் கொலம்பஸ் கடல் பயணம் மேற்கொள்ளல் தொகு

அதே 1472ஆம் ஆண்டில் எசுப்பானிய அரசர்களான இசபெல்லா-பெர்டினான்டு தம்பதியர் ஆதரவோடு, கிறிஸ்டோபர் கொலம்பஸ் அட்லான்டிக் பெருங்கடலில் மேற்குத் திசை நோக்கிப் பயணம் சென்று இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடிக்க முயன்றார். ஆனால், இந்தியாவை வந்தடைவதற்குப் பதிலாக அமெரிக்கா என்னும் புதியதொரு பெருநிலப்பகுதியைக் கண்டுபிடித்தார்.

அதிலிருந்து ஐரோப்பா, குறிப்பாக எசுப்பானியா, அமெரிக்காக்களில் குடியேற்ற ஆதிக்கம் ஏற்படுத்தத் தொடங்கியது.

 
அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் தமது புரவலர்களான எசுப்பானிய "கத்தோலிக்க அரசர் தம்பதிகள்" இசபெல்லாவுக்கும் பெர்டினான்டுக்கும் மரியாதை செலுத்துகிறார்.
 
இத்தாலியில் பவீயா நகரில் நிகழ்ந்த போர் (1525)
 
எசுப்பானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் (1559) சிறப்பிக்கப்படுகிறது
 
ரோக்ருவா நகரில் நிகழ்ந்த சண்டை (1643). இதிலிருந்து எசுப்பானியாவின் சிறப்பு மங்கத்தொடங்கியது.
 
பீசண்டு தீவில் எசுப்பானிய மன்னர் நான்காம் பிலிப்பு, பிரான்சு மன்னர் பதினான்காம் லூயி ஆகியோர் சந்தித்தல் (1660, சூலை 7).
 
லெப்பாண்டோ சண்டை (1571). மத்தியதரைக் கடலில் கோலோச்சிய ஓட்டோமான் பேரரசின் கடல்படை வலிமை இச்சண்டையில் முறியடிக்கப்பட்டது.
 
காயமார்க்கா சண்டையில் எசுப்பானியாவும் இன்கா தொல்குடி அமெரிக்கர்களும் மோதியபோது, இன்கா மன்னர் அத்தகுவால்ப்பா பல்லக்கில் வர, எசுப்பானியப் படை அவரைச் சூழ்ந்துகொள்ளல்.
 
மெக்சிகோவில் குடியேற்ற ஆதிக்க காலத்தில் எசுப்பானியர் கட்டிய அரச மாளிகை. இப்போது மெக்சிகோ நாட்டு தேசிய மாளிகையாக உள்ளது.
 
பஸ்ஸாரோ முனை என்னும் இடத்தில் 1718, ஆகத்து 11ஆம் நாள் நிகழ்ந்த சண்டை.
 
பெரு நாட்டு லீமா நகரில் உள்ள கத்தோலிக்க பெருங்கோவில். இது எசுப்பானியாரால் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

ஆதாரங்கள் தொகு

குறிப்புகள் தொகு


நூற்பட்டியல் தொகு

 • Anderson, James Maxwell (2000), The History of Portugal, Westport, Connecticut: Greenwood, ISBN 978-0-313-31106-2.
 • Archer, Christon; et al. (2002), World History of Warfare, Lincoln: University of Nebraska Press, ISBN 978-0-8032-4423-8 {{citation}}: Explicit use of et al. in: |first= (help).
 • Brown, Jonathan; Elliott, John Huxtable (1980), A Palace for a King. The Buen Retiro and the Court of Philip IV, New Haven: Yale University Press, ISBN 978-0-300-02507-1.
 • Kamen, Henry (2003), Empire: How Spain Became a World Power, 1492–1763, New York: HarperCollins, ISBN 0-06-093264-3.
 • Lach, Donald F.; Van Kley, Edwin J. (1994), Asia in the Making of Europe, Chicago: University of Chicago Press, ISBN 978-0-226-46734-4.
 • Lockhart, James; Schwartz, Stuart B. (1983), Early Latin America: A History of Colonial Spanish America and Brazil, Cambridge: Cambridge University Press, ISBN 978-0-521-29929-9.

மேல் ஆய்வுக்கு தொகு

 • Armstrong, Edward (1902). The emperor Charles V. New York: The Macmillan Company
 • Black, Jeremy (1996). The Cambridge illustrated atlas of warfare: Renaissance to revolution. Cambridge: Cambridge University Press. ISBN 0-521-47033-1
 • Braudel, Fernand (1972). The Mediterranean and the Mediterranean World in the Age of Philip II, trans. Siân Reynolds. New York: Harper & Row. ISBN 0-06-090566-2
 • Fernand Braudel, The Perspective of the World (part iii of Civilization and Capitalism) 1979, translated 1985.
 • Brown, Jonathan (1998). Painting in Spain : 1500–1700. New Haven: Yale University Press. ISBN 0-300-06472-1
 • Dominguez Ortiz, Antonio (1971). The golden age of Spain, 1516–1659. Oxford: Oxford University Press. ISBN 0-297-00405-0
 • Edwards, John (2000). The Spain of the Catholic Monarchs, 1474–1520. New York: Blackwell. ISBN 0-631-16165-1
 • Harman, Alec (1969). Late Renaissance and Baroque music. New York: Schocken Books.
 • Kamen, Henry (1998). Philip of Spain. New Haven and London: Yale University Press. ISBN 0-300-07800-5
 • Kamen, Henry (2005). Spain 1469–1714. A Society of Conflict (3rd ed.) London and New York: Pearson Longman. ISBN 0-582-78464-6
 • Parker, Geoffrey (1997). The Thirty Years' War (2nd ed.). New York: Routledge. ISBN 0-415-12883-8
 • Parker, Geoffrey (1972). The Army of flanders and the Spanish road, 1567–1659; the logistics of Spanish victory and defeat in the Low Countries' Wars.. Cambridge: Cambridge University Press. ISBN 0-521-08462-8
 • Parker, Geoffrey (1977). The Dutch revolt. Cambridge: Cambridge University Press. ISBN 0-8014-1136-X
 • Parker, Geoffrey (1978). Philip II. Boston: Little, Brown. ISBN 0-316-69080-5
 • Parker, Geoffrey (1997). The general crisis of the seventeenth century. New York: Routledge. ISBN 0-415-16518-0
 • Ramsey, John Fraser (1973) Spain: the rise of the first world power. University of Alabama Press. ISBN 0-8173-5704-1 9780817357047
 • Stradling, R. A. (1988). Philip IV and the government of Spain. Cambridge: Cambridge University Press. ISBN 0-521-32333-9
 • Thomas, Hugh (2004). Rivers of Gold: The Rise of the Spanish Empire 1490–1522 Weidenfeld & Nicolson. ISBN 0-297-64563-3
 • Thomas, Hugh (1997). The Slave Trade; The History of the Atlantic Slave Trade 1440–1870. London: Papermac. ISBN 0-333-73147-6
 • Various (1983). Historia de la literatura espanola. Barcelona: Editorial Ariel
 • Wright, Esmond, ed. (1984). History of the World, Part II: The last five hundred years (3rd ed.). New York: Hamlyn Publishing. ISBN 0-517-43644-2.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எசுப்பானியப்_பேரரசு&oldid=3861529" இலிருந்து மீள்விக்கப்பட்டது