மலேசிய உள்துறை அமைச்சர்

மலேசிய உள்துறை அமைச்சு

மலேசிய உள்துறை அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Home Affairs of Malaysia; மலாய்: Menteri Dalam Negeri Malaysia) என்பவர் மலேசிய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆவார்.

மலேசிய உள்துறை அமைச்சர்
Minister of Home Affairs of Malaysia
Menteri Dalam Negeri Malaysia
منتري دالم نڬري
மலேசிய அரசு
தற்போது
சைபுதீன் நசுத்தியோன் இசுமாயில்

திசம்பர் 3, 2022 (2022-12-03) முதல்
மலேசிய உள்துறை அமைச்சு
சுருக்கம்KDN
உறுப்பினர்மலேசிய அமைச்சரவை
அறிக்கைகள்மலேசிய நாடாளுமன்றம்
அலுவலகம்புத்ராஜெயா
நியமிப்பவர்மலேசிய பேரரசர்; (மலேசியப் பிரதமரின் பரிந்துரை)
உருவாக்கம்1955 (1955)
முதலாமவர்துங்கு அப்துல் ரகுமான்
இணையதளம்www.moha.gov.my

மலேசிய உள்துறை அமைச்சர் நிர்வகிக்கும் மலேசிய உள்துறை அமைச்சு என்பது மலேசியாவின் உள்துறையை நிர்வகிக்கும் மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயா மத்திய அரசாங்க நிர்வாக மையத்தில் (Federal Government Administrative Centre) உள்ளது.

சட்ட அமலாக்கம் (Law Enforcement), பொது பாதுகாப்பு (Public Security), பொது ஒழுங்கு முறை (Public Order), மக்கள் தொகை பதிவு ஆவணங்கள் (Population Registry) ஆகிய முக்கியமான பொறுப்புகளுக்கு இந்த அமைச்சு முதலிடம் வழங்குகிறது.[1]

அமைப்பு

தொகு
  • உள்துறை அமைச்சர்
    • துணை அமைச்சர்
    • இரண்டாவது துணை அமைச்சர்
      • பொதுச் செயலாளர்
        • பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
          • சட்ட ஆலோசகர் அலுவலகம்
          • உள் தணிக்கை பிரிவு
          • உத்திசார் திட்டமிடல் பிரிவு
          • நிறுமத் தொடர்புப் பிரிவு
          • ஒழுங்கமைவுப் பிரிவு
        • துணைப் பொதுச் செயலாளர் (கொள்கை மற்றும் அமலாக்கம்)
          • குடிவரவு விவகாரப் பிரிவு
          • தேசியப் பதிவு மற்றும் சங்கங்கள் பிரிவு
          • வெளிநாட்டுப் பணியாளர் மேலாண்மைப் பிரிவு
          • மலேசியாவின் பொதுப் பாதுகாப்பு நிறுவனம்
          • தேசிய உத்திசார் அலுவலகம்
          • ஆட்கடத்தல் எதிர்ப்பு பிரிவு
          • புலம்பெயர்ந்தோர் கடத்தல் எதிர்ப்புப் பிரிவு
          • பன்னாட்டு உறவுகள் பிரிவு
        • துணைப் பொதுச் செயலாளர் (பாதுகாப்பு)
          • திரைப்படத் தணிக்கை மற்றும் அமலாக்கப் பிரிவு
          • அச்சு வெளியீடு கட்டுப்பாட்டு பிரிவு
          • பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு பிரிவு
          • சிறைகள் பிரிவு
          • போதைப்பொருள் எதிர்ப்புப் பிரிவு
          • பொது பாதுகாப்புப் பிரிவு
          • தேசிய முக்கிய முடிவுகள் பகுதி பிரிவு
          • காவல்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவு
          • சிறைவிடுப்பு மன்றச் செயலகம்
          • குற்றவியல் தடுப்பு வாரியச் செயலகம்
          • பயங்கரவாதத் தடுப்பு வாரியச் செயலகம்
        • துணைப் பொதுச் செயலாளர் (மேலாண்மை)
          • மூத்த துணைச் செயலாளர் (மேலாண்மை)
            • மனித வள மேலாண்மை பிரிவு
            • தகவல் மேலாண்மை பிரிவு
            • மேலாண்மை சேவைகள் மற்றும் சொத்துப் பிரிவு
            • நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவைப் பிரிவு
            • காவல்துறை ஆணையச் செயலகம்
          • மூத்த துணைச் செயலாளர் (மேம்பாடு மற்றும் கொள்முதல்)
            • நிதிப் பிரிவு
            • கணக்குப் பிரிவு
            • கொள்முதல் பிரிவு
            • மேம்பாட்டுப் பிரிவு

அமைச்சர்களின் பட்டியல்

தொகு

உள்துறை அமைச்சர்கள்

தொகு

மலேசிய உள்துறை அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.
அரசியல் கட்சிகள்:

      கூட்டணி       பாரிசான்       பாக்காத்தான்       பெரிக்காத்தான்

தோற்றம் பெயர்
தொகுதி
கட்சி பதவி பதவி காலம் பிரதமர்
(அமைச்சரவை)
  சுலைமான் அப்துல் ரகுமான்
மூவார் செலாத்தான் தொகுதி
கூட்டணி (அம்னோ) உள்துறை மற்றும் நீதி அமைச்சர் 31 ஆகஸ்டு 1957 - 1959 துங்கு அப்துல் ரகுமான்
(I)
  லியோங் இயூ கோ
செனட்டர்
கூட்டணி (மசீச) 1959 - 12 சனவரி 1963 துங்கு அப்துல் ரகுமான்
(II)
  துன் டாக்டர் இசுமாயில்
ஜொகூர் தீமோர் தொகுதிr
கூட்டணி (அம்னோ) உள்துறை மற்றும் நீதி அமைச்சர் 1965 - 1 சூன் 1967 துங்கு அப்துல் ரகுமான்
(III)
  அப்துல் ரசாக் உசேன்
பெக்கான் மக்களவைத் தொகுதி
உள்துறை அமைச்சர் 1 சூன் 1967 - 20 மே 1969 துங்கு அப்துல் ரகுமான்
(III)
  துன் டாக்டர் இசுமாயில்
ஜொகூர் பாரு மக்களவைத் தொகுதி
20 மே 1969 - 2 ஆகஸ்டு 1973 துங்கு அப்துல் ரகுமான்
(IV)
அப்துல் ரசாக் உசேன்
(I)
  கசாலி சாபி
லிப்பிஸ் மக்களவைத் தொகுதி
பாரிசான் நேசனல் (அம்னோ) 13 ஆகஸ்டு 1973 - 16 சூலை 1981 அப்துல் ரசாக் உசேன்
(I • II)
உசேன் ஓன்
(I • II)
  மூசா ஈத்தாம்
லாபிஸ் மக்களவைத் தொகுதி
17 சூலை 1981 - 16 மார்ச் 1986 மகாதீர் முகமது
(I • II)
  மகாதீர் முகமது
குபாங் பாசு மக்களவைத் தொகுதி
17 மார்ச் 1986 - 10 சனவரி 1999 மகாதீர் முகமது
(II · III ·• IV · V)
  அப்துல்லா அகமது படாவி
கெப்பாலா பத்தாஸ் மக்களவைத் தொகுதி
14 சனவரி 1999 - 27 மார்ச் 2004 மகாதீர் முகமது
(V • VI)
அப்துல்லா அகமது படாவி
(I • II)
  அசுமி காலிட்
பாடாங் பெசார் மக்களவைத் தொகுதி
27 மார்ச் 2004 - 13 பிப்ரவரி 2006 அப்துல்லா அகமது படாவி
(II)
  ராட்சி செயிக் அகமட்
கங்கார் மக்களவைத் தொகுதி
14 பிப்ரவரி 2006 - 17 மார்ச் 2008 அப்துல்லா அகமது படாவி
(II)
  சையட் அமீட் அல்பார்
கோத்தா திங்கி மக்களவைத் தொகுதி
18 மார்ச் 2008 - 9 ஏப்ரல் 2009 அப்துல்லா அகமது படாவி
(III)
  இசாமுடின் உசேன்
செம்புரோங் மக்களவைத் தொகுதி
10 ஏப்ரல் 2009 - 20 ஏப்ரல் 2013 நஜீப் ரசாக்
(I)
  அகமத் சாகித் அமிடி
பாகன் டத்தோ மக்களவைத் தொகுதி
16 மே 2013 - 12 மே 2018 நஜீப் ரசாக்
(II)
  முகிதீன் யாசின்
AP பாகோ மக்களவைத் தொகுதி
பாக்காத்தான் அரப்பான் (பெர்சத்து) 21 மே 2018 -
24 பிப்ரவரி 2020
மகாதீர் முகமது
(VII)
அம்சா சைனுதீன்
லாருட் மக்களவைத் தொகுதி
பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) 10 மார்ச் 2020 - 16 ஆகஸ்டு 2021 முகிதீன் யாசின்
(I)
  சைபுதீன் நசுத்தியோன் இசுமாயில்
செனட்டர்
பாக்காத்தான் அரப்பான் (பிகேஆர்) 3 டிசம்பர் 2022 - தற்போது வரையில் அன்வார் இப்ராகிம்
(I)

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Public Safety and Order Policy (DKKA) was drafted as a guide and reference to deal with various issues in the increasingly challenging public safety and order sector". பார்க்கப்பட்ட நாள் 11 March 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_உள்துறை_அமைச்சர்&oldid=4161627" இலிருந்து மீள்விக்கப்பட்டது