பாகன் டத்தோ மக்களவைத் தொகுதி

பாகன் டத்தோ மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bagan Datuk; ஆங்கிலம்: Bagan Datuk Federal Constituency; சீனம்: 峇眼拿督联邦选区) என்பது மலேசியா, பேராக், பாகன் டத்தோ மாவட்டத்தில் (Bagan Datuk District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P075) ஆகும்.[7]

பாகன் டத்தோ (P075)
மலேசிய மக்களவைத் தொகுதி
பேராக்
Bagan Datuk (P075)
Federal Constituency in Perak
பேராக் மாநிலத்தில்
பாகன் டத்தோ மக்களவைத் தொகுதி

(P75 Bagan Datuk)
மாவட்டம்பாகன் டத்தோ மாவட்டம்
பேராக்
வாக்காளர்களின் எண்ணிக்கை58,183 (2022)[1]
வாக்காளர் தொகுதிபாகன் டத்தோ தொகுதி[2]
முக்கிய நகரங்கள்பாகன் டத்தோ, தெலுக் இந்தான், ஊத்தான் மெலிந்தாங், செலெக்கோ, சிம்பாங் தீகா
பரப்பளவு635 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1958
கட்சி பாரிசான் நேசனல்
மக்களவை உறுப்பினர்அகமத் சாகித் அமிடி
(Ahmad Zahid Hamidi)
மக்கள் தொகை876,495 (2020) [4]
முதல் தேர்தல்மலாயா பொதுத் தேர்தல், 1959
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]




2022-இல் பாகன் டத்தோ மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:[6]

  சீனர் (20.6%)
  மலாயர் (56.3%)
  இதர இனத்தவர் (1.4%)

பாகன் டத்தோ மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1959-ஆம் ஆண்டில் இருந்து பாகன் டத்தோ மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

பாகன் டத்தோ

தொகு

பாகன் டத்தோ நகரம், பேராக், பாகன் டத்தோ மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை நகரம். பேராக் மாநிலத்தின் தலைநகரமான ஈப்போவில் இருந்து 132 கி.மீ.; தெலுக் இந்தான் நகரில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ளது.[8]

இந்த நகரின் முக்கியமான தொழில் மீன்பிடித்தல் ஆகும். தவிர, இதன் சுற்று வட்டாரங்களில் பல தென்னைத் தோட்டங்கள் உள்ளன. பாகன் டத்தோவில் இருந்து தெலுக் இந்தான் நகருக்குச் செல்லும் வழியில் அந்தத் தோட்டங்களைக் காணலாம். இந்தப் பாகன் டத்தோ கிராம நகர்ப் பகுதியை தென்னையின் சொர்க்கவாசல் என்று அழைப்பது வழக்கம்.[9]

மீன்பிடி கிராமங்கள்

தொகு

பாகன் டத்தோ நகரின் சுற்றுப் பகுதியில் சில மீன்பிடி கிராமங்கள் பரவி இருக்கின்றன. சுங்கை தியாங், சுங்கை பூரோங், பாகன் சுங்கை தியாங், பாகான் சுங்கை பூரோங் போன்ற மீன்பிடி கிராமங்களைச் சொல்லலாம். இந்தக் கிராமங்கள் கடற்கரை அருகில் அமைந்துள்ள கிராமங்கள்.

பாகன் டத்தோவில் இருந்து தெலுக் இந்தான் நகருக்குச் செல்லும் சாலையில் ஊத்தான் மெலிந்தாங், செலெக்கோ, சிம்பாங் தீகா போன்ற சிறுநகரங்களும் உள்ளன. சுங்கை டூலாங் எனும் இடத்தில் பெரு இறால்கள் அதிகமாகக் கிடைக்கின்றன.

பாகன் டத்தோ மக்களவைத் தொகுதி

தொகு
பாகன் டத்தோ மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1959-ஆம் ஆண்டில் தெலுக்கான்சன் தொகுதியில் இருந்து
பாகன் டத்தோ தொகுதி உருவாக்கப்பட்டது
பாகன் டத்தோ
மலாயா கூட்டரசின் மக்களவை
1-ஆவது மலாயா மக்களவை P058 1959–1963 யாகயா அகமட்
(Yahya Ahmad)
மலேசிய கூட்டணி
(அம்னோ)
மலேசிய மக்களவை
1-ஆவது மக்களவை P058 1963–1964 யாகயா அகமட்
(Yahya Ahmad)
மலேசிய கூட்டணி
(அம்னோ)
2-ஆவது மக்களவை 1964–1969 சுலைமான் பூலோன்
(Sulaiman Bulon)
1969–1971 நாடாளுமன்ற இடைநிறுத்தம்[10]
3-ஆவது மக்களவை P058 1971–1973 சுலைமான் பூலோன்
(Sulaiman Bulon)
மலேசிய கூட்டணி
(அம்னோ)
1973–1974 பாரிசான் நேசனல்
(அம்னோ)
பாகன் டத்தோ
4-ஆவது மக்களவை P064 1974–1978 அசன் அர்சாட்
(Hassan Adli Arshad)
பாரிசான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)
5-ஆவது மக்களவை 1978–1982 பாரிசான் நேசனல்
(அம்னோ)
6-ஆவது மக்களவை 1982–1986 யகாயா சக்காரியா
(Yahya Zakaria)
7-ஆவது மக்களவை P069 1986–1990 முகமது சம்ரா
(Mohamed Jamrah)
8-ஆவது மக்களவை 1990–1995
9-ஆவது மக்களவை P072 1995–1999 அகமத் சாகித் அமிடி
(Ahmad Zahid Hamidi)
10-ஆவது மக்களவை 1999–2004
11-ஆவது மக்களவை P075 2004–2008
12-ஆவது மக்களவை 2008–2013
13-ஆவது மக்களவை 2013–2018
பாகன் டத்தோ
14-ஆவது மக்களவை P075 2018–2022 அகமத் சாகித் அமிடி
(Ahmad Zahid Hamidi)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

பாகன் டத்தோ மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
58,183
வாக்களித்தவர்கள்
(Turnout)
42,695 73.40% - 6.49%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
41,856 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
91
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
748
பெரும்பான்மை
(Majority)
348 0.83% - 12.95
வெற்றி பெற்ற கட்சி பாரிசான் நேசனல்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்
[11]

பாகன் டத்தோ மக்களவை வேட்பாளர் விவரங்கள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி செல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
% ∆%
அகமத் சாகித் அமிடி
(Ahmad Zahid Hamidi)
பாரிசான் 41,856 16,578 39.61% - 11.76%
சம்சுல் இசுகந்தர் அக்கின்
(Shamsul Iskandar Md. Akin)
பாக்காத்தான் - 16,230 38.78% - 1.19%  
முகமது பைஸ் நமான்
(Muhammad Faiz Na'aman)
பெரிக்காத்தான் - 8,822 21.08% + 21.08%  
முகமது தவ்பிக் இசுமாயில்
(Mohamad Tawfik Ismail)
சுயேச்சை - 226 0.54% + 0.54%  

மேற்கோள்கள்

தொகு
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 14 ஜூன் 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  7. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  8. Bagan Datoh (alternate spelling: Bagan Datuk and Bagan Dato') is a small township around 28 miles (45.06 km) west of Teluk Intan.
  9. Bagan Datoh was developed more than 100 years ago. Known as ‘Coconut Paradise’, Bagan Datoh is the heart of Perak’s coconut country and noted as the nation highest quality of coconuts products.
  10. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-04-23.
  11. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு