இறால்
Dendrobranchiata
புதைப்படிவ காலம்:250–0 Ma
லிட்டோபின்னேயசு வனாமே
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
மெல்லிய ஓட்டுடையவை
வரிசை:
பத்துக்காலி
துணைவரிசை:
இறால்

பேட், 1888
வேறு பெயர்கள்

பின்னேயிடே தானா[1]

இறால் (ஒலிப்பு) (prawn) என்பது பொதுவாக நன்நீரிலும், உவர்நீரிலும் காணப்படும் ஒரு நீர்வாழ் உயிரினம் ஆகும். இது இறால் மீன் எனவும் அழைக்கப்படுகிறது. மாந்தர்களால் விரும்பி உண்ணப்படும் இறைச்சியாகவும் இறால் விளங்குகிறது. இறால்கள் கூட்டமாக வாழும் தன்மையுடையது. நீரில் இது பின்புறமாகவும் நீந்தக்கூடியது. பெரிய மீன்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கு இறால்கள் நல்ல உணவாக அமைகிறது.

கடல்வாழ் உயிரினங்களின் இறந்த உடல்கள் கடல் நீரில் கழிவுப்பொருட்களாக மாறுகின்றன. இவற்றில் கழிவுப்பொருட்களை கடலில் உள்ள இறால் மீன்கள் உண்டு வாழ்கின்றன. எனவே இவற்றை "கடலின் தூய்மையாளர்' என அழைப்பர். பெரிய வளர்ச்சியடைந்த இறால் மீன்கள் ஆழ்கடல் பகுதியில் உள்ளன. ஆழ்கடல் பகுதியில் தான் இவை முட்டையிடுகின்றன. முட்டைகளும் அங்கேயே முதிர்ச்சியடைகின்றன. முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகள் கடல் அலைகளால் அடித்து வரப்படுகின்றன. இந்த குஞ்சுகள் சதுப்பு நிலக்காடுகளிலும், கடலோர கரையிலும் ஒதுங்குகின்றன. சதுப்பு நிலக்காடுகள், கரையோரங்களில் மீன்பிடி தொழில் நடப்பதால் இறால் மீன்கள் இளம் பருவத்திலேயே அழிந்து விடுகின்றன. இதனால் இவை குறைவதால் ஆழ்கடல் பகுதியில் வளர்ச்சியடைந்த இறால் மீன்களும் குறைகின்றன.

கல் இறால்

தொகு

கல் இறாலில் நான்கு வகைகள் உள்ளன:

  1. பவள இறால்
  2. பாறை இறால்
  3. கல் இறால்
  4. மிதியடி இறால்
  • கல் இறால் பிடிக்கும் தொழில் நுட்பம் சமீப காலங்களில் தான் முக்கியத்துவம் பெற்றுள்ளது.[2] சமீப காலங்களில் தான் இவ்வுணவின் மதிப்பு உணரப்பட்டது. இந்தியாவின் வடமேற்கு கடற்கரையில்தான் இறால்கள் பிடிக்கப்படுகின்றன. மன்னார் வளைகுடாப்பகுதியில் பவளப்பாறைகள் உள்ள இடங்களில் மட்டுமே இவைக் காணப்படுகின்றன. டிசம்பர், ஜனவரி மாதங்களே உச்சகாலமாக விளங்குகிறது. கனடா, பிரான்ஸ், நேபாளம் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன.

உணவில் இறால்

தொகு

மற்ற கடல் உணவுப் பொருட்களைப்போல் இறாலில் அதிகமாக கால்சியம், அயோடின் மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. இறால்களில் அதிகப்படியான கொழுப்பு காணப்படுகிறது. இந்த கொழுப்பானது நல்ல கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்பு வகையைச் சேர்ந்ததால், இதனை உணவில் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தமிழ் நாட்டில் இறாலை பெரும்பாலும் வறுத்து தொக்கு போல் செய்து உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. இறால் குழம்பு மற்றும் இறால் பிரியாணியும் விரும்பி உண்ணப்படுகிறது.

இறால் பண்ணைகள்

தொகு
 
இறால்

மனிதர்களின் நுகர்வுக்காக, தனியாக கடலோரத்தில் தொட்டிகள் அமைக்கப்பட்டு இறால்கள் வளர்க்கப்படுகின்றன. வணிக ரீதியான இறால் வளர்ப்பு 1970-களில் வேகமாகப் பெருகின. இந்தப் பெருக்கம் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் சப்பான் நாடுகளில் ஏற்பட்ட தேவையினால் ஏற்பட்டது. தற்போது உலகின் பண்ணைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் இறால்களில் 70% ஆசிய நாடுகளிலிருந்து வருகின்றன. ஆசிய நாடுகளில் இறால் உற்பத்தியில் முன்னணியில் இருப்பவை சீனா மற்றும் தாய்லாந்து ஆகும். இந்தியாவில், ஆந்திர மாநிலத்தில் அதிக அளவிலான இறால் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ் நாட்டிலும் ஆங்காங்கே கடலோர நிலங்களில் இறால் வளர்ப்பு நடை பெறுகிறது. சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் இதற்கு எதிராக சில நீதிமன்றத் தீர்ப்புகள் இருப்பதாலும் இந்தியாவில் அதிகமாக இறால் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இறால் ஏற்றுமதியில் உலகில் அதிக அளவில் ஈடுபட்டுள்ள நாடு தாய்லாந்து ஆகும்.

அடிக்குறிப்புகள்

தொகு
  1. J. W. Martin & G. E. Davis (2001). An Updated Classification of the Recent Crustacea (PDF). Natural History Museum of Los Angeles County. pp. 132 pp. Archived from the original (PDF) on 2013-05-12. பார்க்கப்பட்ட நாள் 2010-09-24.
  2. மேல்நிலை முதலாம் ஆண்டு உயிரியல். தமிழ்நாட்டு அரசு பாடநுால் கழகம். 2007. p. 184.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறால்&oldid=3601482" இலிருந்து மீள்விக்கப்பட்டது