மலேசிய கூட்டரசு சாலை 10
மலேசிய கூட்டரசு சாலை 10 (ஆங்கிலம்: Malaysia Federal Route 10; மலாய்: Laluan Persekutuan Malaysia 10 என்பது மலாயா தீபகற்பத்தின் மத்தியப் பகுதியில் இயங்கும் முக்கியமான மலேசியக் கூட்டரசு சாலை அமைப்பாகும்.
மலேசிய கூட்டரசு சாலை 10 Malaysia Federal Route 10 Laluan Persekutuan Malaysia 10 | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 122.21 km (75.94 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | தெமர்லோ, பகாங் |
கூட்டரசு சாலை 87 கூட்டரசு சாலை 2 | |
தெற்கு முடிவு: | கிம்மாஸ், நெகிரி செம்பிலான் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | மெங்காராக் பெரா திரியாங் மெங்குவாங் கெமாயான் ஜெம்புல் நகரம் பகாவ் ரொம்பின் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
மலேசியாவின் பழைமையான சாலைகளில் இந்தச் சாலையும் ஒன்றாகும்.[1]
122.21 கிமீ (75.94 மைல்) நீளம் கொண்ட இந்தச் சாலை பகாங் தெமர்லோ நகரத்தையும் நெகிரி செம்பிலான் கிம்மாஸ் நகரத்தையும் இணைக்கின்றது.
பொது
தொகுமலேசிய கூட்டரசு சாலை 10-இன் கிலோமீட்டர் '0' (Kilometre Zero) என்பது; மத்திய தீபகற்ப மலேசியாவின் முக்கிய கூட்டரசு சாலையான மலேசிய கூட்டரசு சாலை 1யும்; மலேசிய கூட்டரசு சாலை 10-யும்; இணையும் இடமான நெகிரி செம்பிலான் கிம்மாஸ் நகரத்தில் உள்ளது.
மலேசிய கூட்டரசு சாலை 10-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.
தெமர்லோ
தொகுதெமர்லோ நகரம் மலேசியாவில் மிகப் பழைமையான நகரங்களில் தெமர்லோ நகரமும் ஒன்றாகும். 19-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காலனிய கால கட்டிடங்களும்; கடை வீடுகளும் இன்றும் பழைய வரலாற்றை அங்கு பறைசாற்றுகின்றன.
தெமர்லோ நகரம், தீபகற்ப மலேசியாவின் மையம் (Centre of Peninsular Malaysia) என உறுதி செய்யப்பட்டு உள்ளது. லஞ்சாங் கம்போங் பாயா சிப்புட் எனும் இடத்தில் அந்த மையப்புள்ளி அமைந்து உள்ளது.[2]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.
- ↑ "Based on the research done by the Department of Survey and Mapping Malaysia (JUPEM) in 2009, Temerloh has been identified as the centre point of Peninsular Malaysia". Issuu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 October 2024.