மலேசிய கூட்டரசு சாலை 5
மலேசிய கூட்டரசு சாலை 5 அல்லது கூட்டரசு சாலை 5 (மலேசியா) (ஆங்கிலம்: Malaysia Federal Route 5 அல்லது Federal Route 5; மலாய்: Laluan Persekutuan Malaysia 5 அல்லது Jalan Persekutuan 5) என்பது மலேசிய தீபகற்பத்தின் மேற்குக் கரைப் பகுதியில் இயங்கும் முக்கியமான மலேசியக் கூட்டரசு சாலை அமைப்பாகும். மிக முக்கியமான நெடுஞ்சாலை. மலேசியாவில் உருவாக்கப்பட்ட மிகப் பழைமையான சாலைகளில் ஒன்றாகும்.[3]
655.85 கிலோமீட்டர்கள் (408 mi) நீளம் கொண்ட இந்தக் கூட்டரசு நெடுஞ்சாலையானது, வடக்கில் பேராக் ஜெலாப்பாங் நகர்ப் பகுதியில் தொடங்கி தெற்கில் ஜொகூர், சுகூடாய் (Skudai) வரை செல்கிறது.[4]
பின்னணி
தொகுகூட்டரசு சாலை 5, (Federal Route 5) தீபகற்ப மலேசியாவில் உள்ள மூன்று வடக்கு - தெற்கு கூட்டரசு நெடுஞ்சாலைகளில் முதுகெலும்பு போன்ற நெடுஞ்சாலையாகும். மற்ற இரண்டு நெடுஞ்சாலைகள் கூட்டரசு சாலை 1 (Federal Route 1); கூட்டரசு சாலை 3 (Federal Route 3) ஆகும்.
அந்த மூன்று வடக்கு - தெற்கு கூட்டரசு நெடுஞ்சாலைகளில் கூட்டரசு சாலை 5 மிகக் குறுகியதாகும். பொதுவாக, கூட்டரசு சாலை 5, பெரும்பாலும் தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கடற்கரையை ஒட்டியே செல்கிறது.[5][6]
0 கி.மீ. அடையாளக் கல்தூண்
தொகுகூட்டரசு சாலை 5-இன் 0 கி.மீ. (Kilometre Zero) அடையாளக் கல்தூண், ஜொகூர் சுகூடாய், நகரில் அமைந்துள்ளது. அங்கு இந்தக் கூட்டரசு சாலை 5; மலேசிய கூட்டரசு சாலை 1-இல் இருந்து பிரிகிறது.
[[[மலேசிய கூட்டரசு சாலை 1]] (Malaysia Federal Route 1) என்பது தீபகற்ப மலேசியாவின் மிக மிக முக்கியமான சாலை ஆகும். மலேசியாவில் அமைக்கப்பட்ட முதலாவது சாலையாகும். அதனால்தான் அதற்கு மலேசிய கூட்டரசு சாலை 1 என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.
சுகூடாய்–பொந்தியான் நெடுஞ்சாலை
தொகுகூட்டரசு சாலை 5 முதலில்; சுகூடாய்–பொந்தியான் நெடுஞ்சாலை (Skudai–Pontian Highway) எனத் தொடங்குகிறது. பொந்தியான் கிச்சில் (Pontian Kechil) நகரத்தில் தொடங்கி, தீபகற்ப மலேசியாவின் முக்கிய மேற்கு கடற்கரை பொதுச் சாலையாக (Main West Coastal Trunk Road of Peninsular Malaysia) மாறுகிறது.[6]
கூட்டரசு சாலை 5 முதலில்; சுகூடாய்–பொந்தியான் நெடுஞ்சாலை (Skudai–Pontian Highway) எனத் தொடங்குகிறது. பொந்தியான் கிச்சில் (Pontian Kechil) நகரத்தில் தொடங்கி, தீபகற்ப மலேசியாவின் முக்கிய மேற்கு கடற்கரை பொதுச் சாலையாக (Main West Coastal Trunk Road of Peninsular Malaysia) மாறுகிறது.[6]
பத்து பகாட் நகரத்தில், இந்தக் கூட்டரசு சாலை 5, பத்து பகாட்–குளுவாங் சாலை-இன் (Batu Bahat–Kluang Road) ஒரு பகுதியாகும்.[7] பாரிட் ஜாவா கிராமப்புறப் பகுதியில் பிரிந்து மூவார் நகரத்தை நோக்கிச் செல்கிறது.[8]
மலாக்கா செமாபோக் - ஈப்போ ஜெலாப்பாங் வரையிலான நகரங்கள்
தொகு- செமாபோக், மலாக்கா
- மலாக்கா
- போர்டிக்சன்
- லுக்குட்
- சிப்பாங்
- மோரிப்
- பந்திங்
- கிள்ளான்
- தெலுக் இந்தான்
- சித்தியவான்
- ஈப்போ
- ஜெலாப்பாங்
வரலாறு
தொகுகாட்சியகம்
தொகு-
கோலா சிலாங்கூர் பாலம்
-
கிள்ளான் கி.மீ. 0 நினைவுக்கல்
-
மூவார் பாலம்
-
தெலுக் கெமாங்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Abd. Hamid Abd. Majid (1980-05-01). "1.1 - Sejarah Perkembangan Jalanraya Sebelum Merdeka" (PDF). Analisa Rangkaian Jalan Raya dan Kaitannya Dengan Pembangunan Ekonomi (Diploma). Universiti Teknologi MARA. p. 4. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-18.
- ↑ "New bridge to open tomorrow". New Straits Times. 1988-11-16. பார்க்கப்பட்ட நாள் 2015-11-16.
- ↑ "Kenali rangkaian laluan tulang belakang negara kita". Blog Jalan Raya Malaysia. 2014-11-01. பார்க்கப்பட்ட நாள் 2015-11-18.
- ↑ "Statistik Jalan (Edisi 2013)". Statistik Jalan (Kuala Lumpur: Malaysian Public Works Department): 16–64. 2013. பன்னாட்டுத் தர தொடர் எண்:1985-9619.
- ↑ "Kenali rangkaian laluan tulang belakang negara kita". Blog Jalan Raya Malaysia. 2014-11-01. பார்க்கப்பட்ட நாள் 2015-11-18.
- ↑ 6.0 6.1 6.2 Inventori Rangkaian Jalan Utama Persekutuan Semenanjung Malaysia. Kuala Lumpur: Malaysian Ministry of Works. 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-44278-2-5.
- ↑ "Sejarah lengkap Jalan Persekutuan 5". Blog Jalan Raya Malaysia. 2015-11-16.
- ↑ "Jelajah Maharani Part 2: Menjejak Laluan Persekutuan 5 di Muar". Blog Jalan Raya Malaysia. 2012-03-22.