லுக்குட்

மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில், போர்டிக்சன் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம்.

லுக்குட் என்பது (மலாய்: Lukut; ஆங்கிலம்: Lukut; சீனம்: 芦骨); ஜாவி: لوكوت;) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில், போர்டிக்சன் மாவட்டத்தின் அமைந்துள்ள ஒரு நகரம்.

லுக்குட்
நெகிரி செம்பிலான்
Lukut
லுக்குட் is located in மலேசியா
லுக்குட்
லுக்குட்
லுக்குட் அமைவிடம்
ஆள்கூறுகள்: 2°34′N 101°50′E / 2.567°N 101.833°E / 2.567; 101.833
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
தொகுதிபோர்டிக்சன் மாவட்டம்
அரசு
 • நாடாளுமன்ற உறுப்பினர்அன்வார் இப்ராகிம்
 • சட்டமன்ற உறுப்பினர்சூ கென் ஹுவா
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்78,760
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+8 (பயன்பாடு இல்லை)
மலேசிய அஞ்சல் குறியீடு
71010
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-06
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்N

சிரம்பான் நகரில் இருந்து 23 கி.மீ.; போர்டிக்சன் நகரில் இருந்து 10 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 82 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது.[1]

இங்கு ஒரு பழைமையான கோட்டை உள்ளது. அதன் பெயர் லுக்குட் கோட்டை (Lukut Fort). 1847-ஆம் ஆண்டில் ராஜா ஜுமாட் எனும் ஆட்சியாளரால் கட்டப் பட்டது. இங்குள்ள அருங்காட்சியகம் ஒரு கலாசார மையமாகச் செயல் படுகிறது.[2][3]

வரலாறு

தொகு

1835-ஆம் ஆண்டில், லுக்குட் நகரம் சிலாங்கூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது, 1880-ஆம் ஆண்டில், நெகிரி செ,ம்பிலான், சுங்கை ஊஜோங் ஆளுமையின் கீழ் வந்தது. அதற்கு முன்பு மிகச் செழிப்பான ஈயச் சுரங்க நகரமாக விளங்கியது.

1860-ஆம் ஆண்டுகளில் லுக்குட் பகுதிகளில் பல காபி, மிளகு, மரவள்ளிக் கிழங்கு தோட்டங்கள் திறக்கப் பட்டன. அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆயிரக் கணக்கான தமிழர்கள் தமிழ் நாட்டில் இருந்து அழைத்து வரப் பட்டார்கள்.

சுல்தான் இப்ராகிம் ஷா

தொகு

18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், லுக்குட் பகுதிகளில், மலாக்காவைச் சேர்ந்த சீனச் சுரங்கத் தொழிலாளர்கள், ஈயச் சுரங்கத் தொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

சிலாங்கூர் மாநிலத்தின் ஆட்சியாளராக இருந்த சுல்தான் இப்ராகிம் ஷா அந்த அனுமதியை வழங்கினார். அப்போது லுக்குட் நிலப் பகுதி சிலாங்கூர் சுல்தானின் ஆட்சியின் கீழ் இருந்தது.

லுக்குட் ஈயச் சுரங்கங்களில் இருந்து கிடைத்த ஈயம், சிலாங்கூர் சுல்தானகத்திற்கு அதிக வருவாயை ஈட்டித் தந்தது. அதனால் சிலாங்கூர் சுல்தான் இப்ராகிம், பினாங்கைத் தளமாகக் கொண்ட கிழக்கிந்திய நிறுவனத்துடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தையும் செய்து கொண்டார்.

காப்பித்தான் சீனா

தொகு

இது நேரடியாக மக்கள் தொகை எண்ணிக்கையை உயர்த்தியது. குறிப்பாக ஹைனானீஸ் சீன சமூகத்தில் இருந்து அதிகமான மக்கள் லுக்குட் பகுதிகளுக்குக் குடியேறினார்கள். அதனால் சீன மக்களின் பிரதிநிதியாக காப்பித்தான் (Kapitan) எனும் ஒரு தலைவரைச் சிலாங்கூர் சுல்தான் நியமித்தார்.

காப்பித்தான் என்பது தென்கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த சீனச் சமூகத்தவரின் தலைவரை அல்லது சீனச் சமூகத்தின் பிரதிநிதியைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும். முதன்முதலில் மலாக்கா சுல்தான்கள்தான் காபித்தான் முறைமை உருவாக்கினார்கள்.

ராஜா அசானின் கடுமையான சட்டம்

தொகு

லுக்குட் பகுதியை முறையாக நிர்வாகம் செய்ய வேண்டிய அவசியம், சிலாங்கூர் சுல்தானுக்கு ஏற்பட்டது. லுக்குட்டில் அதிகமான அளவிற்கு மக்கள் குடியேறத் தொடங்கி விட்டார்கள்.

அதனால் நிர்வாகம் செய்யும் பொறுப்பைத் தன் மருமகன் ராஜா அசான் (Raja Hassan) என்பவருக்கு சுல்தான் இப்ராகிம் வழங்கினார். ராஜா அசானின் மற்றொரு பெயர் ராஜா பூசு (Raja Busu).

ராஜா அசான் தன்னுடைய லுக்குட் நிலப் பகுதிக்கு நிறைய மலாய்க்காரர்களை அழைத்து வந்தார். சில பொருளாதாரச் சீர்திருத்தச் சட்டங்களையும் அறிமுகப் படுத்தினார். தன்னுடைய அனுமதி இல்லாமல், லுக்குட்டில் எவரும் தொழில் புரியக் கூடாது எனும் கடுமையான சட்டத்தையும் கொண்டு வந்தார்.

சீனச் சுரங்க உரிமையாளர்கள் அதிருப்தி

தொகு

1824-ஆம் ஆண்டில் லுக்குட் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 1000 ஆக உயர்ந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்தது. இதன் விளைவாக, சீனச் சுரங்கத் தொழிலாளர்களுக்குச் சேவை செய்வதற்காக வணிகச் சேவைகள் உருவாக்கப் பட்டன. அதாவது அபின் விடுதிகள்; விலைமாதர் விடுதிகள் போன்றவை.

இவற்றைத் தவிர லுக்குட் வழியாகக் கொண்டு செல்லப்படும் ஒவ்வோர் ஈயப் பாளத்திற்கும் 10 விழுக்காடு அதிகமாக வரி விதிக்கப்பட்டது. இது சீனச் சுரங்க உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ராஜா அசானுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினார்கள். ராஜா அசான் இணங்கி வரவில்லை.

ஒருநாள் ராஜா அசானின் மாளிகைக்கு முன்னால் 400 சீனர்கள் கூடினார்கள். பேச்சு வார்த்தை நடத்த அழைத்தார்கள். ராஜா அசான் மாளிகையில் இருந்து வெளியே வர மறுத்து விட்டார்.[4]

பழி வாங்கும் படலம்

தொகு

கோபம் அடைந்த சீனர்கள் அவருடைய மாளிகையைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். அதோடு அவரையும் அவரின் குடும்பத்தாரையும் கொலை செய்தார்கள்.

இதைக் கேள்விப்பட்ட சிலாங்கூர் சுல்தானின் உறவினர் ஒருவர் ரியாவ் தீவில் இருந்து படை எடுத்து வந்தார். பழி வாங்கும் நோக்கில் லுக்கிட்டில் இருந்த 1000-க்கும் மேற்பட்ட சீனர்களைக் கொலை செய்தார்.

எஞ்சிய சீனர்கள் லுக்கிட்டில் இருந்து வேறு இடங்களுக்குத் தப்பித்துச் சென்றனர். அதன் விளைவாக லுக்குட் கைவிடப்பட்டது. லுக்குட் வரலாற்றில் அது ஒரு சோகமான நிகழ்ச்சி.

ராஜா ஜாபார் ராஜா அலி

தொகு

பின்னர் 1835-ஆம் ஆண்டில் ரியாவ் தீவைச் சேர்ந்த ராஜா ஜாபார் ராஜா அலி (Raja Jaafar Raja Ali) என்பவர் லுக்குட்டைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். லுக்குட் நிலப் பகுதி, சிலாங்கூர் ஆளுமையின் கீழ் வந்தது. பழையபடி சுரங்கத் தொழில் தொடங்கியது.

லுக்குட் வளர்ச்சியில் சீனர்களின் பங்கு குறிப்பிடத் தக்கது. லுக்குட் மேம்பாட்டிற்கு நிறைய நிதியுதவிகள் செய்து உள்ளனர். கோலாலம்பூர் நகர உருவாக்கத்தில் பெரும் பங்காற்றிய யாப் ஆ லோய் என்பவரும் லுக்குட்டில் தொழில் புரிந்துதான் தன் தொழில் அனுபவங்களைப் பெற்று இருக்கிறார்.

பொருளியல்

தொகு

உழவாரன் பறவைக்கூடு

தொகு

லுக்குட் அதன் உழவாரன் பறவைக்கூடு (Swiftlet Nest) தொழிலுக்குப் பிரபலமானது. ஒரு சிறிய பறவையான உழவாரன் குருவி, தன் கூட்டைத் தன் சொந்த உமிழ்நீரில் இருந்து உருவாக்குகிறது.

இந்தப் பறவையின் உமிழ்நீர் காற்றில் வெளிப்படும் போது கடினமாகிறது. உழவாரன் பறவை கூட்டு அசடுகள், ஓர் ஆரோக்கியமான இயற்கை உணவு என்று பெரும்பாலான சீனர்கள் நம்புகிறார்கள்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Rantau, Malaysia - Facts and information on Rantau - Malaysia.Places-in-the-world.com". malaysia.places-in-the-world.com. பார்க்கப்பட்ட நாள் 18 December 2021.
  2. Singam 1962, ப. C157.
  3. "Where nature and history abound". Malayasia Nature Society. 10 March 2011. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 December 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Gammans, L.D (December 1924). "The State of Lukut". Journal of the Malayan Branch of the Royal Asiatic Society 2 (3): 291-295. https://www.jstor.org/stable/41559593?seq=1#metadata_info_tab_contents. 
  5. Marcone, Massimo F. University of Guelph. "Characterization of the edible bird's nest the "Caviar of the East"". ResearchGate GmbH. Food Research International 38(10):1125-1134 DOI:10.1016/j.foodres.2005.02.008. பார்க்கப்பட்ட நாள் 18 December 2021.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=லுக்குட்&oldid=3570278" இலிருந்து மீள்விக்கப்பட்டது