மலேசிய கூட்டரசு சாலை 53

சிரம்பான்-போர்டிக்சன் சாலை

சிரம்பான்-போர்டிக்சன் சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 53; அல்லது Seremban–Port Dickson Road); மலாய்: Laluan Persekutuan Malaysia 53 அல்லது Jalan Seremban–Port Dickson) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள கூட்டரசு சாலை ஆகும்.[2]

மலேசிய கூட்டரசு சாலை 53
Malaysia Federal Route 53
Laluan Persekutuan Malaysia 53

சிரம்பான்-போர்டிக்சன் சாலை
Seremban–Port Dickson Road
Jalan Seremban–Port Dickson

சிரம்பான்-போர்டிக்சன் சாலை (2022)
வழித்தடத் தகவல்கள்
நீளம்:33.24 km (20.65 mi)
பயன்பாட்டு
காலம்:
1887[1]
வரலாறு:கட்டுமானம் 1910
முக்கிய சந்திப்புகள்
வடகிழக்கு முடிவு:சிரம்பான்
 1 கூட்டரசு சாலை 1

சிரம்பான் உள்வட்டச் சாலை

E2 AH2 தெற்கு வழித்தடம்

E29 சிரம்பான்–போர்டிக்சன்

கூட்டரசு சாலை 1265
N7 ரந்தாவ் சாலை
N6 சிலியாவ் சாலை

5 கூட்டரசு சாலை 5
தென்மேற்கு முடிவு:போர்டிக்சன் (தெற்கு)
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
ராசா ஜெயா; மம்பாவ்; லாபு; நீலாய்; சிலியாவ்; சிப்பாங்;
கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (KLIA); லுக்குட்; போர்டிக்சன்
நெடுஞ்சாலை அமைப்பு

இந்தச் சாலை 33.2 கிமீ (20.6 மைல்) நீளம் கொண்டது; மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரமான சிரம்பான் நகரத்தையும் போர்டிக்சன் கடற்கரை நகரத்தையும் இணைக்கிறது.

1998-ஆம் ஆண்டில், சிரம்பான்-போர்டிக்சன் நெடுஞ்சாலை (Seremban–Port Dickson Highway) கட்டப் படுவதற்கு முன்பு, சிரம்பான்-போர்டிக்சன் சாலையே முதன்மைச் சாலையாக விளங்கியது.

பொது

தொகு

இந்தச் சாலையின் கிலோமீட்டர் 0; போர்டிக்சன் நகரில், மலேசிய கூட்டரசு சாலை 5-இன் சாலைப் பரிமாற்றத்தில் உள்ளது. கிலோமீட்டர் 0 நினைவுச்சின்னம், போர்டிக்சன் நகரில் உள்ள பகாரு சாலையின் (Jalan Baharu) போஸ் மலேசியா (Pos Malaysia) அஞ்சல் நிலையத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

1990-களில் இருந்து 2000-கள் வரை, சிரம்பான்-போர்டிக்சன் கூட்டரசு சாலை கடுமையான நெரிசலில் சிக்கித் தவித்தது. அதன் காரணமாகத்தான் தற்போதைய சிரம்பான்-போர்டிக்சன் நெடுஞ்சாலை (Seremban–Port Dickson Highway) புதிதாகக் கட்டப்பட்டது.

பழைய சாலையில் ஆபத்தான சாலை முனைகள் இருந்தன. புதிய நெடுஞ்சாலை கட்டப்பட்ட பின்னர் ஆபத்துகளும் விபத்துகளும் குறைந்துள்ளன.

அமைவு

தொகு

சாலைத் தரம்

தொகு

இந்தக் கூட்டரசு சாலையின் பெரும்பாலான பகுதி, ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. அத்துடன், சில பிரிவுகளில் விசையுந்து பாதைகளும் உள்ளன.[3]

விளக்கம்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Abd. Hamid Abd. Majid (1980-05-01). "1.1 - Sejarah Perkembangan Jalanraya Sebelum Merdeka". Analisa Rangkaian Jalan Raya dan Kaitannya Dengan Pembangunan Ekonomi (Diploma). Universiti Teknologi MARA. p. 4. Archived (PDF) from the original on 2016-03-04.
  2. Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.
  3. "Construction of roads in Malaysia implemented mainly by the Federal Government and State Government. However, since the mid-1980s, construction of toll roads has been started by private companies who then authorized by the government to charge tolls to road users" (PDF). www.piarc.org/. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_கூட்டரசு_சாலை_53&oldid=4123330" இலிருந்து மீள்விக்கப்பட்டது