சிலியாவ்

நெகிரி செம்பிலான் மாநிலத்தில், சிரம்பான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம்

சிலியாவ் என்பது (மலாய்: Siliau; ஆங்கிலம்: Siliau; சீனம்: 西廖) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில், சிரம்பான் மாவட்டத்தின் அமைந்துள்ள ஒரு நகரம்.[1]

சிலியாவ்
Siliau
நகரம்
நெகிரி செம்பிலான்
சிலியாவ் is located in மலேசியா மேற்கு
சிலியாவ்
சிலியாவ்
சிலியாவ் நகரம் அமைவிடம்
ஆள்கூறுகள்: 2°35′N 101°54′E / 2.583°N 101.900°E / 2.583; 101.900
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
தொகுதிசிரம்பான் மாவட்டம்
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+8 (பயன்பாடு இல்லை)
மலேசிய அஞ்சல் குறியீடு
71100
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-06
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்N
இணையதளம்போர்டிக்சன் நகராண்மைக் கழகம்

சிரம்பான் நகரில் இருந்து 28 கி.மீ; போர்டிக்சன் நகரில் இருந்து 18 கி.மீ; ரந்தாவ் நகரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. சிலியாவ் புறநகர்ப்பகுதி எண்ணெய் பனை தோட்டங்களினால் சூழப்பட்டுள்ளது. [2]

சிலியாவ் பகுதியில் நிறைய எண்ணெய் பனை தோட்டங்கள் இருப்பதால், தமிழர்களின் நடமாட்டமும் அதிகமாகக் காணப் படுகிறது. தமிழர்கள் 1850-ஆம் ஆண்டுகளில் குடியேறினார்கள். முதன்முதலில் மலாயாவில் தமிழர்கள் குடியேறிய பகுதிகளில் இந்தப் பகுதியும் ஒன்றாகும்.[3][4] தமிழ் எழுத்தாளர்கள்; கவிஞர்கள் பலரை உருவாக்கிய பெருமை இந்த இடத்திற்கு உண்டு.

வரலாறு

தொகு

1850-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் நூற்றுக் கணக்கான கரும்பு, காபி, மிளகு தோட்டங்கள் தோற்றுவிக்கப் பட்டன. பெரும்பாலான தோட்டங்கள் பினாங்கு; செபராங் பிறை; பேராக் கிரியான், நெகிரி செம்பிலான் பகுதிகளில் இருந்தன. கரும்பு தோட்டங்கள் தான் மிகுதி. இந்தத் தோட்டங்கள் மலாயாவிலேயே மிக மிகப் பழமையான தோட்டங்கள்.

ரப்பர் தோட்டங்கள் தோன்றுவதற்கு முன்னர் கரும்புத் தோட்டங்கள் தான் மலாயாவில் பிரதான தோட்டங்களாக இருந்தன. 1896-ஆம் ஆண்டிற்குப் பின்னர் தான் ரப்பர் தோட்டங்கள் உருவாகின. ஆயிரக்கணக்கான, இலட்சக் கணக்கான தமிழர்கள் வேலை செய்து இருக்கிறார்கள்.[5]

சிலியாவ் புறநகர்ப் பகுதியில் தமிழ்ப்பள்ளிகள்

தொகு

சிலியாவ் புறநகர்ப் பகுதியில் 4 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 165 மாணவர்கள் பயில்கிறார்கள். 38 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
NBD2043 அதர்ட்டன் தோட்டம் SJK(T) Ladang Atherton[6] அதர்ட்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71100 சிலியாவ் 21 8
NBD2044 பிரட்வால் தோட்டம் SJK(T) Ldg Bradwall[7] பிரட்வால் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71100 சிலியாவ் 24 9
NBD2047 சகா தோட்டம் SJK(T) Ldg Sagga[8][9] சகா தோட்டத் தமிழ்ப்பள்ளி 71100 சிலியாவ் 80 10
NBD2048 சிலியாவ் தோட்டம் SJK(T) Ldg Siliau[10] சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 71100 சிலியாவ் 40 11

ஸ்ரீ முருகன் ஆலயம் சிலியாவ்

தொகு
 
சிலியாவ் நகருக்குச் செல்லும் நெடுஞ்சாலை

சிலியாவ் இரயில் நிலையத்திற்கு அருகில் சிலியாவ் ஸ்ரீ முருகன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வாழ்ந்து வரும் இந்துக்கள் ஆலயத்தைப் பராமரித்து வருகிறார்கள். 1970-ஆம் ஆண்டு முதல் முருகனின் கார்த்திகை திருவிழாவை விமரிசையுடன் கொண்டாடி வருகிறார்கள்.[11]

1967-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இரயில்வே நிலத்தில், மலாயா இரயில்வே அதிகாரியாக பணியாற்றிய எஸ். ராமையா என்பவரின் தலைமையில் இந்த ஆலயம் தொடங்கப்பட்டது. எஸ்.எஸ். பக்கிரிசாமி என்பவரும் இந்த ஆலயத்தின் நற்பணிகளுக்கு தலைமை தாங்கி உள்ளார்.

1987-ஆம் ஆண்டில், மறைந்த முருக பக்தர் கிருபானந்த வாரியார், இந்த ஆலயத்திற்கு வருகை தந்து சொற்பொழிவுகள் ஆற்றி உள்ளார். 1997-ஆம் ஆண்டில் இந்த ஆலயத்தின் செயலாளர் செல்வராஜ்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Kenali Asal Usul Nama Kampung SILIAU, Negeri Sembilan". The Kipidap. பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  2. "Siliau - Negeri Sembilan". www.heritagemalaysia.my. பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  3. முத்துக்கிருஷ்ணன், மலாக்கா. "மலாயா தமிழர்கள்: புக்கிட் மெர்தாஜாம் அல்மா தோட்டம் 1853" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  4. "Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources". Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources: 374. 
  5. Jain, Ravindra K. (1993). "Tamilian Labour and Malayan Plantations, 1840-1938". Economic and Political Weekly. pp. 2363–2370. பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  6. "அதர்ட்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி - PELANCARAN BULAN KEMERDEKAAN PERINGKAT SEKOLAH (TAHUN 2021)" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  7. "பிரட்வால் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  8. "சகா தோட்டத் தமிழ்ப்பள்ளி - Tamil School In Negeri Sembilan Remains Unused Upon Completion 5 Years Ago". Varnam MY. 11 January 2021. பார்க்கப்பட்ட நாள் 16 December 2021.
  9. "SJKT LADANG SAGGA ZONE LEVEL SCIENCE FAIR EXPERIMENT" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 December 2021.
  10. "சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 December 2021.
  11. "ஸ்ரீ முருகன் ஆலயம் Sri Murugan Temple Siliau, Port Dickson Negeri Sembilan Malaysia Murugan Temples". kaumaram.com. பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலியாவ்&oldid=3447001" இலிருந்து மீள்விக்கப்பட்டது