மலேசிய கூட்டரசு சாலை 18
மலேசிய கூட்டரசு சாலை 18 அல்லது இசுகந்தர் சா சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 18 அல்லது Jalan Iskandar Shah; மலாய்: Laluan Persekutuan Malaysia 18 அல்லது Jalan Iskandar Shah) என்பது தீபகற்ப மலேசியா, பேராக், மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள ஒரு சாலை ஆகும்.[1]
மலேசிய கூட்டரசு சாலை 18 Malaysia Federal Route 18 Laluan Persekutuan Malaysia 18 | |
---|---|
இசுகந்தர் சா சாலை Jalan Iskandar Shah | |
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 11.52 km (7.16 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
மேற்கு முடிவு: | லூமுட் |
A186 தெலுக் மூரோ சாலை 100 மலேசிய கூட்டரசு சாலை மலேசிய கூட்டரசு சாலை 5 டின்டிங் மாற்றுவழி | |
கிழக்கு முடிவு: | சித்தியவான் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | பங்கோர் தீவு தெலுக் பாத்திக் செரி மஞ்சோங் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
இந்தச் சாலை, பேராக், மஞ்சோங் மாவட்டத்தின் சித்தியவான் நகரத்தையும்; லூமுட் நகரத்தையும் இணைக்கிறது.[2]
இந்தச் சாலை 11.52 km (7.16 mi) நீளம் கொண்டது; மற்றும் பங்கோர் தீவிற்குச் செல்லும் முக்கியச் சாலையாகவும் விளங்குகிறது. மலேசிய கூட்டரசு சாலை 18-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.[3]
பங்கோர் தீவு
தொகுபங்கோர் தீவு மலேசியா, பேராக், மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள ஒரு தீவு. இந்தத் தீவு, மலேசியாவில் மட்டும் அல்ல; உலகளாவிய நிலையில் நன்கு அறியப்பட்ட சுற்றுலா இடமாகும். பினாங்கு மற்றும் கோலாலம்பூருக்கு இடையில் பேராக், லூமுட் கடற்கரையில் பங்கோர் தீவு அமைந்து உள்ளது.
பருவமழை தாக்கத்தால் பாதிப்பு இல்லாத தீவு; ஆண்டு முழுவதும் மிதமான தட்பவெப்ப நிலை. மலேசியாவில் பார்க்க வேண்டிய பிரபலமான இடங்களில் ஒன்றாகும்.[4]
பங்கோர் தீவு காடுகள்
தொகுபங்கோர் தீவிற்கு அருகில் பாங்கோர் லாவுட் தீவு (Pangkor Laut Island); கியாம் தீவு (Giam Island); மெந்தாகோர் தீவு (Mentagor Island); சிம்பான் தீவு (Simpan Island) மற்றும் துக்குன் தெரிண்டாக் தீவு (Tukun Terindak Island) ஆகிய தீவுகள் உள்ளன.[5]
பங்கோர் தீவு 18 சதுர கி மீ. நிலப்பரப்பைக் கொண்டது. தீபகற்ப மலேசியாவில் இருந்து மலாக்கா நீரிணையில் 3.5 கிலோமீட்டர் (2.2 மைல்) தொலைவில் உள்ளது. தீவின் உட்புறத்தில் நிறைய காடுகள் உள்ளன. அந்தக் காடுகளில் 65 ஊர்வன இனங்கள்; 17 நிலநீர் வாழ்வன இனங்கள்; மற்றும் 82 ஊர்வன இனங்கள் (herpetofaunal species) உள்ளன.[6]
காட்சியகம்
தொகு-
லூமுட் நகரம் (2023)
-
கம்போங் பத்து 1 (2023)
-
தித்தி பாஞ்சாங் (2023)
-
தாமான் பந்தாய் லூமுட் (2023)
-
கம்போங் தெபிங் (2023)
விளக்கம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Lembaga Lebuhraya Malaysia". www.llm.gov.my. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.
- ↑ "Public Works Department (JKR) Malaysia" (PDF). JKR Malaysia. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.
- ↑ "Construction of roads in Malaysia implemented mainly by the Federal Government and State Government. However, since the mid-1980s, construction of toll roads has been started by private companies who then authorized by the government to charge tolls to road users" (PDF). www.piarc.org/. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.
- ↑ Fishery is (next to tourism) an important source of income for most of the islands' inhabitants.
- ↑ Asiatic Pilot: The coasts of Sumatra and the adjacent straits and islands. United States. Hydrographic Office.
- ↑ Estimating the herpetofaunal species richness of Pangkor Island, Peninsular Malaysia.