லூமுட் மக்களவைத் தொகுதி
லூமுட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Lumut; ஆங்கிலம்: Lumut Federal Constituency; சீனம்: 红土坎国会议席) என்பது மலேசியா, பேராக், மஞ்சோங் மாவட்டத்தில் (Manjung District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P074) ஆகும்.[7]
லூமுட் (P074) மலேசிய மக்களவைத் தொகுதி பேராக் | |
---|---|
Lumut (P074) Federal Constituency in Perak | |
மாவட்டம் | மஞ்சோங் மாவட்டம் பேராக் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 92,972 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | லூமுட் தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | லூமுட், பங்கோர் தீவு, ஆயர் தாவார், சித்தியவான் , ஸ்ரீ மஞ்சோங், பந்தாய் ரெமிஸ் |
பரப்பளவு | 343 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | நோர்டின் அகமது இசுமாயில் (Nordin Ahmad Ismail) |
மக்கள் தொகை | 80,485 (2020) [4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
லூமுட் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து லூமுட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
லூமுட்
தொகுலூமுட் நகரம், பேராக், மஞ்சோங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை நகரம். முன்பு காலத்தில் லூமுட் நகரம் ஒரு சிறு மீன்பிடி கிராமமாக இருந்தது. தற்சமயம் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த நகரம் கடல் முத்துச் சிப்பிகளுக்கும்; பவளக் கைவினைப் பொருட்களுக்கும் பெயர் பெற்று விளங்குகிறது.
ஈப்போ மாநகரில் இருந்து 77 கி.மீ. (48 மைல்); சித்தியவான் நகரில் இருந்து 12 கி.மீ. (7.5 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.[8] லூமுட் நகரின் தொடக்கக் காலங்களில், கடற்கரை பாசிகள் நிறைந்து இருந்ததாகக் கூறப் படுகிறது. எனவே உள்ளூர் மக்கள் அந்த இடத்தை லூமுட் என்று அழைத்தனர்.
பங்கோர் உடன்படிக்கை 1874
தொகுமலாக்கா நீரிணையைப் பயன்படுத்தும் படகுகள், லூமுட்டில் அணைவதற்கு ஒரு படகுத் துறை உள்ளது. லூமுட் முகத்துவாரம் முன்பு சிவப்பு நிறக் கடற்பாசி மண்ணால் மூடப்பட்டு இருந்தது.
1874-ஆம் ஆண்டில் பங்கோர் உடன்படிக்கை 1874 கையெழுத்தானது. அந்த உடன்படிக்கையின்படி லூமுட் நகரம், நீரிணைக் குடியேற்றங்களில் (Straits Settlements) ஒரு பகுதியானது.
லூமுட் மக்களவைத் தொகுதி
தொகுலூமுட் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1974-ஆம் ஆண்டில் சித்தியவான் தொகுதியில் இருந்து லூமுட் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P060 | 1974–1978 | ரிச்சர்ட் ஆங் உன் (Richard Ho Ung Hun) |
பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | நிங் செங் குவாய் (Ng Cheng Kuai) | ||
7-ஆவது மக்களவை | P068 | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | லிங் சூய் சியெங் (Ling Chooi Sieng) | ||
9-ஆவது மக்களவை | P071 | 1995–1999 | யாப் இட் தாங் (Yap Yit Thong) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | காங் சோ கா (Kong Cho Ha) | ||
11-ஆவது மக்களவை | P074 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | முகமது இம்ரான் அமீட் (Mohamad Imran Hamid) |
பாக்காத்தான் ராக்யாட் (மக்கள் நீதிக் கட்சி) | |
14-ஆவது மக்களவை | 2018–2022 | முகமது அத்தா ரம்லி (Mohd Hatta Ramli) |
பாக்காத்தான் அரப்பான் (அமாணா) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | நோர்டின் அகமது இசுமாயில் (Nordin Ahmad Ismail) |
பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) |
லூமுட் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
தொகுபொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
92,972 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
72,672 | 76.54% | ▼ - 5.42% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
71,162 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
520 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
990 | ||
பெரும்பான்மை (Majority) |
363 | 0.51% | ▼ - 0.24 |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் நேசனல் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [9] |
லூமுட் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
தொகுவேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
நோர்டின் அகமது இசுமாயில் (Nordin Ahmad Ismail) |
பெரிக்காத்தான் | 71,162 | 25,212 | 35.43% | + 35.43% | |
சாம்ரி அப்துல் காதர் (Zambry Abdul Kadir) |
பாரிசான் | - | 24,849 | 34.92% | - 5.26 % ▼ | |
முகமது அத்தா ரம்லி (Mohd Hatta Ramli) |
பாக்காத்தான் | - | 20,358 | 28.61% | - 12.32% ▼ | |
மசுலான் அப்துல் கனி (Mazlan Abdul Ghani) |
தாயக இயக்கம் | - | 385 | 0.54% | + 0.54% | |
முகமது இசுனின் இசுமாயில் (Mohd Isnin Ismail) |
வாரிசான் | - | 358 | 0.50% | + 0.50% |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 14 ஜூன் 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Lumut lies about 48 miles (77 km) southwest of the tin-mining town of Ipoh.
- ↑ "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.