பந்தாய் ரெமிஸ்
பந்தாய் ரெமிஸ் (மலாய்: Pantai Remis; சீனம்: 潘泰雷米斯) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில், மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை நகரம். தைப்பிங்கிற்கு அருகில் இருக்கும் சிம்பாங் நகரத்திற்கும்; சித்தியவான் நகரத்திற்கும் இடையில் அமைந்து உள்ளது.
ஆள்கூறுகள்: 4°27′N 100°38′E / 4.450°N 100.633°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
உருவாக்கம் | கி.பி. 1900 |
ஏற்றம் | 56 m (183.7 ft) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | http://www.mpm.gov.my/en |
பந்தாய் ரெமிஸ் கடற்கரையைச் சுற்றிலும் ரெமிஸ் எனும் ஒரு வகையான கிளிஞ்சல்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. சாம்பல் நிறத்திலான ஓடுகளைக் கொண்டவை. அதனால் இந்த இடம் அவ்வாறு பெயர் பெற்று இருக்கலாம் என்று அறியப் படுகிறது. மலாய் மொழியில் பந்தாய் என்றால் கடற்கரை. ரெமிஸ் என்றால் கிளிஞ்சல் (mussel).
பொது
தொகுபந்தாய் ரெமிஸ் துறைமுக நகரம் புருவாஸ் ஆற்றின் கரையோரத்தில் அமைந்து உள்ளது. ஒரு காலத்தில் கங்கா நகரம் எனும் பேரரசின் துறைமுக நுழைவு இங்கு இருந்து இருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது. பந்தாய் ரெமிஸ் எனும் பெயரில் மலேசியாவில் சில இடங்கள் உள்ளன. அவற்றுள் மிக முக்கியமானது பேராக் மாநிலத்தில் உள்ள இந்தப் பந்தாய் ரெமிஸ். மிகவும் பிரபலமான கடற்கரை நகரம்.[1]
அழகிய கடற்கரைகள்
தொகுபந்தாய் ரெமிஸ் என்று சொன்னதுமே நம் நினைவிற்கு முதலில் வருவது அங்கு கிடைக்கும் வகைவகையான மீன்கள், இறால்கள், நண்டுகள், கடல் சார்ந்த உயிர்ப் பொருள்கள் தான். பந்தாய் ரெமிஸ் நகரின் அழகிய கடற்கரைகள்; பச்சை நீல நிற நீர்ச் சூழல். தவிர மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் இருக்கும். இந்தக் கடற்கரை நகரம் பேராக் மாநிலத்தின் ஓய்வு சுற்றுலாத் துறைமுகம் என்றும் அழைக்கப் படுகிறது. இங்கு மீன்பிடித்தல் மிக முக்கியமான தொழிலாகும்.[2]
பந்தாய் ரெமிஸ் கடல்கரையோர நிலப் பகுதியில் ஏழு அழகான மணல் கடற்கரைகள் உள்ளன. பந்தாய் ரெமிஸ் தொடங்கி டாமாய் லாவுட் தங்கும் விடுதி வரையில் அந்த ஏழு மணல் கடற்கரைகளும் பரவி உள்ளன.
1993-ஆம் ஆண்டு ஈயச் சுரங்க நிலச்சரிவு
தொகுஇரண்டாவது கடற்கரை தெலுக் அகுவான் கடற்கரை. மீன்பிடிப் படகுகள் வழியாக உள்ளூர் மக்கள் அடிக்கடி வந்து போகிறார்கள். மூன்றாவது கடற்கரையில் 1993-ஆம் ஆண்டில் ஓர் ஈயச் சுரங்க நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நிலச்சரிவைப் படம் எடுத்து இருக்கிறார்கள்.[3]
நான்காவது கடற்கரை ஒரு அழகான கடற்கரை விரிவாக்கம் செய்யப்பட்டது. பின்னர் அங்கு மின் உற்பத்தி ஆலை தோற்றுவிக்கப்பட்டது. ஐந்தாவது கடற்கரை ஈயச் சுரங்கத் தொழிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப் பிழைத்தது.
பந்தாய் ரெமிஸ் பெங்காலான் பாரு தமிழ்ப்பள்ளி
தொகுபந்தாய் ரெமிஸ் நகரத்தில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் பெங்காலான் பாரு தமிழ்ப்பள்ளி. 100 ஆண்டு காலம் பழைமை வாய்ந்த பள்ளி. 154 மாணவர்கள் பயில்கிறார்கள். 79 பெண்கள். 75 ஆண்கள். 16 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[4] பந்தாய் ரெமிஸ் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை பரிமலர் தண்ணீர்மலை. இவர் 2019 செப்டம்பர் 1-ஆம் தேதி பதவி ஓய்வு பெற்றார்.
பந்தாய் ரெமிஸ் கிராமத்தில் முதன்முதலாகத் தமிழர்கள் ரப்பர் தோட்டங்களில் குடியேறினார்கள். காலப் போக்கில் அவர்களில் பலர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டார்கள். சிலர் வணிகத் தொழிலில் ஈடுபட்டு சிறப்பாக வாழ்கிறார்கள்.[5]
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Muzium Beruas telah mempamerkan sebanyak 300 artifak sejarah zaman Kerajaan Gangga Negara dan Raja Beruas.
- ↑ Pantai Remis sebenarnya antara tempat pantai yang sangat terkenal di negara kita.
- ↑ YouTube Video of Third Beach Tin Mine Landslide.
- ↑ SJK (T) PENGKALAN BARU ENROLMENT OF STUDENTS: 154 - GIRLS 79 AND 75 BOYS. 16 TEACHERS.
- ↑ பந்தாய் ரெமிஸ் பெங்காலான் பாரு தமிழ்ப்பள்ளியின் படங்கள்