படகு போக்குவரத்து

படகு போக்குவரத்து.(Boat Mail) என்பது இந்தியா மற்றும் சிலோனுக்கு (தற்போது இலங்கை) இடையேயான தொடர்வண்டி மற்றும் நீராவி கப்பல் சேவை ஆகும். இந்த சேவை மூலம்  சென்னை மாகாணம்  மற்றும் கொழும்பை இணைக்கும் தொடர்வண்டி மற்றும் கடல் போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டது. முதலில் இரு வேறு பயணச்சீட்டு பயன்படுத்தப்பட்டு பின்னர்  ஒரே பயணச்சீட்டே தொடர் வண்டிக்கும் கடல் சேவைக்கும் பயன்படுத்தப்பட்டது.  [1]

படகு போக்குவரத்து

வரலாறுதொகு

தூத்துக்குடி-கொழும்பு மார்க்கம்தொகு

 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், தொடர்வண்டி பாதை சென்னை மாகாணத்திலிருந்து தூத்துக்குடி வரை இருந்தது. தூத்துக்குடி அருகே, இலங்கைக்கு  பயணிகள் படகுகள் மூலமாக தூத்துக்குடி கப்பல் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.  சென்னையில் இருந்து, தூத்துக்குடி செல்லும் பயணத்திற்கு  தொடர்வண்டி மூலம் 21 மணிநேர 50 நிமிடங்கள் ஆனது. 1898 ஆம் ஆண்டில், கடல் பயணத்திற்கான பயணச்சீட்டு வழங்கும் வசதி தொடர்வண்டியில் இருந்தது.

தனுஷ்கோடி- தலைமன்னார் மார்க்கம்.தொகு

1914 ஆம் ஆண்டு, பாம்பன் பாலம் கட்டப்பட்ட பின்னர், ரயில் பாதையின் தடம் மாறிவிட்டது, தொடர் வண்டியானது, சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு சென்றது. பின்னர்  சிறிய படகு வாயிலாக சேவை தொடரப்பட்டு , இலங்கைக்கு கடற்பயணம் அளிக்கப்பட்டது.மற்றொரு  பாதைவழியாக இலங்கையிலுள்ள கொழும்பு தொடர்வண்டி நிலையத்திற்கு  செல்லும் பயணத்தொலைவு 35 கிமீ (22 மைல்) இந்த பயணம்  270 கி.மீ. (170 மைல் தூத்துக்குடி) தூத்துக்குடி-கொழும்பு பாதையைவிட மிகக் குறைவானது.

சூறாவளியின் விளைவுதொகு

1964 ஆம் ஆண்டில், தனுஷ்கோடிக்கு அருகில் ஏற்பட்ட  சூறாவளியின் கோரத்தாக்குதலால் பயணிகள் கடலில் மூழ்கினர். தனுஷ்கோடியின் தொடர்வண்டிப்பாதைகளும்  கப்பல்களும் அடித்துச் செல்லப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இந்தியத் தொடர் வண்டி சேவை  இப்போது இராமேஸ்வரம் வரை இயங்குகிறது, அதே சமயம் தலைமன்னாருக்கு படகு சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.

மாற்று சேவைகள்தொகு

 இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ராமர் சேது பாலம் (ஆடம் பாலம்) சுமார் 12 மைல்கள் தொலைவிற்கு ஆழமற்ற கடல் மற்றும் மணற்பாறைகள் இருப்பதாக   முதல்  உலகப் போரின் போது அறியப்பட்டது 

பார்வை தொகு

  1. Saqaf, Syed Muthahar (14 June 2010). "‘Boat Mail' to run on main line from August 1". The Hindu. Archived from the original on 18 ஜூன் 2014. https://web.archive.org/web/20140618183547/http://www.hindu.com/2010/06/14/stories/2010061452700300.htm. பார்த்த நாள்: 14 February 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=படகு_போக்குவரத்து&oldid=3273526" இருந்து மீள்விக்கப்பட்டது