நெல்லை அதிவேக விரைவு வண்டி
திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் கோவிலின் அடையாளமாக இந்நகரம் ’நெல்லை’ என்றும் அழைக்கப்படுகிறது. எனவே நெல்லையிருந்து கிளம்பும்/வந்தடையும் இவ்வண்டி "நெல்லை அதிவேக விரைவு வண்டி" என்ற பெயரிடப்பட்டுள்ளது.
நெல்லை அதிவேக விரைவு வண்டி | |||
---|---|---|---|
கண்ணோட்டம் | |||
வகை | அதிவேக விரைவு | ||
நிகழ்நிலை | செயலில் உண்டு | ||
நிகழ்வு இயலிடம் | தமிழ்நாடு | ||
நடத்துனர்(கள்) | தெற்கு இரயில்வே | ||
சராசரி பயணிகளின் எண்ணிக்கை | அதிவேக விரைவு வண்டி | ||
வழி | |||
தொடக்கம் | சென்னை எழும்பூர் (MS) | ||
இடைநிறுத்தங்கள் | 12 | ||
முடிவு | திருநெல்வேலி சந்திப்பு (TEN) | ||
ஓடும் தூரம் | 650 கிமீ | ||
சராசரி பயண நேரம் | 10 மணி 50 நிமிடங்கள் | ||
சேவைகளின் காலஅளவு | தினசரி | ||
தொடருந்தின் இலக்கம் | 12631/12632 | ||
பயணச் சேவைகள் | |||
வகுப்பு(கள்) | 1AC, 2AC, 3AC, SL, II & EOG | ||
மாற்றுத்திறனாளி அனுகல் | |||
இருக்கை வசதி | உண்டு (முன்பதிவற்ற பெட்டிகள்) | ||
படுக்கை வசதி | உண்டு (படுக்கை வசதி பெட்டிகள்) | ||
Auto-rack arrangements | உள்ளது | ||
உணவு வசதிகள் | இல்லை | ||
காணும் வசதிகள் | அனைத்து பெட்டிகளிலும் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. | ||
பொழுதுபோக்கு வசதிகள் | இல்லை | ||
சுமைதாங்கி வசதிகள் | உள்ளது | ||
தொழில்நுட்பத் தரவுகள் | |||
சுழலிருப்பு | WAP-7 from Electric Loco Shed - Royapram (RPM/WAP-7) | ||
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) | ||
மின்சாரமயமாக்கல் | 25kV AC Traction 50 Hz (உச்ச வொல்டேஜ் மின்சார இருப்புபாதை) | ||
வேகம் | 70.5 km/h (43.8 mph) மணிக்கு 130km/h | ||
பாதை உரிமையாளர் | இந்திய இரயில்வே | ||
காலஅட்டவணை எண்கள் | 21 ஆம் பக்கம் பார்க்கவும் | ||
|
நெல்லை அதிவேக விரைவு தொடருந்து இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே மண்டலத்தினைச் சார்ந்த ஒரு அதிவேக விரைவு வண்டி. இது திருநெல்வேலிக்கும் சென்னைக்கும் இடையே தினமும் இரு வழியிலும் இயக்கப்படுகின்றது.
பெயர்க் காரணம்
தொகுகுறியீடு
தொகுபழைய எண்கள்
- 119/120
- 6119/6120
- 2631/2632
புதிய எண்
- 12631/12632[1]
குறியீட்டின் படி, 12631 பெயரிடப்பட்ட இந்த அதிவேக விரைவு வண்டி சென்னையிலிருந்து 19.50 மணிக்குப் புறப்பட்டு திருநெல்வேலியை மறுநாள் காலை 06.40 மணிக்கு அடைகின்றது. மறுமார்க்கத்தில் 12632 எனப் இந்த அதிவேக விரைவு வண்டி தொடருந்து திருநெல்வேலியிலிருந்து 19.55 மணிக்கு புறப்பட்டு சென்னையை மறுநாள் காலை 06.35 மணிக்கு அடைகின்றது. இது இந்தியாவின் பழமையான பயணிகள் தொடருந்து ஆகும். இது 650 கி.மீ தொலைவினை 10 மணி 50 நிமிடங்கள் பயணத்தில் கடக்கின்றது. இந்தத் தொடருந்தின் முக்கியமான நிறுத்தங்கள் மதுரை, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் ஆகும். இது 24 பெட்டிகளைக் கொண்டுள்ளது. இந்தத் தொடருந்து RPM WAP7 எனும் 6350HP திறன் கொண்ட அதிவேக மின்சார எஞ்சின் கொண்டு இயக்கப்படுகிறது.
கால அட்டவனை
தொகு12631 ~ சென்னை எழும்பூர் → திருநெல்வேலி ~ நெல்லை அதிவேக விரைவு வண்டி | ||||
---|---|---|---|---|
Station Name | Station Code | Arrival | Departure | Day |
சென்னை எழும்பூர் | MS | - | 19:50 | |
தாம்பரம் | TBM | 20:18 | 20:20 | |
செங்கல்பட்டு சந்திப்பு | CGL | 20:48 | 20:50 | |
மேல்மருவத்தூர் | MLMR | 21:18 | 21:20 | |
திண்டிவனம் | TMV | 21:43 | 21:45 | |
விழுப்புரம் சந்திப்பு | VM | 22:28 | 22:30 | |
விருத்தாச்சலம் சந்திப்பு | VRI | 23:10 | 23:12 | |
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) | TPJ | 01:10 | 01:20 | |
திண்டுக்கல் சந்திப்பு | DG | 02:32 | 02:35 | |
மதுரை சந்திப்பு | MDU | 03:30 | 03:35 | |
விருதுநகர் சந்திப்பு | VPT | 04:13 | 04:15 | |
சாத்தூர் | SRT | 04:36 | 04:37 | |
கோவில்பட்டி | CVP | 04:58 | 05:00 | |
திருநெல்வேலி சந்திப்பு | TEN | 06:40 | - | |
12632 ~ திருநெல்வேலி சந்திப்பு → சென்னை எழும்பூர் ~ நெல்லை அதிவேக விரைவு வண்டி | ||||
திருநெல்வேலி சந்திப்பு | TEN | - | 19:55 | |
கோவில்பட்டி | CVP | 20:43 | 20:45 | |
சாத்தூர் | SRT | 21:03 | 21:05 | |
விருதுநகர் சந்திப்பு | VPT | 21:23 | 21:25 | |
மதுரை சந்திப்பு | MDU | 22:20 | 22:25 | |
சோழவந்தான் | SDN | 22:44 | 22:45 | |
திண்டுக்கல் சந்திப்பு | DG | 23:22 | 23:25 | |
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) | TPJ | 00:55 | 01:00 | |
விருத்தாச்சலம் சந்திப்பு | VRI | 02:28 | 02:30 | |
விழுப்புரம் சந்திப்பு | VM | 03:25 | 03:30 | |
திண்டிவனம் | TMV | 04:00 | 04:02 | |
மேல்மருவத்தூர் | MLMR | 04:23 | 04:25 | |
செங்கல்பட்டு சந்திப்பு | CGL | 04:53 | 04:55 | |
தாம்பரம் | TBM | 05:23 | 05:25 | |
மாம்பலம் | MBM | 05:43 | 05:45 | |
சென்னை எழும்பூர் | MS | 06:35 | - |
எஞ்சின்
தொகுநெல்லை அதிவேக விரைவு வண்டி சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி சந்திப்பிற்கு 6350HP திறன் கொண்ட அதிவேக மின்சார எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
இரயில் பெட்டி அமைப்பு
தொகுஇந்த வண்டியில் முற்றிலும் நவீன மயமாக்கப்பட்ட LHB (Linke Hoffman Busche) எனும் 22 பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன.
Loco | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
EOG | UR | S9 | S8 | S7 | S6 | S5 | S4 | S3 | S2 | S1 | B6 | B5 | B4 | B3 | B2 | B1 | A2 | A1 | UR | UR | EOG |
இதனுடைய அதிவேகம் 130 km/h. இது 2018 முதல் புதிய LHB பெட்டிகளுடன் இயங்குகிறது
மேற்கோள்கள்
தொகு- ↑ "Trains at Glance - Train Name Index" (PDF). Ministry of Railways. Railway Board. July 2019. p. 12 (72). பார்க்கப்பட்ட நாள் 16 March 2020.