மலேசிய கூட்டரசு சாலை 24
மலேசிய கூட்டரசு சாலை 24 அல்லது மூவார்–யோங் பெங் சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 24; அல்லது Muar–Yong Peng Road; மலாய்: Laluan Persekutuan Malaysia 24 அல்லது Jalan Muar–Yong Peng) என்பது மலேசியா, ஜொகூர், மாநிலத்தில் உள்ள ஒரு முக்கியமான சாலை ஆகும்.[1]
மலேசிய கூட்டரசு சாலை 24 Malaysia Federal Route 24 Laluan Persekutuan Malaysia 24 | |
---|---|
மூவார்–யோங் பெங் சாலை Muar–Yong Peng Road Jalan Muar–Yong Peng | |
வழித்தட தகவல்கள் | |
நீளம்: | 65.31 km (40.58 mi) |
பயன்பாட்டு காலம்: | 1869 – |
வரலாறு: | கட்டுமானம்: 1870; சீரமைப்பு: 1890 |
முக்கிய சந்திப்புகள் | |
மேற்கு முடிவு: | மூவார் (பண்டார் மகாராணி) |
மூவார் புறவழிச்சாலை | |
கிழக்கு முடிவு: | யோங் பெங் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | புக்கிட் பக்ரி; பாரிட் சூலோங்; பத்து பகாட்; தொங்காங் பெச்சா; பாரிட் யானி |
நெடுஞ்சாலை அமைப்பு | |
மேற்கில் மூவார் நகரத்தையும்; கிழக்கில் யோங் பெங் நகரத்தையும் இணைக்கும் இந்தச் சாலை, யோங் பெங் வழியாக, மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, தெற்கு வழித்தடத்திற்கான ஒரு முக்கியச் சாலையாகவும் அமைகிறது.[2]
பொது
தொகுஇந்தச் சாலை 65.31 கிமீ (40.58 மைல்) நீளம் கொண்டது; மற்றும் ஜொகூர் பத்து பகாட் மாவட்டத்தில் ஒரு முக்கியச் சாலையாகவும்; தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையின் முக்கியச் கூட்டரசு சாலையாகவும் விளங்குகிறது.
மலேசிய கூட்டரசு சாலை 24-இன் கிலோமீட்டர் 0 (Kilometre Zero) என்பது மூவார் நகரில் உள்ளது.
மலேசிய கூட்டரசு சாலை 23-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.[3]
சிறப்புக் கூறுகள்
தொகுஇந்தச் சாலையின் சிறப்புக் கூறுகள்:
- பாரிட் சூலோங் வரலாற்றுப் பாலம் 1997-இல் இடிக்கப்பட்டது
- பாரிட் சூலோங்கில் உள்ள பாரிட் சுலோங் போர் நினைவுச்சின்னம்
- பக்ரி வரலாற்றுத் தளத்தின் முற்றுகை
- இரண்டாம் உலகப் போரில் மூவார் போரின் பக்ரி சப்பானிய போர் கல்லறை
வரலாறு
தொகுமலேசிய கூட்டரசு சாலை 24; ஜொகூர் மாநிலத்தின் தொடக்கக்காலச் சாலைகளில் ஒன்றாகும். 1869-இல் கிராமச் சாலையாக உருவாக்கப்பட்டு; 1870-இல் கட்டி முடிக்கப்பட்டது. பின்னர் 1890-இல் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.
அப்போது இந்த மலேசிய கூட்டரசு சாலை 24; மலாயாவின் மிக நீளமான சாலையாகச் சாதனையும் படைத்தது. குறிப்பாக இரண்டாம் உலகப் போரின் போது இந்த சாலை, குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகளைக் கண்டுள்ளது.
விளக்கம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Lembaga Lebuhraya Malaysia". www.llm.gov.my. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.
- ↑ "Public Works Department (JKR) Malaysia" (PDF). JKR Malaysia. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.
- ↑ "Construction of roads in Malaysia implemented mainly by the Federal Government and State Government. However, since the mid-1980s, construction of toll roads has been started by private companies who then authorized by the government to charge tolls to road users" (PDF). www.piarc.org/. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.