மலேசிய கூட்டரசு சாலை 23

மூவார்–தங்காக்–சிகாமட் சாலை

மலேசிய கூட்டரசு சாலை 23 அல்லது மூவார்–தங்காக்–சிகாமட் சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 23; அல்லது Muar–Tangkak–Segamat Road; மலாய்: Laluan Persekutuan Malaysia 23 அல்லது Jalan Muar–Tangkak–Segamat) என்பது மலேசியா, ஜொகூர், மாநிலத்தில் உள்ள ஒரு முக்கியமான சாலை ஆகும்.[1]

மலேசிய கூட்டரசு சாலை 23
Malaysia Federal Route 23
Laluan Persekutuan Malaysia 23

மூவார்–தங்காக்–சிகாமட் சாலை
Muar–Tangkak–Segamat Road
Jalan Muar–Tangkak–Segamat
வழித்தடத் தகவல்கள்
நீளம்:76.27 km (47.39 mi)
பயன்பாட்டு
காலம்:
1914 –
வரலாறு:கட்டுமானம் 1939
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:சிகாமட்
 224 மூவார் புறவழிச்சாலை

5 கூட்டரசு சாலை 5
5 19 லெபோ AMJ
J112 கீசாங் தாசேக் சாலை
J33 புக்கிட் கம்பீர் சாலை
J136 தெலுக் ரிம்பா சாலை

E2 AH2 மலேசிய தெற்கு வழித்தடம்

J21 சியாலாங் சாலை
J187 சோலோக் சாலை
J123 பெக்கோ சாலை
J34 புக்கிட் செரம்பாங் சாலை
M125 அசகான் சாலை
J43 பத்து அன்னாம் சாலை
J153 தாசேக் ஆலாய் சாலை
1 AH142 கூட்டரசு சாலை 1

J154 கம்போங் தெங்கா சலை
தெற்கு முடிவு:பாரிட் பூங்கா
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
சுங்கை மத்தி; புக்கிட் கம்பிர்; புக்கிட் கங்கார்; தங்காக்; சாகில்; ஜெமிந்தா; கெமெரே
நெடுஞ்சாலை அமைப்பு

வடக்கில் சிகாமட் நகரத்தையும்; தெற்கில் பாரிட் பூங்கா நகரத்தையும் இணைக்கும் இந்தச் சாலை, தங்காக் வழியாக, மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, தெற்கு வழித்தடத்திற்கான ஒரு முக்கியச் சாலையாகவும் அமைகிறது.[2]

பொது

தொகு

இந்தச் சாலை 76.27 கிமீ (47.39 மைல்) நீளம் கொண்டது; மற்றும் ஜொகூர் சிகாமட் மாவட்டத்தில் ஒரு முக்கியச் சாலையாகவும்; தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையின் முக்கியச் கூட்டரசு சாலையாகவும் விளங்குகிறது.

மலேசிய கூட்டரசு சாலை 23-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.[3]

சிறப்புக் கூறுகள்

தொகு

இந்தச் சாலையின் சிறப்புக் கூறுகள்:

  • புக்கிட் கங்கார் மற்றும் தங்காக் நகரஙகளுக்கு இடையிலான சாலையில் பல சீனர் கல்லறைகள் உள்ளன
  • லெடாங் மலைக்கு ஒரு முக்கிய பாதையாக உள்ளது
  • தங்காக் நகரம்; ஜொகூர் மாநிலத்தின் நெசவுப் பொருட்களின் நகரம்

சாலைகள் மேம்பாடு

தொகு

டிசம்பர் 7, 2007 அன்று, சிகாமட்டில் இருந்து தங்காக் வரையிலான 40 கி.மீ தூரத்தை இருவழிச் சாலையிலிருந்து நான்கு வழிச் சாலையாக மேம்படுத்த மலேசிய மத்திய அரசு முடிவு செய்தது. இந்தச் சாலையின் கட்டுமானம் 2015-இல் நிறைவடைந்தது.

இதற்கிடையில், மலேசிய கூட்டரசு சாலை 23-இன் இரண்டாவது பகுதி ஜெமிந்தா நகரில் இருந்து லேடாங் மலை தேசியப் பூங்கா வரையிலான சாலையின் கட்டுமானம் நிறைவடைந்தது.

கட்டுமானம்

தொகு

63-கிமீ நீளம் கொண்ட சிகாமட்-தங்காக்-மூவார் நெடுஞ்சாலையின் கட்டுமானம், 2011 இல் தொடங்கியது. கட்டமானத்திற்கு ரிங்கிட் RM 750 மில்லியன் முதல் ரிங்கிட் RM 770 மில்லியன் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டது.

மலேசிய கூட்டரசு சாலை 23-இல் உள்ள 14 பாலங்களை மேம்படுத்துவது; மற்றும் ஐந்து தொகுப்புகளாகச் சாலைகளை மேம்படுத்துவது போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. மலேசிய கூட்டரசு சாலை 23-இன் கட்டுமானம் 2015 இல் நிறைவடைந்தது.

விளக்கம்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Lembaga Lebuhraya Malaysia". www.llm.gov.my. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.
  2. "Public Works Department (JKR) Malaysia" (PDF). JKR Malaysia. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.
  3. "Construction of roads in Malaysia implemented mainly by the Federal Government and State Government. However, since the mid-1980s, construction of toll roads has been started by private companies who then authorized by the government to charge tolls to road users" (PDF). www.piarc.org/. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_கூட்டரசு_சாலை_23&oldid=4118268" இலிருந்து மீள்விக்கப்பட்டது