ஜெமிந்தா

மலேசியா, ஜொகூர், சிகாமட் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்/முக்கிம்

ஜெமிந்தா, (மலாய்: Jementah; ஆங்கிலம்: Jementah; சீனம்: 杰门塔; ஜாவி: جمنتة) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் சிகாமட் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்; ஒரு முக்கிம். இந்த நகரம் சிகாமட் நகரத்திற்கு மேற்கே அமைந்து உள்ளது.

ஜெமிந்தா
Jementah
 ஜொகூர்
ஜெமிந்தா நகரம்
ஜெமிந்தா நகரம்
Map
ஆள்கூறுகள்: 2°26′N 102°41′E / 2.433°N 102.683°E / 2.433; 102.683
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
மாவட்டம்சிகாமட் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்228 km2 (88 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்18,823
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு85200
தொலைபேசி குறியீடு+6-772
போக்குவரத்துப் பதிவெண்கள்J
சிகாமட் மாவட்டத்தில் ஜெமிந்தா

ஜொகூர் பாரு மாநகரத்தில் இருந்து வடக்கே சுமார் 160 கி.மீ. தொலைவிலும்; சிகாமட் நகரில் இருந்து தெற்கே 21 கி.மீ. தொலைவிலும் ஜெமெந்தா நகரம் அமைந்துள்ளது.

ஜெமிந்தா நகரின் உட்பகுதியில் உள்ள நாகப்பா தோட்டத்தில் தமிழர்கள் கணிசமான அளவிற்கு இன்றும் வாழ்கிறார்கள். 1990-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி அந்தத் தோட்டத்தில் 279 தமிழர்கள்; 42 சீனர்கள்; 108 மலாய்க்காரர்கள் வேலை செய்தார்கள்.[1] இங்கு ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் நாகப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி.

வரலாறு தொகு

ஜெமிந்தா எனும் பெயர் உருவானதற்கு இரு காரணங்கள் சொல்லப் படுகின்றன. முன்பு காலத்தில் அங்கு ஒரு கிராமம் உருவாக்கப்படும் போது அங்கு அதிகமான லாலான் புற்கள் இருந்து உள்ளன. அதை வெட்டிய கிராமவாசிகளுக்கு சலிப்பு எடுத்து ’ஜெமு’ (Jemu) என்று சொல்லி இருக்கிறார்கள். மலாய் மொழியில் ஜெமு என்றால் சலிப்பு என்று பொருள்.

அதற்கு சிலர் எந்தா (Entah) என்று பதில் வழங்கி உள்ளார்கள். மலாய் மொழியில் எந்தா என்றால் தெரியவில்லை என்று பொருள். அந்த வகையில் அந்த இடத்திற்கு ஜெமிந்தா என்று பெயர் வந்து இருக்கலாம் என்று சொல்லப் படுகிறது.

மற்றொரு காரணமும் சொல்லப் படுகிறது. கிராமவாசிகள் அந்தக் கிராமத்தை உருவாக்கும் போது அவர்களை அதிகமாக அட்டைகள் கடித்ததால் அந்த இடத்திற்கு ஜெமு லிந்தா (jemu - lintah) என்று பெயர் வந்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. அட்டைக்கு மலாய் மொழியில் லிந்தா (lintah) என்று பெயர்.

நாகப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி தொகு

நாகப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி 1946-ஆம் ஆண்டு நாகப்பா தோட்ட நிர்வாகத்தினரால் தோற்றுவிக்கப்பட்டது. முதலில், அந்தப் பள்ளி தொழிலாளர்களின் பிள்ளைகளைப் பராமரிக்கும் இடமாகச் செயல்பட்டது.

முன்னர் இந்தப் பள்ளிக்கூடம் ஜெமிந்தா பட்டணத்தில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. தங்காக் - சிகாமட் செல்லும் நெடுஞ்சாலையில் ஒரு செம்மண் சாலையில் 6 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டி இருந்தது.

இந்தப் பள்ளியை ஜெமிந்தா பட்டணத்திற்கு மாற்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. பின்னர் மாணிக்கக் செட்டியார் என்பவர் இலவசமாக வழங்கிய நிலத்தில் புதிய பள்ளிக்கூடம் 2010-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.[2]


மலேசிய அரசாங்கத்தின் 21 இலட்சம் ரிங்கிட் நிதியுதவி தொகு

இந்தப் பள்ளிக்கூடம் 2011 செப்டம்பர் 28-ஆம் தேதி நாகப்பா தோட்டத்தில் இருந்து ஜெமிந்தா பட்டணத்திற்கு மாற்றம் செய்யப் பட்டது. பின்னர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் அரசாங்கத்திடம் இருந்து 21 இலட்சம் ரிங்கிட் மானியம் பெற்றுத் தந்தார்.[3]

அதன் வழி ஒரு பள்ளி மண்டபம், ஓர் இணைக் கட்டடம், ஒரு கணினி அறை, ஒரு நூலகம், ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு ‘ஸ்மார்ட்’ தொலைக்காட்சி போன்ற பல வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன.[4]

நாகப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் படங்கள்

அருகில் உள்ள நகரங்கள் தொகு

கிமெஞ்சே (Gemereh)
புக்கிட் செரம்பாங் (Bukit Serampang)
தங்காக் (Tangkak)

சான்றுகள் தொகு

  1. Cheu, Hock-Tong (6 December 2020). "Ethnicity and Ethnic Relations in Multi-Ethnic Malaysia" (in ஆங்கிலம்). Partridge Publishing Singapore. பார்க்கப்பட்ட நாள் 22 June 2021.
  2. "2.1 மில்லியன் மானியத்தில், கணினி மையத்தோடு நவீனமயமான நாகப்பா தோட்டத் தமிழ்ப் பள்ளி | Selliyal - செல்லியல்". பார்க்கப்பட்ட நாள் 22 June 2021.
  3. சண்முகம், தயாளன். "மேம்பாட்டை நோக்கி சிகாமாட் நாகப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி ! | அநேகன்". அநேகன். பார்க்கப்பட்ட நாள் 22 June 2021.
  4. "நாகப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி". பார்க்கப்பட்ட நாள் 22 June 2021.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜெமிந்தா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேலும் காண்க தொகு

மலேசிய மாவட்டங்கள்
ஜொகூர் மாவட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெமிந்தா&oldid=3923838" இலிருந்து மீள்விக்கப்பட்டது