பொந்தியான் கிச்சில்
பொந்தியான் கிச்சில், (மலாய்: Pontian Kechil; ஆங்கிலம்: Pontian Kechil; சீனம்: 笨珍凯奇); ஜாவி: ڤونتين كچيل) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், பொந்தியான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். பொந்தியான் மாவட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. இந்த நகரத்தைப் பொந்தியான் நகரம் என்று பொதுவாக அழைப்பது உன்டு.
பொந்தியான் கிச்சில் Pontian Kechil | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 1°28′43″N 103°23′22″E / 1.47861°N 103.38944°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
மாவட்டம் | பொந்தியான் |
நகராண்மைத் தகுதி | 31 ஜுலை 2021 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
அஞ்சல் குறியீடு | 82xxx |
இடக் குறியீடு | +6-07 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | J |
இந்த நகரம் ஜொகூர் பாரு மாநகரத்தில் இருந்து 59 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பொந்தியான் நகராண்மைக் கழகம் (Pontian Municipal Council) 1976-ஆம் ஆண்டில் அமைக்கப் பட்டது. இந்தக் கழகம் இந்த நகரத்தில்தான் உள்ளது.[1]
முன்பு காலத்தில் இந்த நகரம் ஒரு மீன்பிடி கிராமம். தற்சமயம் துரிதமான வளர்ச்சி கண்டுள்ளது. இதன் பரப்பளவு 6.6. ச.கி.மீ.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு