அலோர் காஜா-மத்திய மலாக்கா-ஜாசின் நெடுஞ்சாலை

அலோர் காஜா-மத்திய மலாக்கா-ஜாசின் நெடுஞ்சாலை (Alor Gajah-Central Malacca-Jasin Highway (AMJ), (மலாய் மொழி: Lebuhraya Alor Gajah-Melaka Tengah-Jasin) என்பது மலாக்கா மாநிலத்தின் ஊடாகச் செல்லும் நெடுஞ்சாலை ஆகும்.[1] மலாக்கா பகுதியில் 19 கூட்டரசு சாலை என்றும், ஜொகூர் பகுதியில் 5 கூட்டரசு சாலை என்றும் அழைக்கப்படுகிறது.

கூட்டரசு சாலை 19, 5
அலோர் காஜா-மத்திய மலாக்கா-ஜாசின் நெடுஞ்சாலை
(Alor Gajah-Central Malacca-Jasin Highway)
வழித்தடத் தகவல்கள்
பயன்பாட்டு
காலம்:
2001 –
வரலாறு:உருவாக்கப்பட்டது 2007
முக்கிய சந்திப்புகள்
வடமேற்கு முடிவு:தாபோ நானிங் வட்டம், மலாக்கா நகரம்
 E2 AH2 வடக்கு-தெற்கு விரைவுசாலை (மலேசியா) தென்பகுதி
61 கூட்டரசு சாலை 61
139 கூட்டரசு சாலை139
19 கூட்டரசு சாலை 19
142 கூட்டரசு சாலை142
140 கூட்டரசு சாலை140
33 சுங்கை ஊடாங் பாயா ரும்புட் ஆயர் குரோ நெடுஞ்சாலை
144 கூட்டரசு சாலை144
5 கூட்டரசு சாலை 5
23 கூட்டரசு சாலை 23
224 மூவார் மாற்றுவழிச் சாலை
தென்கிழக்கு முடிவு:பாரிட் பூங்ஙா,லேடாங், ஜொகூர்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
சிம்பாங் அம்பாட்
தம்பின்
அலோர் காஜா
பத்து பிரண்டாம்
மலாக்கா மாநகரம்
உம்பாய்
மெர்லிமாவ்
நெடுஞ்சாலை அமைப்பு

மலாக்கா பகுதியில், முன்பு மாலிம் நகரில் இருந்து செமாபோக் வரையில் இருந்த கூட்டரசு சாலை 191 என்று அழைக்கப்பட்டது. 2012-ஆம் ஆண்டு, மாலிம் - செமாபோக் சாலையானது அலோர் காஜா-மத்திய மலாக்கா-ஜாசின் நெடுஞ்சாலையின் ஜொகூர் பகுதியுடன் இணைக்கப்பட்டது.[2]

மலாக்கா மூவார் சாலை

தொகு

அலோர் காஜா-மத்திய மலாக்கா-ஜாசின் நெடுஞ்சாலை, முதலில் சிம்பாங் அம்பாட்டில் இருந்து மலாக்கா மாநகரத்திற்கு வடக்கு தெற்காகச் செல்கிறது. அடுத்து, மலாக்கா மாநகரத்தில் இருந்து மேற்கு கிழக்கு திசையில் மூவார் நகருக்குச் செல்கிறது. இந்த நெடுஞ்சாலையின் மலாக்கா பகுதி, கூட்டரசு சாலை   எனவும், ஜொகூர் பகுதி, கூட்டரசு சாலை   எனவும் குறிப்பிடப் படுகிறது.[3]

செலவு 505 மில்லியன் ரிங்கிட்

தொகு

மலாக்கா - சிம்பாங் அம்பாட் கூட்டரசு சாலை 19, மலாக்கா - மூவார் கூட்டரசு சாலை 5 ; இந்தச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அலோர் காஜா-மத்திய மலாக்கா-ஜாசின் நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டது. 2001-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நெடுஞ்சாலை திட்டம் 2007-ஆம் ஆண்டு முடிவுற்றது. 505 மில்லியன் ரிங்கிட் செலவானது. 2007 ஜூன் 27-ஆம் தேதி, போக்குவரத்திற்கு திறந்துவிடப் பட்டது.[1]

இந்த அலோர் காஜா-மத்திய மலாக்கா-ஜாசின் நெடுஞ்சாலையில் மூன்று சந்திப்புகள் உள்ளன.

  • செமாபோக் சந்திப்பு
  • அல் அஷீம் சந்திப்பு
  • மாலிம் ஜெயா சந்திப்பு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Lebuh AMJ Bernilai RM505 Juta Mula Dibuka Kepada Pengguna.
  2. Jelajah Maharani Part 3: Lebuh AMJ FT19.
  3. "RM5j diperlu naik taraf Lebuh AMJ arah Selatan" (in Malay). உத்துசான் மலேசியா. 8 September 2012. Archived from the original on 29 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 22 ஜனவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unrecognized language (link)

மேலும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு