மலேசிய கூட்டரசு சாலை 4
மலேசிய கூட்டரசு சாலை 4 அல்லது கூட்டரசு சாலை 4 (மலேசியா) (ஆங்கிலம்: Malaysia Federal Route 4 அல்லது Federal Route 4; மலாய்: Laluan Persekutuan Malaysia 4 அல்லது Jalan Persekutuan 4) என்பது மலாயா தீபகற்பத்தின் வடக்குப் பகுதியில் இயங்கும் முக்கியமான மலேசியக் கூட்டரசு சாலை அமைப்பாகும். மலேசியாவின் நீண்ட சாலைகளில் இந்தச் சாலையும் ஒன்றாகும்.
மலேசிய கூட்டரசு சாலை 4 Malaysia Federal Route 4 Laluan Persekutuan Malaysia 4 | |
---|---|
வழித்தட தகவல்கள் | |
இன் பகுதி | |
நீளம்: | 307 km (191 mi) |
பயன்பாட்டு காலம்: | 1970 – |
வரலாறு: | கட்டி முடிக்கப்பட்டது 2005 |
முக்கிய சந்திப்புகள் | |
மேற்கு முடிவு: | பட்டர்வொர்த், பினாங்கு |
பட்டர்வொர்த்-கூலிம் விரைவுச்சாலை மலேசிய கூட்டரசு சாலை 67 | |
கிழக்கு முடிவு: | பாசிர் பூத்தே, கிளாந்தான் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | பட்டர்வொர்த்; லூனாஸ்; பாலிங்; கிரிக்; தெமங்கோர் ஏரி; ஜெலி; தானா மேரா; மாச்சாங்; பாசிர் பூத்தே |
நெடுஞ்சாலை அமைப்பு | |
307 கிலோமீட்டர்கள் (191 mi) நீளம் கொண்ட இந்தச் சாலை பினாங்கு பட்டர்வொர்த் நகரத்தையும் கிளாந்தான் பாசிர் பூத்தே நகரத்தையும் இணைக்கின்றது. அத்துடன் இந்த நெடுஞ்சாலை தாய்லாந்தின் எல்லைக்கு அருகில் சென்று புக்கிட் பூங்கா குடிநுழைவு வளாகத்தையும் (Jalan Kompleks CIQ Bukit Bunga) சந்திக்கின்றது.[1]
பின்னணி
தொகுஇந்தச் சாலை பேராக் மாநிலத்தின் கிரிக் நகரில் தொடங்குகிறது. கிரிக் நகரத்தின் முதல் கிலோமீட்டரில், மலேசிய கூட்டரசு சாலை 76 உடன் இணைகிறது.
பின்னர் மலேசிய கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை வழியாக, கோலா ரூய் (Kuala Rui), தெமாங்கோர் பாலம் (Lake Temenggor Bridge), பண்டிங் தீவு (Banding Island), பெலும் வனப் பாதுகாப்பகம் (Belum Forest Reserve), ஆயர் பானுன் (Air Banun), பெர்காவ் ஏரி (Lake Pergau) ஆகிய இடங்களைக் கடந்து இறுதியாக கிளாந்தான், ஜெலி நகரை அடைகிறது.
பின்னர் ஜெலியில் இருந்து தானா மேரா, மாச்சாங் நோக்கித் தொடர்கிறது. இறுதியாக பாசிர் பூத்தே நகரில், மலேசிய கூட்டரசு சாலை 3-ஐ சந்திக்கிறது.
வரலாறு
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.