லூனாஸ்
லூனாஸ் (Lunas) மலேசியா, கெடா, கூலிம் மாவட்டத்தில் ஒரு துணை மாவட்டம் ஆகும். இந்தத் துணை மாவட்டத்தின் தலைப் பட்டணத்தின் பெயரும் லூனாஸ் ஆகும். இங்கு அதிகமாகத் தமிழர்கள்; சீனர்கள் வாழ்கிறார்கள்.
Lunas | |
---|---|
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
நகரத் தோற்றம் | 1910-களில் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 18,236 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம் (MST)) |
• கோடை (பசேநே) | கண்காணிப்பு இல்லை |
அஞ்சல் குறியீடு | 10xxx |
அனைத்துலக முன்னொட்டுக் குறி | +6044 (தரைவழித் தொடர்பு) |
1890-ஆம் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூலிம்; லூனாஸ் பகுதிகளில் இருந்த காபி, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழகத்தில் இருந்து அழைத்து வரப் பட்டார்கள். அவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களை ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்று அழைத்தார்கள்.
அந்தக் காலக்கட்டத்தில் லூனாஸ் நகரத்தைச் சுற்றிலும் நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. 1990-ஆம் ஆண்டுகளில் லூனாஸ்; கூலிம் வட்டாரங்களில் தொழில்துறை மேம்பாடுகள். அவற்றின் காரணமாக பல ரப்பர் தோட்டங்கள் மூடப்பட்டன. அந்தத் தோட்டங்களில் வேலை செய்த தமிழர்களில் பெரும்பாலோர் லூனாஸ் புறநகர்ப் பகுதிகளில் குடியேறினார்கள். மலேசியாவில் அதிகமாகத் தமிழர்கள் வாழும் இடங்களில் லூனாஸ் நகரமும் ஒன்றாகும்.
இந்த நகரம் வாத்து சோறு (Duck rice) எனும் உணவுப் பொருள்களுக்குப் புகழ் பெற்றது.[1]
வளர்ச்சி வரலாறு
தொகுஇந்த நகரம் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோற்றுவிக்கப் பட்டது. இருப்பினும் 1910 - 1930-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கெடா மாநிலம் பிரித்தானியர்களின் பாதுகாப்பில் இருந்த போது அங்குள்ள கடை வீடுகள் கட்டப்பட்டன.
அந்தக் காலக் கட்டத்தில் சீனா; இந்தியா நாடுகளில் இருந்து குடியேறியவர்களும் உள்ளூர் மக்களில் பலரும் பிரித்தானிய நிறுவனங்களுக்குச் சொந்தமான ரப்பர் தோட்டங்களில் பணிபுரிந்தனர். அப்போது உருவாக்கப்பட்ட பள்ளிகளில் ஒன்று தான் லூனாஸ் ஆங்கிலப் பள்ளி. இங்கு முதலாம் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட பழைமையான கடைகள் இன்றும் உள்ளன.
சுற்றுலா தளங்கள்
தொகு- லூனாஸ் பௌத்த பர்ணசாலை (Lunas Buddhist Hermitage)[2]
- ஹோக் தெயிக் சூ கோயில் (Hock Teik Soo Temple). 120 ஆண்டுகள் பழைமையானது.[3]
- ஸ்ரீ மகா கூடக்கரை முனீஸ்வரர் ஆலயம் (Sri Maha Kuttakarai Muniswarar Alayam Temple)
- ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயம், வெல்லெஸ்லி தோட்டம் (Sri Maha Muthu Mariaman, Ladang Wellesley)
வரலாற்றுத் தளங்கள்
தொகு- லூனாஸ் புகையூட்டுக் கூடம் (Lunas Smoke House)[4]
- சூன் மாளிகை (Soon Mansion)
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.kenhuntfood.com/2014/10/food-hunters-guide-kulim-kedah.html
- ↑ http://www.dharmaoverground.org/discussion/-/message_boards/message/5771175
- ↑ https://angkongkeng.com/malaysia/80-kedah/
- ↑ https://archnet.org/system/publications/contents/7151/original/DPC4257.pdf பரணிடப்பட்டது 2017-03-07 at the வந்தவழி இயந்திரம்?