மாச்சாங்
மாச்சாங் (மலாய் மொழி: Machang; ஆங்கிலம்: Machang) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில்; மாச்சாங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்.
மாச்சாங் Machang | |
---|---|
கிளாந்தான் | |
ஆள்கூறுகள்: 5°45′39″N 102°12′57″E / 5.76083°N 102.21583°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கிளாந்தான் |
மாவட்டம் | மாச்சாங் மாவட்டம் |
அமைவு | 1880 |
பரப்பளவு | |
• மொத்தம் | 130 km2 (50 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 56,937 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 18XXX |
தொலைபேசி எண்கள் | +6-09 |
வாகனப் பதிவெண்கள் | D |
மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 44 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 298 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
பொது
தொகுகுதிரை மாம்பழம் என்று அழைக்கப்படும் மாச்சாங் மாம்பழம் (Mangifera foetida) என்பதன் மலாய் பெயரில் இருந்து இந்த இடத்திற்கு மாச்சாங் என்று பெயரிடப்பட்டது.[2]
மாச்சாங் எனும் பெயரில் கம்போங் மாச்சாங் (Kampung Machang) எனும் கிராமம் உள்ளது. 1880-ஆம் ஆண்டில் செனிக் அவாங் கெச்சிக் (Senik Awang Kecik) என்பவரின் தலைமையில் குடியேறிய ஒரு குழுவினரால் கம்போங் மாச்சாங் எனும் கிராமம் உருவாக்கப்பட்டது.
இந்தக் கிராமத்தில் இருந்துதான் மாச்சாங் நகரமும் உருவானது.
கில்மார்ட் பாலம்
தொகுகிளாந்தான் ஆற்றின் குறுக்கே தானா மேராவுக்கு அருகில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் இரயில் பாலம் உள்ளது. அதன் பெயர் கில்மார்ட் பாலம் (Guillemard Bridge). இந்தப் பாலம் மலேசியாவிலேயே மிக நீளமான இரயில் பாலமாகும். இதன் கட்டுமானம் 1920-இல் தொடங்கி 1924-இல் நிறைவு அடைந்தது.
கில்மார்ட் எனும் பெயர், சர் லாரன்ஸ் கில்மார்ட் (Sir Laurence Guillemard) என்பவரின் பெயரில் இருந்து எடுக்கப்பட்டது. இவர் அப்போது நீரிணை குடியேற்றங்களின் ஆளுநராகவும், மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையராகவும் இருந்தவர்.
சப்பானிய படையெடுப்பு
தொகுமலாயா மீதான சப்பானிய படையெடுப்பின் போது, சப்பானிய இராணுவ துருப்புக்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக, 1941 டிசம்பர் 12-ஆம் தேதி பிரித்தானியத் துருப்புக்களால் இந்தப் பாலம் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது.
பின்னர் இந்தத் தொடருந்துப் பாலம் விரைவில் பழுதுபார்க்கப்பட்டு, 1948 செப்டம்பர் 7-ஆம் தேதி போக்குவரத்திற்கு மீண்டும் திறக்கப்பட்டது. இந்தப் பாலத்திற்கு அருகில் மேலும் ஒரு புதிய பாலம் கட்டப்பட்டது. அதனால் கில்மார்ட் பாலம் இப்போது தொடருந்துகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Latar Belakang". 11 November 2015.
- ↑ "Raremaps.com". பார்க்கப்பட்ட நாள் 10 January 2017.