கெர்லிங், (மலாய்: Bandar Kerling; ஆங்கிலம்: Kerling; சீனம்: 老太太); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், உலு சிலாங்கூர் மாவட்டத்தில் (Hulu Selangor District) உள்ள ஒரு சிறு நகரம்; ஒரு முக்கிம். இந்த நகரத்திற்கு மிக அருகாமையில் கோலா குபு பாரு; மற்றும் களும்பாங் நகரங்கள் உள்ளன.

கெர்லிங்
Kerling
Map
கெர்லிங் is located in மலேசியா
கெர்லிங்

      கெர்லிங்       மலேசியா
ஆள்கூறுகள்: 3°35′34.5084″N 101°36′13.6440″E / 3.592919000°N 101.603790000°E / 3.592919000; 101.603790000
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்உலு சிலாங்கூர் மாவட்டம்
நிர்வாக மையம்கோலா குபு பாரு
அரசு
 • ஊராட்சிஉலு சிலாங்கூர் நகராட்சி
(Ulu Selangor District Council)
நேர வலயம்மலேசிய நேரம்
ஒ.ச.நே +8
அஞ்சல் குறியீடு
44100
தொலைபேசி எண்கள்+603-6048
போக்குவரத்துப் பதிவெண்கள்B
இணையதளம்mdhs.gov.my

மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 67 கி.மீ.; தஞ்சோங் மாலிம் நகரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.[1]

இந்த நகரில் உள்ள கெர்லிங் வெந்நீர் ஊற்று (Kerling Hot Spring) உள்ளது. மலேசியாவில் பிரபலமான வெந்நீர் ஊற்றுகளில் ஒன்றாக அறியப் படுகிறது. இந்த இடம் உள்ளூர் மக்களிடையே குறிப்பாக பள்ளி விடுமுறை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பிரபலமானது.[2]

பொது

தொகு

கெர்லிங் வெந்நீர் ஊற்று

தொகு

கெர்லிங் வெந்நீர் ஊற்று ஒரு செவ்வக குளத்தில் கல் மற்றும் சுவர்கள் கொண்ட பாதுகாப்பு தடைகளால் சூழப்பட்டுள்ளது. நீரூற்றின் நீர் எப்போதும் சூடாகவே இருக்கும். இந்தக் குளத்தை உலு சிலாங்கூர் நகராட்சி (Hulu Selangor Municipal Council) பராமரித்து வருகிறது.

கெர்லிங் நிகழ்ச்சி

தொகு

1978-ஆம் ஆண்டில் கெர்லிங் நகரில் இருந்த ஓர் இந்துக் கோயில்; சில மதத் தீவிரவாதிகளால் உடைக்கப்பட்டது. அப்போது அந்தக் கோயிலில், காவலில் இருந்த இளைஞர்கள்; அந்தக் கோயிலின் சிலை உடைப்புகளில் ஈடுபட்ட ஐவரைக் கொன்றனர். கெர்லிங் நிகழ்ச்சி (Kerling Incident) என அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சி பன்னாட்டு அளவில் அறியப்பட்டது.[3]

பன்முகக் கலாசாரம் கொண்ட மலேசியாவில்; இந்து கோயில்கள் உடைக்கப் படுவது அல்லது அழிக்கப் படுவது, பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. அந்த நிகழ்வுகள் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு நீண்ட காலமாகப் போராடி வரும் ஒரு நாட்டில் மத பதற்றங்களைத் தூண்டி வந்தன.[4]

நாட்டில் ஆயிரக் கணக்கான இந்துக் கோயில்கள் உள்ளன. அவை பல தனியார் நிலங்களிலும் அல்லது தோட்ட நிலங்களிலும் கட்டப் பட்டவை. 1957-ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இந்தியாவில் இருந்து இங்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் கட்டப்பட்ட கோயில்கள் ஆகும்.[3]

மனித உரிமைக் குழுக்கள் எதிர்ப்பு

தொகு

நாட்டின் புதிய வளர்ச்சிகள் எனும் பெயரில், வரலாற்று மதிப்புமிக்க பல கோயில்கள், மண்தகரிகள் மூலம் அகற்றப் படுவதாவும்; அவற்றினால் நாட்டின் சிறுபான்மை இந்து சமூகத்தினரிடையே கோபம் அதிகரித்து வருவதாகவும்; சில மலேசிய மனித உரிமைக் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அத்துடன் மலேசிய அரசியல்வாதிகள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.[4]

பல மாநிலங்களில் இந்து கோயில்கள் அமைந்து இருந்த நிலங்கள்; உள்ளூராட்சி மன்றங்கள் அல்லது மாநில அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டன. அந்தக் கோயில்கள் சட்டவிரோத கட்டிடங்கள் என்றும் அவர்கள் வாதிட்டனர்; மற்றும் அவற்றை இடித்தும் வந்தனர்.[5]

அந்தக் கெர்லிங் நிகழ்ச்சியில் (Kerling Incident) கோயிலின் சிலை உடைப்புகளில் ஈடுபட்ட ஐவர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாட்டளவிலும் பன்னாடு அளவிலும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. தாக்குதல் நடத்திய கெர்லிங் கோயில் இளைஞர்கள் அனைவருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவர்களின் சார்பில் முன்னாள் ம.இ.கா. பொதுச் செயலாளர் டி.பி. விஜேந்திரன் MIC Secretary-General DP Vijandran வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[5]

கெர்லிங் தமிழ்ப்பள்ளி

தொகு

1940-ஆம் ஆண்டுகளில் கெர்லிங் தோட்டத்தின் 3 பிரிவுகளில், தனித்தனியாக மூன்று தமிழ்ப்பள்ளிகள் இருந்து இயங்கி வந்தன. அந்த மூன்று தமிழ்ப் பள்ளிகளும் 1980-ஆம் ஆண்டில் இணைக்கப் பட்டதும்; கெர்லிங் தமிழ்ப்பள்ளி உருவானது. தற்சமயம் 4.5 ஏக்கர் நிலத்தில் இந்தப் பள்ளி அமைந்து இருக்கிறது.

கெர்லிங் தமிழ்ப்பள்ளியில் 110 மாணவர்கள் பயில்கிறார்கள்; 12 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். 2020-ஆம் ஆண்டில் மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள். [6]

தோட்டத் துண்டாடலினால் பள்ளி பாதிப்பு

தொகு

2014-ஆம் ஆண்டில், தோட்டத் துண்டாடலுக்குப் பிறகு, இந்தத் தோட்டத்தின் தொழிலாளர்கள் பலர் புலம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றனர். அதன் பிறகு, 300 மாணவர்கள் பயின்ற இந்தப் பள்ளி படிப்படியாகச் சரிவு கண்டது; இறுதியாக 58 மாணவர்கள் எனும் நிலையை அடைந்தது.[7]

பள்ளியின் ஆசிரியர்கள், பள்ளியின் நிர்வாகத்தினர், பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர் சங்கம் என பள்ளியின் அனைத்துத் தரப்பினரின் முழு ஒத்துழைப்பினால், 2020-ஆம் ஆண்டில் இப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 58-இல் இருந்து 110-ஆக உயர்ந்தது.[7]

தொலைநோக்குப் பள்ளி

தொகு

2020-ஆம் ஆண்டில் இப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் சுகாசினி; தனலட்சுமி ஆகிய இருவரும் குறுக்கு ஓட்டத்தில் (cross country) தேசிய அளவில் முதலாம்; இரண்டாம் நிலைகளில் வெற்றி பெற்றுள்ளனர்.[7]

இப்பள்ளியில் மழலையர் வகுப்பு, மாணவர் தங்கும் விடுதி, நூல்நிலையம், பெரிய விளையாட்டுத் திடல், கணினி அறை, ஆசிரியர்களுக்கான அறை, கருவள அறை என கல்விக்கு ஊக்கம் அளிக்கும் பல வசதிகள் உள்ளன. இப்பள்ளியின் தலைமையாசிரியர் குமார்.[7]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
BBD5047 கெர்லிங் தோட்டம் SJK(T) Ladang Kerling கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 44100 கெர்லிங் 110 12

கற்றல் கற்பித்தல்

தொகு

மாணவர்களுக்கான உணவு; மாணவர்களுக்கான போக்குவரத்து; ஆகியவை பள்ளியில் வழங்கப் படுகின்றன. காலை உணவும் மதிய உணவும் பள்ளியில் முற்றிலும் இலவசமாக கிடைக்கின்றன. அத்துடன் மாணவர்களுக்கான பேருந்து போக்குவரத்து வசதியும் இலவசம்.

மாணவர் எண்ணிக்கை உயர்வு
2014 2015 2016 2017 2018 2019 2020
58 65 83 93 103 103 110

அந்த வகையில், மாணவர்களின் வருகை சிக்கல் இல்லாமல் தொடர்கிறது; கற்றல் கற்பித்தல் திறன் உயர்கிறது. அத்துடன் அரசாங்க மழலையர் வகுப்பு இந்தப் பள்ளியில் இருப்பதால், பெரும்பாலும் முதலாம் ஆண்டுக்கு மாணவர் கிடைப்பதில் பிரச்சினைகள் ஏற்படுவது இல்லை.[7]

தேர்ச்சி நிலை உயர்வு

தொகு

2014-ஆம் ஆண்டில் இருந்து 2020-ஆம் ஆண்டுக்குள் ஏறக்குறைய 90 விழுக்காடு மாணவர் எண்ணிக்கை உயர்வை இந்தப்பள்ளி பதிவு செய்து உள்ளது. அதே வேளையில், பள்ளியின் ஆறாம் ஆண்டு (யூ.பி.எஸ்.ஆர்.) தேர்ச்சி நிலையில், 2019-இல் மலாய்மொழி (92%) தவிர, மற்ற அனைத்து பாடங்களிலும் 100 விழுக்காடு உயர்வு கண்டுள்ளது.

குறைவான மாணவர் எண்ணிக்கையில் இருந்தாலும்; அறிவியல், விளையாட்டு, மொழிப்படைப்பு உள்ளிட்ட பல பிரிவுகளில்; இந்தப் பள்ளி தேசிய அளவில் நிறைவான சாதனைகளைப் படைத்து வருகின்றது.[8]

மேற்கோள்

தொகு
  1. "Kerling is a small town located in the province of Selangor, Malaysia, right to the southeast of Kuala Kubu Bharu. It is a historic settlement which used to be the capital of an old small Hindu empire". www.latlong.net. பார்க்கப்பட்ட நாள் 11 May 2023.
  2. "Kerling Hot Spring is a naturally hot spring (kolam air panas) located near the small town of Kerling in northern Selangor". Malaysia Traveller. பார்க்கப்பட்ட நாள் 11 May 2023.
  3. 3.0 3.1 "Anger over Malaysia temple razings: The so-called 1978 Kerling incident saw Hindu devotees killing a group of five conservative Muslims who were caught desecrating a temple". www.aljazeera.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 May 2023.
  4. 4.0 4.1 "The destruction of Hindu temples by authorities in multicultural Malaysia is inflaming religious tensions in a country which has long struggled to maintain ethnic harmony. Rights groups and politicians say that anger is growing among the country's minority Hindu community as temples, many of historic value, are bulldozed at the rate of at least one every few weeks to make way for new developments". பார்க்கப்பட்ட நாள் 12 May 2023.
  5. 5.0 5.1 "The wanton destruction of Hindu temples by local councils in several states must now stop as it could fan religious and racial animosity among Malaysians, Gerakan Youth warned today. The local authorities have blatant disrespect for other religions in this country and for violating the Federal Constitution by their disrespectful manner in which places of worship have been demolished". poobalan.com. பார்க்கப்பட்ட நாள் 12 May 2023.
  6. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 "கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வெற்றிக்கதை – முனைவர் குமரன் வேலு". Malaysiakini. 25 December 2020. பார்க்கப்பட்ட நாள் 12 May 2023.
  8. "சிகரம் தொடும் இம்மாணவர்களின் முயற்சிகளுக்காக, ஊக்கமூட்டும் வகையில் கூடுதல் உதவிகளை வழங்க முன் வந்திருக்கின்றார் KEB.SO LIFE எனப்படும் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மாநில சமூக நல சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜோன் ராஜேந்திரன்". பார்க்கப்பட்ட நாள் 12 May 2023.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெர்லிங்&oldid=3998462" இலிருந்து மீள்விக்கப்பட்டது