உலு சிலாங்கூர் மாவட்டம்
உலு சிலாங்கூர் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Hulu Selangor; ஆங்கிலம்: Hulu Selangor District; சீனம்: 乌鲁雪兰莪县) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம்.
ஆள்கூறுகள்: 3°35′N 101°35′E / 3.583°N 101.583°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
தொகுதி | கோலா குபு பாரு |
உள்ளூராட்சி | உலு சிலாங்கூர் நகராட்சி மன்றம் |
அரசு | |
• நகராட்சி மன்றத் தலைவர் | முகமட் அனாபி பாசிரி[1] |
• மாவட்ட அதிகாரி | முசா ரான்லி |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,756.30 km2 (678.11 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,94,387 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+8 (பயன்பாடு இல்லை) |
அஞ்சல் குறியீடுகள் | 44xxx, 482xx |
இடக் குறியீடு | +6-03 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | B |
இந்த மாவட்டத்திற்கு வடக்கில் பேராக் மாநிலம்; கிழக்கில் பகாங் மாநிலம்; வட மேற்கில் சபாக் பெர்ணம் மாவட்டம்; தென் மேற்கில் கோலா சிலாங்கூர் மாவட்டம்; & கோம்பாக் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
உலு சிலாங்கூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: செரண்டா; பத்தாங்காலி; கோலா குபு பாரு. இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் கோலா குபு பாரு ஆகும்.[2]
சிலாங்கூர் ஆறு இந்த மாவட்டத்தில் தான் உற்பத்தியாகிறது. எனவே இந்த மாவட்டத்திற்கும் அந்த நதியின் பெயரே வைக்கப்பட்டு உள்ளது.[3]
நிர்வாகப் பகுதிகள்
தொகுஉலு சிலாங்கூர் மாவட்டம், உலு சிலாங்கூர் நகராட்சி மன்றத்தால் நிர்வாகம் செய்யப் படுகிறது.
உலு சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்
தொகு- பத்தாங்காலி (Batang Kali)
- பூலோ தெலுர் (Buloh Telor)
- அம்பாங் பெச்சா (Ampang Pechah)
- உலு பெர்ணம் (Ulu Bernam)
- களும்பாங் (Kalumpang)
- கெர்லிங் (Kerling)
- கோலா குபு பாரு (Kuala Kubu Bharu)
- பெரெதாக் (Peretak)
- ராசா (உலு சிலாங்கூர்) (Rasa)
- செரண்டா (Serendah)
- சுங்கை குமுட் (Sungai Gumut)
- சுங்கை திங்கி (Sungai Tinggi)
- புக்கிட் பெருந்தோங் (Bukit Beruntung)
- புக்கிட் செந்தோசா (Bukit Sentosa)
- கம்போங் தீமா எஸ்.கே.சி. (Kg Timah SKC)
- சுங்கை புவாயா (Sungai Buaya)
- லெம்பா பெரிங்கின் (Lembah Beringin)
- உலு யாம் (Ulu Yam)
- உலு யாம் பாரு (Ulu Yam Baharu)
மக்கள் தொகையியல்
தொகுமலேசியப் புள்ளியியல் துறை 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கிய புள்ளிவிவரங்கள்:[4]
உலு சிலாங்கூரில் உள்ள இனக்குழுக்கள் (2010) | ||
---|---|---|
இனம் | மக்கள் தொகை |
விழுக்காடு |
மலாய்க்காரர்கள் | 133,080 | 70.1% |
சீனர்கள் | 23,498 | 12.4% |
இந்தியர்கள் | 32,459 | 17.1% |
இதர இனத்தவர் | 9,698 | 0.4% |
மொத்தம் | 189,836 | 100% |
மலேசிய நாடாளுமன்றம்
தொகுமலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) உலு சிலாங்கூர் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள். 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.[5]
நாடாளுமன்றம் | தொகுதி | உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
P94 | உலு சிலாங்கூர் | ஜுன் லியோவ் இசியாட் ஹுய் | பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்) |
P95 | தஞ்சோங் காராங் | நோ ஒமார் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம்
தொகுசிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் உலு சிலாங்கூர் மாவட்டத்தின் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்.[6]
நாடாளுமன்றம் | மாநிலம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
P94 | N5 | உலு பெர்ணம் | ரோஸ்னி பிந்தி சோகார் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P94 | N6 | கோலா குபு பாரு | லீ கீ ஹியோங் | பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க) |
P94 | N7 | பத்தாங் காலி | அருமாயினி ஒமார் | பெஜுவாங் |
P95 | N8 | பெர்மாத்தாங் | ரோசானா சைனல் அபிடின் | பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்) |
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள நாடாளுமன்ற சட்டமன்றத் தொகுதிகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Portal Rasmi PDT Hulu Selangor Perutusan Pegawai Daerah Hulu Selangor". www.selangor.gov.my. பார்க்கப்பட்ட நாள் 6 December 2021.
- ↑ "SEMPADAN DUN BAGI DAERAH HULU SELANGOR - Portal Rasmi PDT Hulu Selangor Peta Daerah". www.selangor.gov.my. பார்க்கப்பட்ட நாள் 6 December 2021.
- ↑ "Discover Hulu Selangor - Tourism Selangor - Hulu Selangor (formerly called Ulu Selangor) is located in the north of the Klang Valley". பார்க்கப்பட்ட நாள் 6 December 2021.
- ↑ ""Population Distribution and Basic Demographic Characteristics, 2010" (PDF). Department of Statistics, Malaysia. Archived from the original (PDF) on 22 May 2014". பார்க்கப்பட்ட நாள் 6 December 2021.
- ↑ "KUALA LANGAT - SURUHANJAYA PILIHAN RAYA MALAYSIA (SPR) - SEMAKAN CALON PILIHAN RAYA UMUM KE 14". keputusan.spr.gov.my. Archived from the original on 13 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "www.spr.gov.my மலேசியாவின் தேர்தல் ஆணையம் வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள் - 2018". Archived from the original on 2018-05-09. பார்க்கப்பட்ட நாள் 2021-12-06.