கோம்பாக் மாவட்டம்
கோம்பாக் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Gombak; ஆங்கிலம்: Gombak District; சீனம்: 鹅唛县) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு தென்கிழக்கில் மலேசியத் தலைநகரமான கோலாலம்பூர்; கிழக்கில் கெந்திங் மலை அமைந்து உள்ளன.
Gombak District | |
சிலாங்கூர் | |
ஆள்கூறுகள்: 3°16′27.3″N 101°34′14.6″E / 3.274250°N 101.570722°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | கோம்பாக் |
தொகுதி | பண்டார் பாரு செலாயாங் |
உள்ளூராட்சி | செலாயாங் நகராட்சி (மேற்கு) அம்பாங் ஜெயா நகராட்சி |
அரசு | |
• நகராட்சி மன்றத் தலைவர் | அமிருல் அசிசான் ரகிம்[1] |
• மாவட்ட அதிகாரி | வான் மொகமட் பாவான்தே[2] |
பரப்பளவு | |
• மொத்தம் | 650.08 km2 (251.00 sq mi) |
மக்கள்தொகை (2020)[4] | |
• மொத்தம் | 9,42,336 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடுகள் | 48xxx, 52xxx-54xxx, 68xxx |
மலேசியாவில் தொலைபேசி எண்கள் | +6-03-41, +6-03-60, +6-03-61, +6-3-62 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | B |
கோம்பாக் மாவட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கில் அமைந்து உள்ளது. தவிர, கோலாலம்பூர் பெருநகரம்; மற்றும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வேறு சில மாவட்டங்களும் இந்தக் கிள்ளான் பள்ளத்தாக்கில் தான் உள்ளன. கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ள பிற பகுதிகள்: பத்து ஆராங்; குவாங்; ரவாங்; குண்டாங்; கோம்பாக்; செலாயாங்; கெப்போங்; மற்றும் உலு கிள்ளான்.
1974 பிப்ரவரி 1-ஆம் தேதி கோலாலம்பூர் ஒரு கூட்டாட்சி பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அதே நாளில் தான் இந்தக் கோம்பாக் மாவட்டமும் உருவாக்கப்பட்டது. 1997-ஆம் ஆண்டு வரை, ரவாங் நகரம் கோம்பாக் மாவட்டத்தின் தலைநகராக இருந்தது. அதன் பின்னர் பண்டார் பாரு செலாயாங், இந்த மாவட்டத்தின் தலைநகரமாக மாற்றப்பட்டது.
நிர்வாகப் பகுதிகள்
தொகுசெலாயாங் நகராட்சி மன்றம் (மேற்கு); அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் (கிழக்கு); ஆகிய நகராட்சி மன்றங்களால் கோம்பாக் மாவட்டம் நிர்வாகம் செய்யப் படுகிறது.
கோம்பாக் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்
தொகு- பத்து (Batu)
- ரவாங் (Rawang)
- செதபாக் (Setapak)
- உலு கிள்ளான் (Ulu Klang)
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்
தொகுகோபாக் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்
தொகுகோம்பாக் மாவட்டத்தில் 6 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 2,868 மாணவர்கள் பயில்கிறார்கள். 210 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.[5]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
BBD7451 | பத்துமலை | SJK(T) Batu Caves | பத்துமலை தமிழ்ப்பள்ளி | 68100 | பத்துமலை | 1024 | 73 |
BBD7452 | பத்து ஆராங் | SJK(T) Batu Arang | பத்து ஆராங் தமிழ்ப்பள்ளி | 48100 | பத்து ஆராங் | 254 | 25 |
BBD7453 | குவாங் | SJK(T) Kuang | குவாங் தமிழ்ப்பள்ளி | 48050 | ரவாங் | 179 | 16 |
BBD7454 | ஜாலான் கோலா சிலாங்கூர் | SJK(T) Bukit Darah | புக்கிட் டாரா தமிழ்ப்பள்ளி | 47000 | சபாக் பெர்ணம் | 159 | 20 |
BBD7455 | ரவாங் | SJK(T) Rawang | ரவாங் தமிழ்ப்பள்ளி | 48000 | ரவாங் | 1052 | 59 |
BBD7456 | தாமான் மெலாவாத்தி | SJK(T) Taman Melawati | தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி | 53100 | கோலாலம்பூர் | 200 | 17 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Portal Rasmi PDT Gombak Perutusan Pegawai Daerah Gombak". www2.selangor.gov.my.
- ↑ "Portal Rasmi PDT Gombak Orang Besar Daerah Gombak". www2.selangor.gov.my.
- ↑ "Portal Rasmi PDT Gombak Profil Gombak". www2.selangor.gov.my.
- ↑ "Population Distribution and Basic Demographic Characteristics, 2010" (PDF)". www.selangor.gov.my. பார்க்கப்பட்ட நாள் 6 December 2021.
- ↑ "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2021-12-06.
வெளி இணைப்புகள்
தொகு