செலாயாங், (மலாய்: Selayang; ஆங்கிலம்: Selayang; சீனம்: 士拉央); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கோம்பாக் மாவட்டத்தில், செலாயாங் நகராட்சியின் (Selayang Municipal Council) நிர்வாகத் தலைமையகத்தைக் கொண்ட நகரம்; மலேசிய வரலாற்றில் நன்கு அறியப்பட்ட நகரமும் ஆகும். இந்த நகரத்தின் ஒரு சிறிய பகுதி கோலாலம்பூர் மாநகராட்சியின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது.[1]

செலாயாங்
Selayang
செலாயாங் நகரத்தின் ஒரு பகுதி
செலாயாங் நகரத்தின் ஒரு பகுதி
செலாயாங் is located in மலேசியா
செலாயாங்
      செலாயாங்       மலேசியா
ஆள்கூறுகள்: 3°19′13.73″N 101°34′33.32″E / 3.3204806°N 101.5759222°E / 3.3204806; 101.5759222
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்கோம்பாக் மாவட்டம்
நிர்வாக மையம்செலாயாங்
அரசு
 • நகராட்சிசெலாயாங் நகராட்சி/br>(Selayang Municipal Council)
பரப்பளவு
 • மொத்தம்549.33 km2 (212.10 sq mi)
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்7,64,327
நேர வலயம்மலேசிய நேரம்
அஞ்சல் குறியீடு
68100
தொலைபேசி எண்கள்+60-3
போக்குவரத்துப் பதிவெண்கள்B
இணையதளம்mps.gov.my

1950-ஆம் ஆண்டுகளில், மலேசியாவில் தமிழர்கள் கணிசமான அளவிற்கு வாழ்ந்த இடங்களில் செலாயாங் நகரமும் ஒன்றாகும். மலேசிய இந்தியர் சமூகத்தைச் சேர்ந்த கல்விமான்கள்; சமூக ஆர்வலர்கள்; எழுத்தாளர்கள்; ஆசிரியர்கள் பலரை உருவாக்கிய பெருமை இந்த செலாயாங் நகரத்திற்கு உண்டு.

இந்த நகர்ப் பகுதியில் சீனர்கள் அதிகமாக வாழ்ந்தாலும் தமிழர்களின் மக்கள் தொகையும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு உள்ளது.

வரலாறு

தொகு

1900-ஆம் ஆண்டுகளில், இங்கு நிறைய ஈயச் சுரங்கங்கள் இருந்தன. செலாயாங் நகர்ப் பகுதிக்கு அருகாமையில் இருக்கும் பத்துமலை பகுதியில் ரப்பர் தோட்டங்கள்; மிளகுத் தோட்டங்கள், காபி தோட்டங்கள் அறிமுகப் படுத்தப்பட்டன.

அதன் பின்னர், 1970-களில், செலாயாங் நகர்ப் பகுதியில், தனியார் நிறுவனங்கள் அடுக்குமாடி குடியிருப்பு வசதித் திட்டங்களைத் தோற்றுவித்தன.[2]

பொது

தொகு

வடகிழக்கில் சிலாங்கூர் மாநிலத்தின் நுழைவாயிலாக இருக்கும் கோம்பாக் மாவட்டத்தில் செலாயாங் நகராட்சி கழகம் (Majlis Perbandaran Selayang) (MPS) அமைந்துள்ளது. கீழ்க்காணும் நகராட்சிகள் எல்லைகளாக உள்ளன.[1]

கெப்போங்-செலாயாங் நெடுஞ்சாலை

தொகு

ஈப்போ சாலை வழியாக ரவாங்கிற்குச் செல்லும் தலைமைச் சாலையில் செலாயாங் அமைந்துள்ளது. மேலும் இந்த நகரம் கூச்சிங் சாலை (Jalan Kuching); மற்றும் ரவாங் - கோலாலம்பூர் நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது.[3]

கெப்போங்-செலாயாங் நெடுஞ்சாலை (Kepong–Selayang Highway) வழியாக கெப்போங் (Kepong) நகரைக் கடந்து டாமன்சாரா (Damansara) நகருக்குச் செல்வதற்கு செலாயாங் ஒரு சந்திப்பு முனையாகவும் அமைகிறது. கிழக்கில் செலாயாங் மற்றும் கோம்பாக் (Gombak) நகரை பத்துமலை சாலை (Jalan Batu Caves) இணைக்கிறது. ஆண்டுதோறும் தைப்பூச கொண்டாட்டத்தின் போது இந்தச் சாலை மூடப்படும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "The Selayang Municipal Council (MPS) is located in the Gombak district which is the gateway to the State of Selangor in the northeast. It is bordered by Kuala Lumpur City Hall (DBKL) and Kuala Selangor Municipal Council (MPKS) to the west, Hulu Selangor District Council (MDHS) to the north and Petaling Jaya City Council (MBPJ) to the southwest". பார்க்கப்பட்ட நாள் 9 May 2023.
  2. "Selayang is a large and developing township in the Gombak region. This rapidly evolving neighbourhood is strategically located on the Selangor-Wilayah Persekutuan state border, on the major route to Rawang along Jalan Ipoh. The area's relatively good accessibility to Kuala Lumpur". பார்க்கப்பட்ட நாள் 9 May 2023.
  3. "Selayang Travel Guide 2023 - Located in Selangor, Malaysia, Selayang is home to an impressive selection of attractions and experiences, making it well worth a visit". TRIP.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 May 2023.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செலாயாங்&oldid=3996982" இலிருந்து மீள்விக்கப்பட்டது