கோலா சிலாங்கூர் நகராட்சி

கோலா சிலாங்கூர் நகராட்சி (மலாய்: Majlis Perbandaran Kuala Selangor; ஆங்கிலம்: Kuala Selangor Municipal Council); (சுருக்கம்: MPHS) என்பது மலேசியா, சிலாங்கூர், கோலா சிலாங்கூர் மாவட்டம் (Kuala Selangor District); மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களை நிர்வகிக்கும் நகராட்சி ஆகும். இந்த நகராட்சி மலேசியாவின் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் இயங்குகிறது.[3]

கோலா சிலாங்கூர் நகராட்சி

Kuala Selangor Municipal Council
Majlis Perbandaran Kuala Selangor
கோலா சிலாங்கூர் நகராட்சி சின்னம்
வரலாறு
தோற்றுவிப்பு6 பிப்ரவரி 1978
தலைமை
நகர முதல்வர்
ரகிலா ரகுமட்
(Rahilah Rahmat)
8 செப்டம்பர் 2021[1]
கட்டமைப்பு
உறுப்பினர்கள்24
அரசியல் குழுக்கள்
நகராட்சி மன்ற உறுப்பினர்கள்:
கூடும் இடம்
கோலா சிலாங்கூர் நகராட்சி தலைமையகம்
Jalan Majlis, 45000 Kuala Selangor
சிலாங்கூர்
வலைத்தளம்
www.mpks.gov.my
அரசியலமைப்புச் சட்டம்
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா)
Local Government Act 1976

கோலா சிலாங்கூர் நகராட்சி, சிலாங்கூர் மாநிலச் சட்டக் கையேடு 18/78 (Selangor State Law Handbill 18/78) மூலம், 1978 பிப்ரவரி 6-ஆம் தேதி உருவாக்கப்பட்டது; 119,452 எக்டேர் பரப்பளவைக் கொண்டது.[3]

மாவட்ட ஊராட்சிகள்

தொகு

கோலா சிலாங்கூர் நகராட்சி ஐந்து கிராமப்புற மாவட்ட ஊராட்சிகளை (Local Council) கொண்டது.

  • கோலா சிலாங்கூர் ஊராட்சி (Kuala Selangor Local Council)
  • தஞ்சோங் காராங் ஊராட்சி (Tanjong Karang Local Council)
  • பத்தாங் பெர்ஜுந்தை ஊராட்சி (Batang Berjuntai Local Council)
  • ஈஜோக் ஊராட்சி (Ijok Local Council)
  • ஜெராம் ஊராட்சி (Jeram Local Council')

பொது

தொகு

பொறுப்புகள்

தொகு

கோலா சிலாங்கூர் மாவட்டம்

தொகு

கோலா சிலாங்கூர் மாவட்டத்திற்கு (Kuala Selangor District) வடக்கில் சபாக் பெர்ணம் மாவட்டம்; மேற்கில் உலு சிலாங்கூர் மாவட்டம்; & கோம்பாக் மாவட்டம்; தென் மேற்கில் பெட்டாலிங் மாவட்டம்; தெற்கில் கிள்ளான் மாவட்டம்; ஆகிய மாவட்டங்கள் உள்ளன

கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: தஞ்சோங் காராங்; கோலா சிலாங்கூர். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் கோலா சிலாங்கூர்.[4]

இந்த மாவட்டத்தைக் கோலா சிலாங்கூர் பிரிவு; தஞ்சோங் காராங் பிரிவு; என இரு பிரிவுகளாக சிலாங்கூர் ஆறு பிரிக்கின்றது. சிலாங்கூர் ஆறு இந்த மாவட்டத்தை ஊடுருவிச் செல்வதால் அந்த ஆற்றின் பெயரே கோலா சிலாங்கூர் நகரத்திற்கும் மாவட்டத்திற்கும் வைக்கப்பட்டு உள்ளது.

நிர்வாகப் பகுதிகள்

தொகு

கோலா சிலாங்கூர் மாவட்டம், கோலா சிலாங்கூர் நகராட்சி மன்றத்தால் நிர்வாகம் செய்யப் படுகிறது.

கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்

தொகு
  1. அப்பி அப்பி (Api-Api)
  2. பெஸ்தாரி ஜெயா (Bestari Jaya)
  3. உஜோங் பெர்மாத்தாங் (Hujong Permatang)
  4. உலு திங்கி (Hulu Tinggi)
  5. ஈஜோக் (Ijok)
  6. ஜெராம் (Jeram)
  7. கோலா சிலாங்கூர் (Kuala Selangor)
  8. பாசாங்கான் (Pasangan)
  9. தஞ்சோங் காராங் (Tanjung Karang)

கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்

தொகு

கோலா சிலாங்கூர் நகராட்சிக்கு உடபட்ட கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் 17 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 1,676 மாணவர்கள் பயில்கிறார்கள். 221 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியாவில் அதிகமான தமிழ்ப்பள்ளிகள் உள்ள மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.[5][6]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
BBD3048 பெஸ்தாரி ஜெயா
(பத்தாங் பெர்ஜுந்தை)
SJK(T) Bestari Jaya[7] பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி 45600 பெஸ்தாரி ஜெயா 495 39
BBD3049 ஜெராம் SJK(T) Ldg Braunston[8] பிராவுண்ஸ்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி 45800 ஜெராம் 90 14
BBD3051 புக்கிட் செராக்கா தோட்டம் SJK(T) Ldg Bukit Cheraka[9] புக்கிட் செராக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி 45800 ஜெராம் 119 15
BBD3052 புக்கிட் ஈஜோக் தோட்டம் SJK(T) Ldg Bkt Ijok
(மூடப்பட்டு விட்டது. 2021-க்குள் சுங்கை பீலேக், சிப்பாங் பகுதிக்கு இடம் பெயர்கிறது)[10]
புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி 45800 ஜெராம் * *
BBD3055 சுங்கை பூலோ
Bandar Seri Coalfields
SJK(T) Ldg Coalfields கோல்பீல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 47000 சுங்கை பூலோ 100 11
BBD3056 சுங்கை பூரோங்
செகிஞ்சான்
Sekinchan
SJK(T) Ghandiji Sekinchan காந்திஜி தமிழ்ப்பள்ளி செகிஞ்சான் 45400 பந்திங் 22 7
BBD3057 ஹோப்புள் தோட்டம் SJK(T) Ldg Hopeful ஹோப்புள் தோட்டத் தமிழ்ப்பள்ளி 45600 பெஸ்தாரி ஜெயா 17 7
BBD3058 கம்போங் பாரு தோட்டம் SJK(T) Ldg Kg Baru கம்போங் பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி 45000 கோலா சிலாங்கூர் 19 7
BBD3060 சுங்கை தெராப் தோட்டம் SJK(T) Ladang Sungai Terap சுங்கை தெராப் தோட்டத் தமிழ்ப்பள்ளி 45000 கோலா சிலாங்கூர் 46 10
BBD3061 கோலா சிலாங்கூர் தோட்டம் SJK(T) Ldg Kuala Selangor கோலா சிலாங்கூர் தோட்டத் தமிழ்ப்பள்ளி 45700 புக்கிட் ரோத்தான் 62 11
BBD3064 கோலா சிலாங்கூர் SJK(T) Ldg Raja Musa ராஜா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளி 45000 கோலா சிலாங்கூர் 36 10
BBD3065 புக்கிட் ரோத்தான் SJK(T) Bukit Rotan Baru புக்கிட் ரோத்தான் பாரு தமிழ்ப்பள்ளி 45700 புக்கிட் ரோத்தான் 40 10
BBD3066 புக்கிட் பெலிம்பிங்
Bukit Belimbing
SJK(T) Ldg Riverside ரீவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 45000 கோலா சிலாங்கூர் 50 10
BBD3068 சிலாங்கூர் ரீவர் தோட்டம் SJK(T) Ldg Selangor River சிலாங்கூர் ரீவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி 45700 புக்கிட் ரோத்தான் 87 13
BBD3069 சுங்கை பூலோ தோட்டம் SJK(T) Ldg Sg Buloh சுங்கை பூலோ தோட்டத் தமிழ்ப்பள்ளி 45700 கோலா சிலாங்கூர் 29 7
BBD3071 சுங்குரும்பை தோட்டம் SJK(T) Ldg Sg Rambai சுங்குரும்பை தோட்டத் தமிழ்ப்பள்ளி 45600 பெஸ்தாரி ஜெயா 46 11
BBD3072 துவான் மீ தோட்டம் SJK(T) Ladang Tuan Mee துவான் மீ தோட்டத் தமிழ்ப்பள்ளி 47000 சுங்கை பூலோ 57 11
BBD3073 கோலா சிலாங்கூர் SJK(T) Vageesar வகீசர் தமிழ்ப்பள்ளி 45000 கோலா சிலாங்கூர் 361 28

மேற்கோள்கள்

தொகு
  1. "YDP's Profile". Official Portal of Kuala Selangor Municipal Council (MPKS). 6 January 2016. Archived from the original on 7 டிசம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Portal Kerajaan Negeri Selangor Darul Ehsan". www.selangor.gov.my. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021.
  3. 3.0 3.1 "In the 25 years since its establishment, MPKS has gone through a series of expansion of its area starting with the gazetting of the area as shown in gazetted plan PW 459 which was gazetted on 6 February 1978,". பார்க்கப்பட்ட நாள் 10 May 2023.
  4. "SEMPADAN DUN BAGI DAERAH HULU SELANGOR - Portal Rasmi PDT Hulu Selangor Peta Daerah". www.selangor.gov.my. பார்க்கப்பட்ட நாள் 6 December 2021.
  5. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2021-12-06.
  6. "கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் - Schools". Official Portal of Kuala Selangor Municipal Council (MPKS). 6 January 2016. Archived from the original on 7 டிசம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. Razak, Najib (28 April 2013). "பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி - Majlis Perasmian SJKT Bestari Jaya". பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
  8. "பிராவுண்ஸ்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி - GO English! 2018-19 Project Video (SJKT Ladang Braunston #1)" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
  9. "புக்கிட் செராக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK(T) Ladang Bukit Cheraka Menyambut Hari Merdeka" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
  10. "Teo Nie Ching (张念群)". www.facebook.com.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு