கெஅடிலான் (keADILan) என்பது மலேசியாவில் இயங்கிய ஓர் அரசியல் கட்சி ஆகும். தற்போது இந்தக் கட்சி மக்கள் நீதிக் கட்சியுடன் இணைக்கப்பட்டு உள்ளது. 10 டிசம்பர் 1998-இல் உருவாக்கப்பட்ட கெஅடிலான் கட்சி மலேசிய அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய கட்சி என அறியப்படுகிறது.

மக்கள் நீதிக் கட்சி
KEADILAN
ஆலோசகர்டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம்
தலைவர்டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில்
துணை தலைவர்
உதவித் தலைவர்(கள்)
அஸ்மீன் அலி
சிவராசா ராசையா
சுரேந்திரன் நாகராஜன்
நூருள் இசா அன்வார்
சுவா தியான் சாங்
பாவ்சியா சாலே
பொது செயலாளர்சைபுதின் நாசுதியோன்
தொடக்கம்ஏப்ரல் 1, 2008
தலைமையகம்கோலாலம்பூர், மலேசியா
செய்தி ஏடுநீதி குரல்
இளைஞர் அமைப்புபிகேஆர் இளைஞர் பிரிவு
கொள்கைசமூக தாராளவாதம்
தேசியக் கூட்டணிமாற்று பாரிசான் (1999–2004)
பாக்காத்தான் ராக்யாட் (2008–தற்போது)
நிறங்கள்வெள்ளை, சிவப்பு, நீலம்
மலேசிய மக்களவை
31 / 222
சட்டமன்றங்கள்:
38 / 611
இணையதளம்
www.keadilanrakyat.org
www.keadilandaily.com

தற்போதைய பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் முன்னோடி முதன்மைக் கட்சியாக விளங்கிய கெஅடிலான் கட்சி 3 ஆகஸ்டு 2003-இல் மக்கள் நீதிக் கட்சி என பெயர் மாற்றம் கண்டது. இந்தக் கட்சியை கெடிலான் என்றும் கெஅடிலான் என்றும் அழைப்பது வழக்கம்.

மலேசிய நீதிக் கட்சி அல்லது மக்கள் நீதிக் கட்சி (மலாய்: Parti Keadilan Rakyat, ஆங்கில மொழி: People's Justice Party,) எனும் மலாய் மொழிச் சொல்தொடரின் உருவாக்கமே கெடிலான் என்பதாகும். கெடிலான் எனும் சொல்லின் மற்றோர் அழைப்புச் சுருக்கம் பி.கே.ஆர். பி என்றால் (Parti தமிழ் : கட்சி); கே என்றால் (Keadilan தமிழ் : நீதி); ஆர் என்றால் (Rakyat தமிழ் : மக்கள்).

பின்னணி

தொகு

1999-ஆம் ஆண்டு மலேசியாவின் துணைப் பிரதமராக இருந்த அன்வார் இப்ராகிம் ஊழல், ஒழுக்கக் கேடு காரணமாகக் கைது செய்யப்பட்டார்.[1] அவர் மீது குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு, ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் பெற்றார்.

அந்தக் காலகட்டத்தில் அவருடைய மனைவி டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயில், மக்கள் நீதிக் கட்சியைத் தோற்றுவித்தார்.[2] அந்த இயக்கத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய அப்போதைய அரசாங்கம் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது.

வரலாற்றுச் சாதனை

தொகு

ஒரு நாட்டின் துணைப்பிரதமராக இருந்த ஒருவர், அரசியல் காரணங்களுக்காகச் சிறைவாசம் அனுபவிப்பதை விரும்பாத பொதுமக்களில் பலர், கணிசமான அளவிற்கு மக்கள் நீதிக் கட்சியில் சேர்ந்தனர். 2003-ஆம் ஆண்டில் மக்கள் நீதிக் கட்சியும், மலேசிய மக்கள் கட்சியும் ஒன்றிணைந்து, கெடிலான் கூட்டணியை உருவாக்கின.

அந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஒரே ஒரு நாடாளுமன்ற இடத்தைப் பிடித்த கெடிலான் எனும் மக்கள் நீதிக் கட்சி, 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 31 இடங்களைப் பிடித்தது. அது ஒரு வரலாற்றுச் சாதனையாக அறியப்படுகிறது. மலேசியாவில் இண்ட்ராப் எனும் மலேசிய இந்திய சமூக அமைப்பு ஏற்படுத்திய அரசியல் நிலைத் தடுமாற்றத்தில், ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணி மூன்றில் இரண்டு நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்தது.

பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தல்

தொகு

2004-ஆம் ஆண்டு, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், அவர் ஐந்து ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுபடக்கூடாது என்று மலேசிய அரசாங்கம் தடை விதித்தது. அந்தத் தடை 14 ஏப்ரல் 2008இல் நீக்கப்பட்டது. அதற்குள் 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலும் நடந்து முடிந்தது.

அந்தக் கட்டத்தில் அவருடைய மனைவி வான் அசீசா வான் இஸ்மாயில், மலேசிய நாடாளுமன்றத்தின் பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்தார். அன்வார் இப்ராகிம் விடுதலையானதும் பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வான் அசீசா வான் இசுமாயில், அதாவது அன்வார் இப்ராகிமின் மனைவி, தன் நாடாளுமன்றப் பதவியைத் துறப்பு செய்தார்.

அன்வார் இப்ராகிம்

தொகு

அதன் விளைவாக, பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதியில் 2008 ஆகஸ்டு 26-இல் ஓர் இடைத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் அன்வார் இப்ராகிமிற்கு 31,195 வாக்குகள் கிடைத்தன. அன்வார் இப்ராகிம் 15,671 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாரிசான் நேசனல் வேட்பாளர் அரிப் சா ஒமார் சாவிற்கு 15,524 வாக்குகளும், சுயேட்சையாகப் போட்டியிட்டவருக்கு 92 வாக்குகளும் கிடைத்தன. சுயேட்சை வேட்பாளர், தன் வைப்புத் தொகையையும் இழந்தார்.[3]

தற்போது அன்வார் இப்ராகிம், மக்கள் நீதிக் கட்சியின் தலைவராக இருக்கிறார். அவர் மீது சுமத்தப்பட்ட மற்ற குற்றச்சாட்டுகளும், வழக்குகளும் மீட்கப்பட்டுள்ளன.[4]

நாடாளுமன்றத்தில் மக்கள் நீதிக் கட்சி உறுப்பினர்கள்

தொகு

மலேசிய 13வது பாராளுமன்றத்தில் பிகேஆர் உறுப்பினர்கள் தற்போது 30பேர் உள்ளனர் இதில் நான்கு பேர் தமிழர்கள் ஆவர்.

  • கெடா
    • பி09 - அலோர் ஸ்டார் - குய் சியாவ் லியுங்
    • பி10 -கோலால கெடா - அஸ்மாண் இஸ்மாயில்
    • பி15 -சுங்கை பட்டாணி - ஜோகாரி அப்துல்
    • பி17 -பாடாங் செராய் - சுரேந்திரன் நாகராஜன்
  • பினாங்கு
  • பேராக்
  • பகாங்
    • பி82 - இந்திர மாக்கோதா - பாவ்சி அப்துல் ரகுமான்
    • பி83 - குவாந்தான் - பாவ்சியா சாலே
  • சிலாங்கூர்
    • பி97 - செலாயாங் - வில்லியம் லியோங் ஜீ கீன்
    • பி98 - கோம்பாக் - அஸ்மீன் அலி
    • பி99 - அம்பாங் - சூராய்டா கமாருடீண்
    • பி100 - பண்டாண் - ராபிஸி ராம்லி
    • பி104 - கெலானா ஜெயா - வோங் சென்
    • பி105 - தென் பீஜே - ஹீ லோய் சியன்
    • பி107 - சுபாங் - சிவராசா ராசையா
    • பி109 - காப்பார் - ஜி மணிவண்ணன்
    • பி112 - கோலா லங்கட் - அப்துல்லா சனி
  • கூட்டரசு பிரதேசம்
    • பி115 - பத்து - தியான் சுவா
    • பி116 - வங்சா மாஜூ - தான் கீ கோங்
    • பி121 - லெம்பா பன்தாய் - நூருள் இசா அன்வார்
    • பி124 - பண்டார் துன் ரசாக் - அப்துல் காலித் இப்ராஹிம்
  • நெகிரி செம்பிலான்
    • பி132 - தெலுக் கெமாங் - கமருல் பக்ரின்
  • மலாக்கா
    • பி137 - புக்கிட் கட்டில் - சம்சுல் இஸ்கந்தர்
  • ஜொகூர்
    • பி150 - பத்து பகாத் - முகமட் இட்ரிஸ்
  • சபா
    • பி174 - பெனம்பாங் - இக்னேசியஸ்
  • சரவாக்
    • பி219 - மீறி - மைக்கேல் தியொ

கொள்கைப்பாடு

தொகு

ஒரு நியாயமான, ஓர் ஐக்கியமான, வளர்ச்சி பெறும் ஜனநாயக சமூகத்தை உருவாக்கும் நோக்கமே கெடிலான் அரசியல் கூட்டணியின் தலையாயக் கொள்கைப்பாடாக அமைந்து உள்ளது. இருப்பினும், தன் செயல்பாட்டில் சமூகப் பொருளாதார நீதிகளைப் பேணிக் காப்பதிலும்; அரசியல் லஞ்ச ஊழல்களைத் துடைத்தொழிப்பதிலும்; மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Anwar Ibrahim’s integrity while in office, that the authorities have not been able to level any charges of monetary corruption against him after more than a year of sacking as Deputy Prime Minister and Finance Minister, although the authorities must have gone through his records with a fine-tooth comb.
  2. The Birth of Parti Keadilan Nasional: As Good As It Gets.
  3. Anwar Ibrahim wins decisively with a 15,671 majority.
  4. "The stunned disbelief of most Malaysians when Anwar Ibrahim was acquitted on January 9, 2012 is the best proof of public perception that he had hitherto not received a fair trial, with a guilty verdict a foregone conclusion". Archived from the original on செப்டம்பர் 11, 2012. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 24, 2013. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  5. Constitutional changes for PKR.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெஅடிலான்&oldid=4013694" இலிருந்து மீள்விக்கப்பட்டது