கோலா லங்காட் மாவட்டம்
கோலா லங்காட் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Kuala Langat; ஆங்கிலம்: Kuala Langat District; சீனம்: 瓜拉冷岳县) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு வடக்கில் பெட்டாலிங் மாவட்டம் & கிள்ளான் மாவட்டம்; தெற்கில் சிப்பாங் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
கோலா லங்காட் மாவட்டம் | |
---|---|
Daerah Kuala Langat | |
ஆள்கூறுகள்: 2°50′N 101°30′E / 2.833°N 101.500°E | |
தொகுதி | தெலுக் டத்தோ |
உள்ளூராட்சி | கோலா லங்காட் நகராட்சி மன்றம் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | அமிருல் அசிசான்[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 858 km2 (331 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 2,13,876 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடுகள் | 425xx-428xx, 471xx |
இடக் குறியீடு(கள்) | +6-03-31, +6-03-51, +6-03-5614, +6-03-80தொலைபேசிக் குறியீடு |
போக்குவரத்துப் பதிவெண்கள் | B |
கோலா லங்காட் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: பந்திங்; ஜுக்ரா; தெலுக் டத்தோ; மோரிப் மற்றும் கேரி தீவு. கோலா லங்காட் மாவட்டம் எண்ணெய் பனை வேளாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கும் மாவட்டமாகும்.
இந்த மாவட்டம் பல வனக் காப்பங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் முக்கியமானவை: கோலா லங்காட் வடக்கு வனக் காப்பகம் (Kuala Langat North Forest Reserve); மற்றும் கோலா லங்காட் தெற்கு வனக் காப்பகம் (Kuala Langat South Forest Reserve). இந்த இரண்டு காப்பகங்களும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கி வருகின்றன.
நிர்வாகப் பகுதிகள்
தொகுகோலா லங்காட் 7 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப் படுகிறது.
- பண்டார் (Bandar)
- பத்து (Batu)
- ஜுக்ரா (Jugra)
- கெலானாங் (Kelanang)
- மோரிப் (Morib)
- தஞ்சோங் 12 (Tanjung 12)
- தெலுக் பாங்லிமா காராங் (Teluk Panglima Garang)[2]
உள்கட்டமைப்பு
தொகுகோலா லங்காட் மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட புதிய நெடுஞ்சாலைகளால் புத்ரா ஜெயா மற்றும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA), ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இவை கோலா லங்காட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி செய்கின்றன.
மாவட்டத்தின் சாலை கட்டமைப்புகள் நன்றாக உள்ளன. உற்பத்தியாளர்கள் தங்களின் உற்பத்திப் பொருட்களைக் கோலாலம்பூர் மாநகரத்திற்கும், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கும், கிள்ளான் துறைமுகத்திற்கும் கொண்டு செல்வதற்கு சாத்தியமாக்குகின்றன.
தெலுக் பாங்லிமா காராங் வரியற்ற வர்த்தக மண்டலத்தில், பல மின்னியல் பாகங்கள் மற்றும் கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இந்தத் தொழிற்சாலைகள் உள்ளூர் மக்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளன.[3]
மலேசிய நாடாளுமன்றம்
தொகுமலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) கோலா லங்காட் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள். 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.[4]
கோலா லங்காட் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சேவியர் ஜெயகுமார் 2021 மார்ச் 12-ஆம் தேதி பி.கே.ஆர். கட்சியின் உதவித் தலைவர் பதவியில் இருந்து விலகினார். 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் நீர், நில, இயற்கை வள அமைச்சராக சேவியர் ஜெயகுமார் பதவி வகித்து வந்தார்.[5]
நாடாளுமன்றம் | தொகுதி | உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
P112 | கோலா லங்காட் | சேவியர் ஜெயகுமார் | சுயேட்சை |
P113 | சிப்பாங் | முகமட் அனிபா மைடின் | பாக்காத்தான் ஹரப்பான் (அமானா) |
சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம்
தொகுநாடாளுமன்றம் | மாநிலம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
P112 | N51 | சிசங்காங் | அகமட் யூனோஸ் அய்ரி | பெரிக்காத்தான் நேசனல் (பாஸ்) |
P112 | N52 | பந்திங் | லாவ் வெங் சான் | பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க) |
P112 | N53 | மோரிப் | அஸ்னுல் பகாருடின் | பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்) |
P113 | N54 | தஞ்சோங் சிப்பாட் | போர்ஹான் அகமட் ஷா | பெரிக்காத்தான் நேசனல் (பி.கே.ஆர்) |
P113 | N55 | டிங்கில் | அடிப் சான் அப்துல்லா | பெரிக்காத்தான் நேசனல் (பாஸ்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Profil YDP – MAJLIS PERBANDARAN KUALA LANGAT". பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.
- ↑ "Portal Rasmi PDT Kuala Langat Profil Kuala Langat". www.selangor.gov.my. பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.
- ↑ "Senarai Zon Bebas & Pihak Berkuasa Zon". www.customs.gov.my. பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.
- ↑ "KUALA LANGAT - SURUHANJAYA PILIHAN RAYA MALAYSIA (SPR) - SEMAKAN CALON PILIHAN RAYA UMUM KE 14". keputusan.spr.gov.my. Archived from the original on 13 September 2020. பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.
- ↑ "Xavier Jayakumar resigned from PKR party". பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.
வெளி இணைப்புகள்
தொகு