தஞ்சோங் சிப்பாட்

தஞ்சோங் சிப்பாட் (மலாய்: Tanjung Sepat; ஆங்கிலம்: Tanjung Sepat; சீனம்: 丹绒士拔) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கோலா லங்காட் மாவட்டத்தில் (Kuala Langat District) உள்ள ஒரு நகரம். மலேசியாவில் கடல் வகை உணவுகளுக்கு மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்குகிறது.[1]

தஞ்சோங் சிப்பாட்
Tanjung Sepat
தஞ்சோங் சிப்பாட் is located in மலேசியா
தஞ்சோங் சிப்பாட்

      தஞ்சோங் சிப்பாட்       மலேசியா
ஆள்கூறுகள்: 2°40′22″N 101°31′37″E / 2.67278°N 101.52694°E / 2.67278; 101.52694
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்கோலா லங்காட் மாவட்டம்
நிர்வாக மையம்பந்திங்
அரசு
 • ஊராட்சிகோலா லங்காட் ஊராட்சி
(Kuala Langat District Council)
நேர வலயம்மலேசிய நேரம்
ஒ.ச.நே +8
அஞ்சல் குறியீடு
42800
தொலைபேசி எண்கள்++60-03 3197
போக்குவரத்துப் பதிவெண்கள்B

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தென்கிழக்கே 96 கி.மீ.; கிள்ளான் நகரில் இருந்து தெற்கே 60 கி.மீ.; பந்திங் நகரில் இருந்து தெற்கே 50 கி.மீ. தொலைவில் உள்ளது. இதற்கு அருகில் கம்போங் குண்டாங் (Kampung Kundang) எனும் கிராமம் உள்ளது.[2]

இடப் பெயர்

தொகு

தஞ்சோங் சிப்பாட் என்பது ஆங்கிலத்தில் மீன் முனை என்று பொருள்படும். தஞ்சோங் (Tanjung) என்றால் நில முனை; சிப்பாட் (Sepat) என்றால் கௌராமி மீன் (Trichogaster Trichopterus Three Spot Gourami). சில ஆண்டுகளுக்கு முன்னர், மலாக்கா நீரிணையில் ஏற்பட்ட கடல் மாசுபாடு காரணமாக, மீன்பிடி தொழில் குறைந்து இருந்தது. ஆனால் இப்போது தீவிரமடைந்து வருகிறது.[3]

இந்தக் கடற்கரை நகரத்தின் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிக அளவு பன்றி வளர்ப்பு நடைபெறுகிறது. அதனால் சுற்றுச்சூழல் மாசு இது ஏற்படுகிறது என்று பல உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள். கட்டுக்கடங்காமல் கடலில் கலக்கும் கழிவுகளால் துர்நாற்றம் மட்டுமின்றி, மீன்பிடி தொழிலில் ஈடுபடுவோருக்கும் சிரமம் ஏற்படுவதாகவும் அறியப்படுகிறது.[4]

பொது

தொகு
 
கௌராமி மீனுக்கு புகழ்பெற்ற நகரம்

இந்த நகரம் சிலாங்கூர் மாநிலத்தின் தெற்குக் கடற்கரையில் மலாக்கா நீரிணையை எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. அதன் உச்சக் கட்டத்தில், இந்த நகரம் 23,000-க்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டிருந்தது.

இளைய தலைமுறையினர் படிப்படியாக நகரங்களுக்கு வேலைக்காக இடம்பெயர்ந்ததால், சுமார் 10,000 கிராம மக்கள் மட்டுமே இங்கு இப்போது வசிக்கின்றனர். இருப்பினும், அவர்களில் 60% மக்கள் வெளியூர்வாசிகள். 55 வயதைத் தாண்டிய ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வாழ்வதால், தஞ்சோங் சிப்பாட் நகரம் "நீண்ட ஆயுட்கால நகரம்" என்ற பட்டத்தையும் கொண்டுள்ளது.[5]

கிராமப்புற சுற்றுலா தலம

தொகு

தொடக்கக் காலத்தில், பெரும்பாலான கிராமவாசிகள் பன்றி வளர்ப்பவர்களாகவும்; மீன் வளர்ப்பவர்களாகவும் தொழில் புரிந்தனர். தற்போதைய தஞ்சோங் சிப்பாட் நகரம் கிராமப்புற சுற்றுலாத் தலமாக வளர்ந்துள்ளது. கிராமத்தில் உள்ள ஒரே சீனப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. இந்த நகரத்திற்கு அருகில் தும்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளி எனும் ஒரே தமிழ்ப்பள்ளியும் உள்ளது.[6]

தும்போக் தோட்ட தமிழ்ப்பள்ளி

தொகு

தஞ்சோங் சிப்பாட் நகரில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அப்பள்ளியில் 70 மாணவர்கள் பயில்கிறார்கள்; 12 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். 2020-ஆம் ஆண்டில் மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[7]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
BBD1065 தஞ்சோங் சிப்பாட் SJK(T) Ladang Tumbuk[8] தும்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளி 42800 தஞ்சோங் சிப்பாட் 79 12

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Kampung Kundang, Tanjong Sepat - Postcode - 42800". Postcode.my. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
  2. "Tanjung Sepat, a small seaside fishing village is famous for its seafood cuisine and traditional coffee. Despite of being a small village, it is a great tourist place in Malaysia" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 17 February 2022. பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.
  3. "Tanjung Sepat gets its name from the word Tanjung, meaning cape in English, and Sepat, a type of fish. It used to be a fishing village but due to pollution in Straits of Malacca, this activity is becoming less intensive, but still part of the daily scene here". பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.
  4. "Eight pig farms have been identified as the source of effluent discharge at the Tanjung Sepat coastline in Kuala Langat near here. These pig farms were registered with the veterinary department on private land with agriculture land status, said Selangor executive councillor Hee Loy Sian". பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.
  5. "Tanjung Sepat". Archived from the original on 2019-07-06. பார்க்கப்பட்ட நாள் 2017-07-13.
  6. Cultural, Filed under; trips, Day; Langat, Kuala (11 April 2017). "Tanjung Sepat is a small, coastal town located approximately 95 kilometers south of downtown Kuala Lumpur. The town is also an emerging eco/agrotourism destination, with a growing number of visitors arriving over the past decade or so". Visit Selangor. பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.
  7. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  8. "SJKT Ladang Tumbuk". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சோங்_சிப்பாட்&oldid=3998421" இலிருந்து மீள்விக்கப்பட்டது