செஞ்சாரோம்
செஞ்சாரோம் அல்லது ஜென்ஜாரோம் (மலாய்: Jenjarom அல்லது Jenjarum; ஆங்கிலம்: Jenjarom; சீனம்: 仁嘉隆) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கோலா லங்காட் மாவட்டத்தில் (Kuala Langat District) உள்ள ஒரு நகரம் ஆகும்.[1]
செஞ்சாரோம் Jenjarom | |
---|---|
ஆள்கூறுகள்: 3°46′12″N 100°58′48″E / 3.77000°N 100.98000°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | கோலா லங்காட் மாவட்டம் |
நிர்வாக மையம் | பந்திங் |
அரசு | |
• ஊராட்சி | கோலா லங்காட் ஊராட்சி (Kuala Langat District Council) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே +8 |
அஞ்சல் குறியீடு | 42600 |
தொலைபேசி எண்கள் | ++60-3-3191 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | B |
மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து மேற்கே 54 கி.மீ.; கிள்ளான் நகரில் இருந்து தெற்கே 24 கி.மீ. தொலைவில் உள்ளது. தொடக்கக் காலத்தில் ஒரு வேளாண் நகரமாக இருந்த இந்த நகரம் இன்று பிரபலமான சுற்றுலா தலமாக மாறி வருகிறது.[2]
செஞ்சாரோம் நகர்ப் புறத்தில் ஏறக்குறைய 30.000 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் 95% பேர் ஆக்கியன் (Hokkien) சீனர்கள் ஆகும். இவர்களின் பேச்சுவழக்கு மொழிகளில் ஆக்கியன் மொழி முன்னிலை வகித்தாலும்; மாண்டரின் மொழியும் (Malaysian Mandarin); மலேசிய மொழியும் (Malaysian Malay) சரிசமமாகப் பயன்படுத்தப் படுகின்றன.[3]
வரலாறு
தொகுபோர்னியோ தீவில் உள்ள தெற்கு கலிமந்தானை (South Kalimantan) பூர்வீகமாகக் கொண்ட ஓர் இனக் குழுவான பஞ்சார் மொழி (Banjar) பேசும் மக்கள் தான், இந்தப் பகுதியின் தொடக்கக் கால மக்கள் ஆகும். பஞ்சார் மக்கள் 1920-களில் இங்கு வந்து குடியேறினார்கள். அதே நேரத்தில் அல்லது சிறிது காலம் கழித்து, சீனர்களும் வந்து குடியேறியனார்கள்.[2]
ஆக்கியன் மக்களில் பெரும்பாலோர் புஜியான் மாநிலத்தில் (Fujian Province) இருந்து வந்தவர்கள். பிரித்தானியர்களால் ரப்பர் மரங்களை வளர்ப்பதற்காக அவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. இவர்கள் ரப்பர் மரங்களைத் தவிர, காபி, தேயிலை, தென்னை போன்றவற்றையும் பயிரிட்டனர்.[2]
புக்கிட் சீடிங் தேயிலை தோட்டம்
தொகுமலேசிய நாட்டில் 1870-ஆம் ஆண்டுகளில் காபி உற்பத்தி செயல்படத் தொடங்கியது. அந்தக் கட்டத்தில் சிலாங்கூர் மாநிலம் வரலாற்று ரீதியாக தீபகற்ப மலேசியாவின் மிகப்பெரிய காபி உற்பத்தியாளராக இருந்தது. கிள்ளான் மற்றும் கோலாலம்பூரை சுற்றிலும் காபி தோட்டங்கள் இருந்தன.[4]
ஆனாலும், பன்னாட்டுச் சந்தையில் காபி விலையின் ஏற்ற இறக்கங்கள்; காபி விளைநிலங்களைத் தாகிய காபிச் செடி துரு நோய்கள்; மற்றும் ரப்பருக்கு ஏற்பட்ட விலையேற்றம்; ஆகியவை காபி பயிரிடும் தொழிலை நீண்ட காலம் நீடிக்க வைக்கவில்லை. இருப்பினும் புக்கிட் சீடிங் தோட்டத்தில் உருவாக்கப்பட்ட தேயிலை வேளாண்மை மட்டும் இன்று வரையிலும் நிலைத்து நிற்கிறது.[5][6]
பின்னர் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், செஞ்சாரோம் ஒரு வேளாண் கிராமமாகவே இருந்தது. பிரதான தெருவில் சில கடைகள் மட்டுமே இருந்தன. சுற்றுவட்டாரப் பகுதிகளில் சீனர்களின் பன்றி வளர்ப்பு நடைபெற்றது. 20-க்கும் குறைவான சீனர் குடும்பங்கள் மட்டுமே இருந்தன.
ஐக் குவான் சீனப் பள்ளி
தொகுசெஞ்சாரோம் நகரில் முதல் தொடக்கப்பள்ளி ஐக் குவான் சீனப் பள்ளியாகும் (Aik Kuan Chinese School). இது 1924-இல் நிறுவப்பட்டது. மலாயா அவசரகாலத்தின் போது அதன் பெயர் செஞ்சாரோம் சீனத் தொடக்கப்பள்ளி (Sekolah Rendah Cina Jenjarom) என மாற்றப்பட்டது. இன்று அது செஞ்சாரோம் தேசிய சீனத் தொடக்கப்பள்ளி (Sekolah Rendah Kebangsaan Cina Jenjarom) (SJKC) என அழைக்கப்படுகிறது.
செஞ்சாரோம் புதுக்கிராமம் (Kampung Baru Jenjarom) 1950-இல் செஞ்சாரோம் நகருக்குப் பின்புறம் அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் இந்தக் கிராமத்தின் மக்கள் தொகை 4,500-ஆக இருந்தது. 1995-இல் 18,000 ஆகவும், 2012-இல் 25,000 ஆகவும் உயர்ந்தது. அது அப்போது, சிலாங்கூரில் உள்ள மிகப்பெரிய சீன புதிய கிராமங்களில் ஒன்றாகும். இன்று கபோங் செரி ஜாரும் (Kampung Seri Jarum) என்று அழைக்கப் படுகிறது.
செஞ்சாரோம் தமிழ்ப்பள்ளி
தொகுசெஞ்சாரோம் நகரில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அப்பள்ளியில் 201 மாணவர்கள் பயில்கிறார்கள்; 17 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். 2020-ஆம் ஆண்டில் மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[7]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
BBD1055 | செஞ்சாரோம் | SJK(T) Jenjarom[8] | செஞ்சாரோம் தமிழ்ப்பள்ளி | 42600 | செஞ்சாரோம் | 201 | 17 |
சுற்றுலா
தொகுசெஞ்சாரோம் புதுக் கிராமத்தில் (Jenjarom New Village) போ குவாங் சான் டோங் சென் (Fo Guang Shan Dong Zen Temple) எனும் பௌத்த கோயில் (Buddhist Monastery) உள்ளது. இது அங்குள்ள சீன பௌத்த மக்களுக்குச் சேவை செய்கிறது.[9]
2023-ஆம் ஆண்டில் சுமார் 500,000 பார்வையாளர்கள் இந்தக் கோயிலுக்கு வந்தனர். 1999-ஆம் ஆண்டில், மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சினால் இந்தக் கோயில் ஒரு மதச் சுற்றுலா தலமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.[10][11]
காட்சியகம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Jenjarom, a friendly Hokkien new village, Sin Chew Daily, 19 Apr 2014
- ↑ 2.0 2.1 2.2 Volunteers, Author Museum (6 June 2021). "Jenjarom: Located in the district of Kuala Langat, is about 54 kilometres from Kuala Lumpur and 24 kilometres from Klang town. Since its early days, it has been an agricultural town and today, it is turning into a popular tourist spot". Museum Volunteers, JMM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 May 2023.
{{cite web}}
:|first1=
has generic name (help) - ↑ Yeang Soo Ching (2005). "Monastic attraction". The Buddhist Channel. Archived from the original on 2020-11-29. பார்க்கப்பட்ட நாள் 2007-03-04.
- ↑ "Coffee was a major plant in Malaya in the early days, and Klang was also a major planting area". Airbnb (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 May 2023.
- ↑ "Ladang Bukit Cheeding is a estate(s) and is located in Selangor, Malaysia. The estimate terrain elevation above seal level is 45 metres". my.geoview.info. பார்க்கப்பட்ட நாள் 5 May 2023.
- ↑ "Our ancestors worked on this land since early1900s. The Bukit Cheeding tea plantation has earned its reputation globally". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 May 2023.
- ↑ "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
- ↑ "SJK T Jenjarom - செஞ்சாரோம் தமிழ்ப்பள்ளி". www.facebook.com. பார்க்கப்பட்ட நாள் 6 May 2023.
- ↑ "One of the biggest highlights in coastal Selangor during Chinese New Year is the annual Jenjarom Fo Guang Shan Dong Zen Temple's Lantern and Floral Festival". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 May 2023.
- ↑ "Fo Guang Shan Dong Zen Temple CNY Lantern & Floral Festival IS an annual Chinese New Year celebratory event in Kuala Langat". பார்க்கப்பட்ட நாள் 6 May 2023.
- ↑ "In 1999, the temple was officially recognised as a religious tourist destination by the Ministry of Tourism and Culture. The temple's two-week lantern and floral festival not only attracts thousands of visitors (approximately 500,000 people this year) but also helps the local businesses in the village to thrive". பார்க்கப்பட்ட நாள் 6 May 2023.