கம்போங் தீமா எஸ்.கே.சி.

கம்போங் தீமா எஸ்.கே.சி. (மலாய்: Kg Timah SKC; ஆங்கிலம்: SKC Kg Timah; சீனம்: 公斤天马SKC); என்பது மலேசியா, சிலாங்கூர், உலு சிலாங்கூர் மாவட்டம் (Hulu Selangor District), புக்கிட் பெருந்தோங் (Bukit Beruntung) நகர்ப் பகுதிக்கு அருகில் உள்ள ஒரு கிராமம். இந்த கிராமத்தைச் சுற்றிலும் நிறைய ஈயக் குட்டைகள் உள்ளன.

கம்போங் தீமா எஸ்.கே.சி.
Kg.Timah SKC
கம்போங் தீமா வேல் முருகன் ஆலயம்
கம்போங் தீமா வேல் முருகன் ஆலயம்
கம்போங் தீமா எஸ்.கே.சி. is located in மலேசியா
கம்போங் தீமா எஸ்.கே.சி.

      கம்போங் தீமா எஸ்.கே.சி.
ஆள்கூறுகள்: 3°27′06″N 101°33′33″E / 3.45167°N 101.55917°E / 3.45167; 101.55917
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்உலு சிலாங்கூர் மாவட்டம்
நிர்வாக மையம்கோலா குபு பாரு
உருவாக்கம்1990-களில்
அரசு
 • ஊராட்சிஉலு சிலாங்கூர் ஊராட்சி
(Ulu Selangor District Council)
மக்கள்தொகை
 (2021)
 • மொத்தம்120
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
48300[1]
தொலைபேசி எண்கள்+603-602
போக்குவரத்துப் பதிவெண்கள்B
இணையதளம்mdhs.gov.my

மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 54 கி.மீ.; ரவாங் நகரில் இருந்து 20 கி.மீ; வட மேற்கே உள்ளது.

இந்த கிராமத்திற்கு மிக அருகாமையில் உள்ள நகரங்கள் புக்கிட் பெருந்தோங், புக்கிட் செந்தோசா (Bukit Sentosa); அதற்கும் அடுத்த நிலையில் அருகிலுள்ள நகரங்கள் ராசா, (Bandar Rasa), செரண்டா (Serendah) மற்றும் பத்தாங்காலி (Batang Kali) நகரங்கள் ஆகும்.

பொது

தொகு

புக்கிட் பெருந்தோங் கிராமப்புற நகர்ப் பகுதியில் இருந்து ஏறக்குறைய 6 கி.மீ. தொலைவில் கம்போங் தீமா எஸ்.கே.சி. (Kg Timah SKC) கிராமம் உள்ளது.[2] இந்த கம்போங் தீமா எஸ்.கே.சி. கிராமத்தில் ஏறக்குறைய 50 கிராம வீடுகள் உள்ளன. தமிழர்கள் பெரும்பாலோர் அதிகமாக வாழ்கிறார்கள்.[3]

2014-ஆம் ஆண்டில் கம்போங் தீமா எஸ்.கே.சி.யில் இருந்து புக்கிட் பெருந்தோங் தாமான் பூங்கா ராயா (Taman Bunga Raya) வரையில் 6 கி.மீ. தொலைவிற்கு RM 9 மில்லியன் செலவில் கூட்டரசு சாலை நிர்மாணிக்கப்பட்டது.

போக்குவரத்து

தொகு

கடந்த 20 ஆண்டுகாலமாக கம்போங் தீமா எஸ்.கே.சி. மக்கள், புக்கிட் பெருந்தோங், தஞ்சோங் மாலிம், ரவாங் போன்ற நகருக்குச் செல்ல, போக்குவரத்து வசதிகள் இல்லாமல் பெரும் சிரமத்தை அனுபவித்து வந்தனர். ஈயச் சுரங்க மணல் மேடுகளின் வழியாக கம்போங் தீமா எஸ்.கே.சி. கிராமத்திற்குச் செல்லும் சாலை அமைந்து இருந்ததால், மழைக் காலங்களில் மக்கள் பெரும் அவதியுற்றனர்.

இருப்பினும் அங்குள்ள பொதுமக்கள் ஒன்றிணைந்து, தங்களின் அடிப்படை வசதிகளுக்காக ஓர் தன்னார்வ இயக்கத்தை உருவாக்கினர். இந்த இயக்கத்தின் வழி தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர். அத்துடன் அங்குள்ள இந்தியச் சமூக தலைவர்களின் அயராத போராட்டங்களினால் புதிய சாலை கிடைக்கப் பெற்றது.[4]

வரலாறு

தொகு

1940-ஆம் ஆண்டுகளில் கம்போங் தீமா எஸ்.கே.சி.யில் ஏறக்குறைய 60 ஈயச் சுரங்கங்கள் எஸ்.கே.சி. நிறுவனத்தால் (South Kinta Consolidate Tin Mining) தோற்றுவிக்கப்பட்டன. அனைத்தும் சிறிய அளவிலான ஈயச் சுரங்கங்கள். முன்பு கம்போங் தீமா எஸ்.கே.சி. அடர்ந்த காடுகளால் சூழப்பட்டு இருந்தது. இந்த ஈயச் சுரங்கங்களில் அதிகமான சீனர்கள் தொழில் புரிந்தனர்.[5]

1959-ஆம் ஆண்டில் ஈயச்சுரங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. ஈயம் மிகக் குறைவாகக் கிடைத்ததால் கம்போங் தீமா எஸ்.கே.சி. சுற்றுவட்டாரங்களில் இருந்த ஈயச் சுரங்கங்கள் மூடப்பட்டன. அத்துடன் இரண்டாம் உலகப் போர், மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பு (Japanese Occupation in Malaya) மற்றும் உலக ஈயச் சந்தையின் சரிவு போன்ற காரணிகள் சுரங்கங்கள் மூடப்படுவதற்கு வழிவகுத்தன.[5]

ஈயச் சுரங்கங்கள்

தொகு

முன்பு இங்கு ஈயம் தோண்டி எடுக்கப்பட்ட இடங்கள் தற்போது ஈயக் குட்டைகளாக மாறியுள்ளன. அந்தக் குட்டைகளில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. மீன் வளர்ப்புத் துறை உபரி வருமானத்தை ஈட்டித் தரும் துறையாக மாறி வருகிறது.

1950-களில் பிரித்தானியர்கள் ரப்பர் தோட்டங்களை நிறுவினர்; மற்றும் 1970-களின் பிற்பகுதியில் தனியார் நிறுவனங்கள் பாமாயில் தோட்டங்களை உருவாக்கினர். கம்போங் தீமா எஸ்.கே.சி. ஈயச் சுரங்கங்கள் மூடப்பட்டதும், முன்பு அங்கு வாழ்ந்த தமிழர்க் குடும்பங்கள், எஸ்.கே.சி. நிறுவனத்திடம் இருந்து வீடுமனைகள் அமைப்பதற்கு ஈயச்சுரங்க நிலங்களை குத்தகைக்கு எடுத்துக் கொண்டன.

நில உரிமை பிரச்சினை

தொகு

1970-ஆம் ஆண்டுகளில் எஸ்.கே.சி. ஈயச்சுரங்க நிறுவனம் தன் செயல்பாடுகளை வீடுமனை திட்டங்களில் ஈடுபட்டது. அதனால் கம்போங் தீமா எஸ்.கே.சி.யில் இருந்த வீடுமனை நிலங்களுக்கு நில உரிமை பிரச்சினை ஏற்பட்டது. அதன் காரணமாக 1971-ஆம் ஆண்டில் கம்போங் தீமா எஸ்.கே.சி. நில உரிமை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.

அந்த இயக்கத்தின் அரிய முயற்சிகளினால் உலு சிலாங்கூர் மாவட்ட அலுவலகம் அங்குள்ள தமிழர்களுக்கு தற்காலிக நிலப் பட்டாக்களை வழங்கியது. பின்னர் 2000-ஆம் ஆண்டுகளில் அந்தப் பட்டாக்களுக்கு முழு உரிமைகள் கிடைத்தன.

ஸ்ரீ வேல் முருகன் ஆலயம்

தொகு

கம்போங் தீமா எஸ்.கே.சி.யில் ஓர் இந்து ஆலயம் உள்ளது. அதன் பெயர் கம்போங் தீமா ஸ்ரீ வேல் முருகன் ஆலயம் (Kg Timah SKC Kuil Sri Vel Murugan). 2015-ஆம் ஆண்டு சிறப்பான முறையில் கும்பாபிசேகம் நடைபெற்றது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Bukit Beruntung, Rawang - Postcode - 48300 - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 29 April 2023.
  2. "Stesen terdekat untuk ke SKC Kampung Timah adalah: Apartment Anggerik, Bukit Beruntung". பார்க்கப்பட்ட நாள் 22 June 2023.
  3. "Kg Timah SKC, Bukit Beruntung". பார்க்கப்பட்ட நாள் 22 June 2023.
  4. "120130 - Membina Jalan dari Kg. Timah SKC ke Taman Bunga Raya, Bukit Beruntung. Selangor". பார்க்கப்பட்ட நாள் 22 June 2023.
  5. 5.0 5.1 "Rawang's tin mines ceased operation in 1959. Factors like World War II, the Japanese occupation and the collapsed of the world tin market led to mines closure". பார்க்கப்பட்ட நாள் 22 June 2023.
  6. "Kuil Sri Vel Murugan, Kg Timah SKC, Rawang, Selangor". பார்க்கப்பட்ட நாள் 22 June 2023.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்போங்_தீமா_எஸ்.கே.சி.&oldid=3998481" இலிருந்து மீள்விக்கப்பட்டது