தாப்பா தொடருந்து நிலையம்

தாப்பா தொடருந்து நிலையம் எனும் தாப்பா ரோடு தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Tapah Road Railway Station மலாய்: Stesen Keretapi Tapah Road); சீனம்: 打巴路火车站) என்பது மலேசியா, பேராக், பத்தாங் பாடாங் மாவட்டம், தாப்பா ரோடு, தாப்பா நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.[1]

தாப்பா ரோடு
Tapah Road
மலாயா தொடருந்து நிறுவனம் கேடிஎம் இடிஎஸ் கேடிஎம் கொமுட்டர்
தாப்பா தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்35000, தாப்பா, மலேசியா
ஆள்கூறுகள்4°10′22″N 101°11′21″E / 4.17278°N 101.18917°E / 4.17278; 101.18917
உரிமம் மலாயா தொடருந்து
தடங்கள் 1   மலாயா மேற்கு கடற்கரை 
 ETS  கேடிஎம் இடிஎஸ்
நடைமேடை2 நடை மேடை
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking இலவசம்
KTMB நிறுத்துமிடம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
வரலாறு
திறக்கப்பட்டது1893
மறுநிர்மாணம்2007
மின்சாரமயம்2007
சேவைகள்
முந்தைய நிலையம்   தாப்பா   அடுத்த நிலையம்
கம்பார்
 
  Gold  
  சுங்கை >>> கோலாலம்பூர்
கம்பார்
 
  Gold  
  தஞ்சோங் மாலிம் >>> கிம்மாஸ்
கம்பார்
 
  Gold  
  தஞ்சோங் மாலிம் >>> கிம்மாஸ்
கம்பார்
 
  Silver  
  சுங்கை >>> கோலாலம்பூர்
அமைவிடம்
Map
தாப்பா தொடருந்து நிலையம்

தாப்பா ரோடு, தாப்பா, லங்காப், ஆயர் கூனிங் நகரங்களுக்கும் மற்றும் அதன் அருகிலுள்ள கிராமங்களுக்கும் இந்த நிலையம் சேவை செய்கிறது.[2]

இந்த நிலையம் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) கீழ் கேடிஎம் இடிஎஸ் (KTM ETS) தொடருந்து சேவைகளை வழங்குகிறது. அத்துடன் தாப்பா பெரு நகரத்திற்கான முக்கிய தொடருந்து முனையமாகவும் செயல்படுகிறது.[3]

பொது

தொகு

இந்த நிலையத்தின் ஒரு முனையில் சரக்கு முற்றம் உள்ளது. இது ரவாங்-ஈப்போ மின்மயமாக்கப்பட்ட இரட்டை வழித்தடத் திட்டத்திற்கு (Rawang-Ipoh Electrified Double Tracking Project) முன்னதாக உருவாக்கப்பட்டது.

அமைவிடம்

தொகு

பேராக், பத்தாங் பாடாங் மாவட்டத்தில் உள்ள தாப்பா ரோடு நகருக்கு அருகில் உள்ள கம்போங் சங்காட் டெர்மவான் எனும் கிராமப் பகுதியில் இந்த நிலையம் அமைந்துள்ளது. தாப்பா ரோடு நகரம், தாப்பா நகரத்திலிருந்து மேற்கே பத்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். தாப்பா மாரா தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தின் (Universiti Teknologi MARA) (UiTM) வளாகம் இங்கு அமைந்துள்ளது.

வரலாறு

தொகு

இந்த நிலையம் 1880 மற்றும் 1885-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டது. முதல் தொடருந்து நிலையம் மலேசியாவில் உள்ள பழைமையான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். மே 18, 1893-இல், சர் சிசில் கிளெமென்டி இசுமித் (Sir Cecil Clementi Smith) எனும் பிரித்தானிய அதிகாரி, தாப்பா ரோடு தொடருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.[4]

இந்த நிலையம் முக்கியமாக, தாப்பா மாவட்டத்தில் இருந்த ஈயச் சுரங்கங்களின் போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவையில் (Federated Malay States Railways) ஒருங்கிணைக்கப்பட்டது.

பேராக் இரயில்வே

தொகு

1901-ஆம் ஆண்டில், பேராக் இரயில்வே எனும் பேராக் தொடருந்து சேவைக்கான (Perak Railway) தொடருந்து சேவை; சிலாங்கூர் தொடருந்து சேவையுடன் (Selangor Railways) ஒன்றிணைக்கப்பட்டு பின்னர் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை (Federated Malay States Railways) என அறியப்பட்டது.

பேராக் இரயில்வே எனும் பேராக் தொடருந்து சேவைக்கான தொடருந்து பாதைகள் முதன்முதலில் ஈப்போவில் தான் அமைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தாப்பாவிலும் அமைக்கப்பட்டன. பேராக் தொடருந்து சேவை 20 ஆண்டுகள் சேவை செய்தது. [5]

கிம்மாஸ் - பாடாங் பெசார் சேவை

தொகு

கேடிஎம் இடிஎஸ் மற்றும் கேடிஎம் கொமுட்டர் இரண்டு சேவைகளும் கிம்மாஸ் - பாடாங் பெசார் மற்றும் ஈப்போ - பாடாங் பெசார் நிலையங்களுக்கு இடையே சேவையாற்றுகின்றன. கிம்மாஸ் - பாடாங் பெசார் சேவை 11 சூலை 2015 அன்று தொடங்கியது. ஈப்போ - பாடாங் பெசார் சேவை 10சூலை 2015 அன்று தொடங்கியது. [6][7]

அதே வேளையில், புக்கிட் மெர்தாஜாம், பாடாங் ரெங்காஸ் நிலையங்களை இணைக்கும்  1  பாடாங் ரெங்காஸ் வழித்தடம் (KTM Komuter Padang Rengas Line) 10 ஜூலை 2015 அன்று திறக்கப்பட்டது.

பழைய தாப்பா நிலையம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Tapah Road KTM Railway Station is a KTM train station located at and named after the town of Tapah, Perak. Built in between 1880 and 1885, the original station is among the oldest of the railway stations in Malaysia". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 26 July 2023.
  2. "Tapah Road Railway Station • RailTravel Station". RailTravel Station. பார்க்கப்பட்ட நாள் 26 July 2023.
  3. "Train services to Tapah Road Station are by the new high-speed Electric Train Services (ETS) as all the older, slower diesel Intercity Services have now been replaced by these newer, faster trains". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 26 July 2023.
  4. "Tapah Road Railway Station (GPS: 4.17278, 101.18918) is a railway station in Tapah Road, Perak. It was first built in 1893, but was rebuilt in 2007 in preparation to receive the Electric Train Service". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 July 2023.
  5. "First railway station in Ipoh was constructed in 1894. It served the town for 20 years. It was a single storey building with no accommodations". 8 February 2020. பார்க்கப்பட்ட நாள் 24 July 2023.
  6. "The KTM Electric Train Service serves this station". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 July 2023.
  7. "Trains from Padang Rengas to Ipoh". 5 January 2023. பார்க்கப்பட்ட நாள் 22 July 2023.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு