கோலாலம்பூர் சென்ட்ரல்

தொடருந்து நிலையம்

கோலாலம்பூர் சென்ட்ரல் அல்லது கேஎல் சென்ட்ரல் (ஆங்கிலம்: Kuala Lumpur Sentral அல்லது KL Sentral; மலாய்: Kuala Lumpur Sentral) என்று அழைக்கப்படும் கோலாலம்பூர் நடுவண் தொடருந்து நிலையம் மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் உள்ள முதன்மை தொடருந்து நிலையம் ஆகும். பல தடங்கள் ஒன்றிணையும் இந்த நிலையம் ஏப்ரல் 16, 2001-இல் திறக்கப்பட்டது. [1]

கோலாலம்பூர் சென்ட்ரல்
KL Sentral
KTM_ETS_Logo

KL Sentral logo
பொது தகவல்கள்
அமைவிடம்பிரிக்பீல்ட்ஸ்
கோலாலம்பூர்  மலேசியா
ஆள்கூறுகள்3°8′3.48″N 101°41′11.04″E / 3.1343000°N 101.6864000°E / 3.1343000; 101.6864000
உரிமம்MRCB logo மலேசிய ரிசோர்சு நிறுவனம்
இயக்குபவர் மலாயா தொடருந்து
பிரசரானா மலேசியா
விரைவுத் தொடருந்து இணைப்பு
தடங்கள் மலாயா மேற்கு கடற்கரை 
நடைமேடை8: (4 தீவு மேடைகள்; 4 பக்க மேடைகள்)

சிரம்பான் வழித்தடம்
கிள்ளான் துறைமுகம்
கிளானா ஜெயா வழித்தடம்
கேஎல்ஐஏ போக்குவரத்து
கேஎல் சென்ட்ரல்–இஸ்கைபார்க்
ETS கேடிஎம் இடிஎஸ்

விரைவுத் தொடருந்து இணைப்பு
இருப்புப் பாதைகள்17
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைபெரும்பாலும் நிலத்தடி தடங்கள்
கிளானா ஜெயா உயர்த்திய நிலை
தரிப்பிடம்Parking கட்டணம்
துவிச்சக்கர வண்டி வசதிகள் இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KA01   KS01   KJ15   KE1   KT1 
வரலாறு
திறக்கப்பட்டது16 ஏப்ரல் 2001 கொமுட்டர்; இண்டர்சிட்டி; கிளானா ஜெயா
14 ஏப்ரல் 2002 விரைவுத் தொடருந்து
12 ஆகத்து 2010 இடிஎஸ்
சேவைகள்
முந்தைய நிலையம்   மலாயா தொடருந்து   அடுத்த நிலையம்
   
கோலாலம்பூர்
பத்துமலை
 
 புலாவ் செபாங் 
 
மிட்வெளி
தம்பின்
கோலாலம்பூர்
தஞ்சோங் மாலிம்
 
தஞ்சோங் மாலிம் கிள்ளான் துறைமுகம்
 
அப்துல்லா உக்கும்
கிள்ளான்
சென்ட்ரல்
(முனையம்)
 
 இஸ்கைபார்க் 
கேஎல் சென்ட்ரல்–இஸ்கைபார்க்
 
சுபாங் ஜெயா
இஸ்கைபார்க் கொமுட்டர்
   
கோலாலம்பூர்
பாடாங் பெசார்
 
சென்ட்ரல் பாடாங் பெசார்   Express  
 
சென்ட்ரல்
(முனையம்)
கோலாலம்பூர்
பட்டர்வொர்த்
 
சென்ட்ரல் பட்டர்வொர்த்   Express  
 
சென்ட்ரல்
(முனையம்)
கோலாலம்பூர்
ஈப்போ
 
சென்ட்ரல் ஈப்போ
  Express  
 
சென்ட்ரல்
(முனையம்)
கோலாலம்பூர்
பாடாங் பெசார்
 
சென்ட்ரல் பாடாங் பெசார்   Platinum  
 
சென்ட்ரல்
(முனையம்)
கோலாலம்பூர்
பட்டர்வொர்த்
 
சென்ட்ரல் பட்டர்வொர்த்   Platinum  
 
சென்ட்ரல்
(முனையம்)
கோலாலம்பூர்
பாடாங் பெசார்
 
பாடாங் பெசார் கிம்மாஸ்
  Gold  
 
தாசேக்
கிம்மாஸ்
கோலாலம்பூர்
பட்டர்வொர்த்
 
பட்டர்வொர்த் கிம்மாஸ்
  Gold  
 
தாசேக்
கிம்மாஸ்
கோலாலம்பூர்
ஈப்போ
 
சென்ட்ரல் ஈப்போ
  Gold  
 
சென்ட்ரல்
(முனையம்)
கோலாலம்பூர்
ஈப்போ
 
சென்ட்ரல் ஈப்போ
  Silver  
 
சென்ட்ரல்
(முனையம்)
   
பசார் செனி
கோம்பாக்
 
 ரேபிட் கேஎல்   கிளானா ஜெயா 
 
பங்சார்
புத்ரா
   
சென்ட்ரல்
(முனையம்)
 
கேஎல்ஐஏ போக்குவரத்து
 
கேஎல்ஐஏ T1
கேஎல்ஐஏ T2
சென்ட்ரல்
(முனையம்)
 
கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து
 
கேஎல்ஐஏ T1
கேஎல்ஐஏ T2

இதற்கு முன்னதாக பழைய கோலாலம்பூர் தொடருந்து நிலையம் நகரின் முதன்மை நகரிடை தொடருந்து மையமாக விளங்கியது. மலேசியாவின் மிகப்பெரும் தொடருந்து நிலையமாக கேஎல் சென்ட்ரல் விளங்குகின்றது. பழைய கோலாலம்பூர் தொடருந்து நிலையத்திற்கு பதிலாக, கோலாலம்பூர் நகரின் முக்கிய நகரங்களுக்கு இடையிலான தொடருந்து நிலையமாக மாற்றம் கண்டுள்ளது.[2]

பொது

தொகு

கோலாலம்பூர் சென்ட்ரல் என்று அழைக்கப்படும் கோலாலம்பூர் நடுவண் நிலையம், இடைமுறைமை போக்குவரத்து மையமாக (Intermodal Transport Hub) வடிவமைக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூரின் பெரும்பாலான பயணியர் தொடருந்து தடங்கள் இந்த நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மலேசியத் தீபகற்பத்திற்கும் சிங்கப்பூருக்கும் செல்லும் பல நகரிடை சேவைகள் இங்கிருந்து கிளம்புகின்றன.

தொடருந்து இணைப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வணிக வளாகங்களும் அலுவலகங்களும் அடுக்ககங்களும் திட்டமிட்டபடி முடிவுறவில்லை. இருப்பினும் இவை 2017-இல் முழுமை அடைந்தன. இந்த நிலைய வளாகம் கோலாலம்பூரின் நிதி, வணிக மையமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.[2]

கேஎல் சென்ட்ரல் மையம்

தொகு

கேஎல் சென்ட்ரல் மையம், மலேசியாவின் மிகப்பெரிய தொடருந்து நிலையம்; மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இரண்டாவது பெரிய தொடருந்து நிலையம் ஆகும். தாய்லாந்து நாட்டின் தலைநகரமான பாங்காக்கில் உள்ள குருங் தெப் அபிவாட் மத்திய முனையத்திற்கு (Krung Thep Aphiwat Central Terminal) அடுத்த நிலையில் உள்ளது.

பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள முன்னாள் மலாயா தொடருந்து நிறுவனத்தின் தொடருந்துகள் பழுதுபார்க்கும் இடத்தில் கட்டப்பட்ட கேஎல் சென்ட்ரல் 290,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. போக்குவரத்து மையம், தங்கும் விடுதிகள், அலுவலகக் கோபுரங்கள், அடுக்குமாடி சொகுசு மனைகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவை கேஎல் சென்ட்ரல் மையத்தில் உள்ளன.[3]

மலேசிய ரிசோர்சு நிறுவனம் (Malaysian Resources Corporation Berhad), மலாயா தொடருந்து நிறுவனம் (Keretapi Tanah Melayu Berhad) மற்றும் பெம்பினான் ரெட்சாய் (Pembinaan Redzai Sdn Bhd) ஆகியவற்றின் கூட்டமைப்பால் கேஎல் சென்ட்ரல் உருவாக்கப்பட்டது.[4]

வரலாறு

தொகு

கோலாலம்பூர் சென்ட்ரல் வளாகம், மத்திய தொடருந்து பழுதுபார்க்கும் தடத்தில் (Central Railroad Repair Shops) உள்ளது. இரண்டாம் உலகப் போரில் மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பின் போது, 1945-இல் கோலாலம்பூர் மீது நேச நாடுகளின் குண்டுவீச்சுக்கு இந்த வளாகம் இலக்கானது.[5][6]

19 பிப்ரவரி 1945 மற்றும் 10 மார்ச் 1945 ஆகிய இரு நாட்களில் இந்த வளாகம் இரண்டு முறை குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டது. இரண்டாவது குண்டுமழைத் தாக்குதலில் அருகிலுள்ள மலேசிய அருங்காட்சியகமும் சேதமடைந்தது.[7]

கட்டிடக் கலைஞர் கிசோ குரோகாவா

தொகு

1994-ஆம் ஆண்டில், கோலாலம்பூர் நகரின் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், மத்திய தொடருந்து பழுதுபார்க்கும் தடத்தில் 72 ஏக்கர் (290,000 ச.மீ) நிலத்தை, நவீன போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கு, மலேசிய அரசாங்கம் ஒரு கூட்டமைப்பிற்கு ஓர் ஒப்பந்தத்தை வழங்கியது.

மலேசிய ரிசோர்சு நிறுவனத்தின் தலைமையிலான கூட்டமைப்பு, கட்டிடக் கலை கட்டமைப்பிற்காக கட்டிடக் கலைஞர் கிசோ குரோகாவா (Kisho Kurokawa) என்பவரை நியமனம் செய்தது. கட்டிடக் கலைஞர் கிசோ குரோகாவா ஏற்கனவே கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை (கேஎல்ஐஏ) (KLIA) வடிவமைத்தவர் ஆகும்.[8]

16 எப்ரல் 2001-இல் கேஎல் சென்ட்ரல் நிலையத்தின் கட்டுமான வேலைகள் நிறைவுற்றன. அதன் பின்னர் 29 மே 2023-இல், முன்பு அங்கு இயங்கிய கேஎல் சென்ட்ரல் எல்ஆர்டி நிலையம் அதிகாரப்பூர்வமாக கேஎல் சென்ட்ரல் ரெட் ஒன் (KL Sentral-redONE) என மறுபெயரிடப்பட்டது.

தொடருந்து சேவைகள்

தொகு

  கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் (KL Monorail) இயங்கும் ஒரு நிலையமான கோலாலம்பூர் மோனோரெயில் (மோனோரெயில் நிலையம்)  MR1  கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்தின் ஒரு பகுதியாகச் செயல்படவில்லை.

அந்த கோலாலம்பூர் ஒற்றைத் தண்டூர்தி நிலையம், துன் சம்பந்தன் சாலையில் (Jalan Tun Sambanthan) கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்திற்கு எதிர்ப்புறம் உள்ளது. இந்த இரு நிலையங்களும் ஒரு மேல்நிலை பாலத்தால் இணைக்கப்பட்டு உள்ளன.

கோலாலம்பூர் சென்ட்ரல் காட்சியகம்

தொகு

மேற்சான்றுகள்

தொகு
  1. http://www.wonderfulmalaysia.com/kl-sentral-train-station-kuala-lumpur.htm
  2. 2.0 2.1 "Stesen Sentral, Malaysia's largest transit hub, is Kuala Lumpur's integrated rail transportation centre, offering global connectivity and seamlessly linking all urban and suburban residential, commercial and industrial areas. It is also a direct link to Kuala Lumpur International Airport, Putrajaya (the Federal Government Administrative Centre), Cyberjaya and key areas within the Multimedia Super Corridor". www.klsentral.com.my. பார்க்கப்பட்ட நாள் 7 August 2023.
  3. April 9, KL Sentral. "The KL Sentral (Stensen Sentral Kuala Lumpur) is the most connected transit point in the city of Kuala Lumpur (KL), Malaysia". KL Sentral. பார்க்கப்பட்ட நாள் 7 August 2023.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  4. "The Stesen Sentral Kuala Lumpur, or KL Sentral, is built as the state-of-the-art transportation hub for Kuala Lumpur's integrated rail transportation, seamlessly links all urban, suburban residential, commercial and industrial areas". klia2.info. பார்க்கப்பட்ட நாள் 7 August 2023.
  5. Ho, Stephanie. "Malayan Campaign". Singapore infopedia. National Library Board Singapore. பார்க்கப்பட்ட நாள் 21 August 2018.
  6. Craven & Cate 1953, ப. 162.
  7. Carter & Mueller 1991, ப. 627.
  8. "Wakao Ayako: The Career of a Classic Silver Screen Star". Nippon.com. Nippon Communications Foundation. 6 March 2020. பார்க்கப்பட்ட நாள் 30 March 2020.

நூல்கள்

தொகு

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலாலம்பூர்_சென்ட்ரல்&oldid=4165222" இலிருந்து மீள்விக்கப்பட்டது