கோலாலம்பூர் மோனோரெயில்

கோலாலம்பூர் ஒற்றைத் தண்டூர்தி

கோலாலம்பூர் மோனோரெயில் அல்லது கோலாலம்பூர் ஒற்றைத் தண்டூர்தி (ஆங்கிலம்: KL Monorail Line; மலாய்: Monorel KL; சீனம்: 吉隆坡單軌列車) என்பது மலேசியா கோலாலம்பூர் மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஓர் ஒற்றைத் தண்டூர்திச் சேவை ஆகும்.

கோலாலம்பூர் மோனோரெயில்
KL Monorail Line
கோலாலம்பூர் மோனோரெயில்
கண்ணோட்டம்
நிலைசேவையில்
உரிமையாளர் பிரசரானா மலேசியா
வழித்தட எண் வெளிர் பச்சை
வட்டாரம்கோலாலம்பூர்
முனையங்கள்
நிலையங்கள்11
இணையதளம்myrapid.com.my
சேவை
வகைஒற்றைத் தண்டூர்தி
அமைப்பு ரேபிட் கேஎல்
சேவைகள்கோலாலம்பூர் சென்ட்ரல் மோனோரெயில்-தித்திவங்சா
செய்குநர்(கள்) ரேபிட் ரெயில்
பணிமனை(கள்)பிரிக்பீல்ட்ஸ்
சுழலிருப்புScomi SUTRA (4-தொடருந்துகள்)
தினசரி பயணிப்போர்52,448 (Q2 2024)[1]
71,623 (Q4 2014; Highest)[2]
பயணிப்போர்18.1 மில்லியன் (2023)
25.437 மில்லியன் (2013; மிக யர்வு)[3][2]
வரலாறு
திறக்கப்பட்டது31 ஆகத்து 2003; 21 ஆண்டுகள் முன்னர் (2003-08-31)
தொழில்நுட்பம்
வழித்தட நீளம்8.6 km (5.3 mi)
குணம்உயர்த்தப்பட்ட தடம்
மின்மயமாக்கல்750 V DC
இயக்க வேகம்60 km/h (37 mph)

இதுவே மலேசியாவின் ஒரே ஒற்றைத் தண்டூர்திச் செயல்பாட்டு அமைப்பு முறை என அறியப்படுகிறது. மேலும் இந்த அமைப்பு முறைமை, முழுத் தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும்.

பிரசரானா மலேசியாவின் துணை நிறுவனமான ரேபிட் ரெயில் நிறுவனத்தின் ரேபிட் கேஎல் அமைப்பின் ஒரு பகுதியாக கோலாலம்பூர் மோனோரெயில் இயக்கப்படுகிறது.

பொது

தொகு

கோலாலம்பூர் மோனோரெயில் அமைப்பு, மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகச் செயல்படுகிறது.

பன்னாட்டுப் போக்குவரத்து வரைபடங்களில் இந்த வழித்தடத்திற்கு   எனும் குறியீடு வெளிர் பச்சை நிறத்தில் வழங்கப்பட்டு உள்ளது.

இடர்பாடுகள்

தொகு

பரபரப்பான நெரிசல் வேளைகளில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளைக் கோலாலம்பூர் மாநகர் மையப் பகுதிகளுக்குள் கொண்டு செல்வதிலும்; மற்றும் வெளியேற்றுவதிலும் இடர்பாடுகள் ஏற்படுவதாக அறியப்படுகிறது.

முறையான உள்கட்டமைப்புத் திட்டமிடல் இல்லாததாலும்; போதுமான அளவிற்கு தண்டூர்தி வண்டிகள் இல்லாததாலும்; அந்த இடர்பாடுகள் ஏற்படுவதாகவும் அறியப்படுகிறது. இந்தப் பிரச்சினை குறித்து மலேசிய அமைச்சரவையில் கருத்துப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டு சீரமைப்புச் செய்யப்பட்டு வருவதாகவும் அறியப்படுகிறது.

கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் கீழ் உள்ள இயக்கங்களில் இந்த கோலாலம்பூர் மோனோரெயில் மிகவும் திருப்தியற்ற தொடருந்துப் பாதையாகக் குறிப்பிடப்படுகிறது.[4][5]

வரலாறு

தொகு
 
கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடம்

இந்த நகர்ப்புற மோனோரயில் வழித்தடம் 31 ஆகஸ்டு 2003 அன்று திறக்கப்பட்டது. 8.6 கிமீ (5.3 மைல்) நீளம் கொண்ட இந்த வழித்தடத்தில் 11 நிலையங்கள் உள்ளன; மேலும் இரண்டு உயரமான மேம்பாலத் தடங்களில் இயங்குகின்றன.[6]

இந்த வழித்தடம் தெற்கில் உள்ள கோலாலம்பூர் சென்ட்ரல் போக்குவரத்து மையத்தையும்; வடக்கில் உள்ள தித்திவங்சா நிலையத்தையும்; கோலாலம்பூர் தங்க முக்கோணத்தையும் ஒன்றாக இணைக்கின்றது. கோலாலம்பூர் தங்க முக்கோணம் (KL Golden Triangle) என்று அறியப்படும் கோலாலம்பூர் மாநகர் மையப்பகுதி; புக்கிட் பிந்தாங், இம்பி சாலை, புக்கிட் பிந்தாங் சாலை, சுல்தான் இசுமாயில் சாலை, ராஜா சூலான் சாலை ஆகிய வணிகப் பகுதிகளால் சூழப்பட்டுள்ளது.[7]

மோனோரெயில் திட்டம்

தொகு

சூன் 1989-இல் நடந்த மலேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் மலேசிய அரசாங்கம் இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கியது. அதன் பிறகு சனவரி 1990-இல் கோலாலம்பூர் மாநகராட்சியால் மோனோரெயில் திட்டம் பற்றி அறிவிக்கப்பட்டது. அதன் அப்போதைய கட்டுமானச் செலவு RM 143 ரிங்கிட் மில்லியனாக மதிப்பிடப்பட்டது.

இந்த வழித்தட அமைப்பு கோலாலம்பூரின் பரபரப்பான வணிக மையத்தின் வழியாக, 20 நிமிட சுழற்சியில், ஒரு நாளைக்கு 34,000 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இரண்டு கட்டங்களில் கட்டுவதாகத் திட்டமிடப்பட்டது: முதலில், 16 நிலையங்களை உள்ளடக்கிய 7.7 கிமீ (4.8 மைல்) நீளம் கொண்ட முதல் கட்டம்; அடுத்த இரண்டாவது கட்டத்தில், 6.5 கிமீ (4.0 மைல்) சுற்றுப் பாதை சேர்க்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

1997 ஆசிய நிதி நெருக்கடி

தொகு

சூன் 1990-இல் கட்டுமானப் பணிகளைத் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் தொடக்கப் பணிகளுக்காக வழங்கப்பட்ட ஒப்பந்த அறிவிப்புகளில், கட்டுமானச் செலவு மிக அதிகமாக இருப்பதாக கோலாலம்பூர் மாநகராட்சி மேயர் கண்டனம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தொடக்கப் பணிகள் மே 1991 வரையில் ஒத்திவைக்கப்பட்டன.[8][9]

சப்பானிய இத்தாச்சி (Hitachi, Ltd) நிறுவனத்தின் மூலம் கட்டுமானம் மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் 1997 ஆசிய நிதி நெருக்கடியினால் திசம்பர் 1997-இல் கட்டுமானம் நிறுத்தப்பட்டது. சூலை 1998-இல் பணி மீண்டும் தொடங்கப்பட்டது. உள்ளூர் நிறுவனமான எம் திடான்ஸ் ஓல்டிங்ஸ் (MTrans Holdings) எனும் நிறுவனம் பொறுப்பேற்றது. இறுதியில் இந்த வழித்தடம் RM 1.18 பில்லியன் ரிங்கிட் செலவில் கட்டி முடிக்கப்பட்டு 2003-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.

பிரசரானா மலேசியா

தொகு
 
தானியக்க சுகோமி சுத்திரா கோலாலம்பூர் மோனோரெயில்

கோலாலம்பூர் மோனோரெயில் திட்டத்தை நடத்த கேஎல் மோனோரெயில் நிறுவனம் (KL Monorail System Sdn Bhd) (KLMS) முதலில் பொறுப்பேற்றது. மலேசிய அரசாங்கம் அந்த நிறுவனத்திற்கு 40 ஆண்டுகாலச் சலுகையை வழங்கியது. எனினும், நிதி நெருக்கடியினால் அந்த நிறுவனத்தால் கோலாலம்பூர் மோனோரெயில் திட்டத்தை முறையாக நடத்த இயலவிவில்லை.[10]

பற்பல நிதி நெருக்கடிகள்; மற்றும் கடன் கொடுத்த வங்கிகளின் நெருக்குதல்கள் போன்றவற்றினால் கேஎல் மோனோரெயில் நிறுவனம் செயல்பட முடியாமல் தவித்தது. இந்தக் கட்டத்தில் மலேசிய அரசாங்கம் தலையிட்டது. அதன் பின்னர் கோலாலம்பூர் மோனோரெயில் இயக்கத்தைச் செயல்படுத்த அரசு சார்ந்த நிறுவனமான பிரசரானா மலேசியா நிறுவனம் பொறுப்பேற்றது.[11][12]

கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடங்கள்

தொகு

கோலாலம்பூர் மோனோரெயில் நிலையங்கள்

தொகு

கோலாலம்பூர் மோனோரெயில் (KL Monorail Line) வழித்தடத்தில் 11 நிலையங்கள் உள்ளன. அந்த நிலையங்களின் விவரங்கள்:

நிலையத்தின் குறியீடு தோற்றம் நிலையத்தின் பெயர் எல்ஆர்டி - எம்ஆர்டி - இடிஎஸ் இணைப்புகள்
 MR1      கோலாலம்பூர் சென்ட்ரல்  KA01   KS01  பத்துமலை-புலாவ் செபாங்; தஞ்சோங் மாலிம்–கிள்ளான்; கேஎல் சென்ட்ரல்-இஸ்கைபார்க்; KTM ETS   KJ15  கிளானா ஜெயா;  KE1   KT1  கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து; கேஎல்ஐஏ போக்குவரத்து;  KG15  மியூசியம் நெகாரா எம்ஆர்டி நிலையம்
 MR2      துன் சம்பந்தன் நிலையம் பிரிக்பீல்ட்ஸ்
 MR3      மகாராஜாலேலா நிலையம் மெர்டேக்கா 118
 MR4      ஆங் துவா நிலையம்  AG9   SP9  அம்பாங் செரி பெட்டாலிங்
 MR5      இம்பி நிலையம் -
 MR6      புக்கிட் பிந்தாங் மோனோரெயில் நிலையம்  AG9   SP9  அம்பாங் செரி பெட்டாலிங்;  KJ10  கேஎல்சிசி எல்ஆர்டி கிளானா ஜெயா
 MR7      ராஜா சூலான் நிலையம்  KJ10  கேஎல்சிசி எல்ஆர்டி கிளானா ஜெயா
 MR8      புக்கிட் நானாஸ் நிலையம்  KJ12  டாங் வாங்கி எல்ஆர்டி கிளானா ஜெயா
 MR9      மேடான் துவாங்கு நிலையம்  AG5   SP5  சுல்தான் இஸ்மாயில் எல்ஆர்டி அம்பாங் செரி பெட்டாலிங்
 MR10      சௌக்கிட் நிலையம் கோலாலம்பூர் மருத்துவமனை
 MR11      தித்திவாங்சா நிலையம்  AG3   SP3   PY17  அம்பாங் செரி பெட்டாலிங் புத்ராஜெயா;  CC08  எம்ஆர்டி சுற்று வழித்தடம்

பயணிகள்

தொகு
 
முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்ட மோனோரெயில்
 
தற்போது பயன்படுத்தப்படும் மோனோரெயிலின் உட்பாகம்
 
கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் மோனோரெயில் பாதாசாரி மேம்பாலம்
 
கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங் பகுதியில் மோனோரெயில்
 
கோலாலம்பூர் இரட்டைக் கோபுரங்களுக்கு அருகில் மோனோரெயில்

29 சூலை 2009 அன்று, மோனோரெயில் 100 மில்லியன் பயணிகளை எட்டியதாக அறியப்படுகிறது.[13]

கோலாலம்பூர் மோனோரெயில் பயணிகள்[14]
ஆண்டு காலாண்டுப் புள்ளி பயணிகள் ஆண்டுப் புள்ளி குறிப்பு
2024 Q1 4,890,264 14,675,762
Q2 4,772,775
Q3 5,012,723
Q4
2023 Q1 4,099,687 18,107,573
Q2 4,271,287
Q3 4,628,078
Q4 5,108,521
2022 Q1 2,431,760 11,496,524
Q2 2,434,132
Q3 3,125,274
Q4 3,505,358
2021 Q1 1,167,491 4,226,329
Q2 968,990
Q3 591,448
Q4 1,498,400
2020 Q1 2,928,823 7,143,534
Q2 774,603
Q3 2,021,544
Q4 1,418,564
2019 12,573,738
2018 12,594,377
2017 16,841,630
2016 24,200,299
2015 25,067,866
2014 24,303,465
2013 25,437,621
2012 24,435,931
2011 24,200,299
2010 22,108,308
2009 21,021,390
2008 21,765,233
2007 20,142,772
2006 17,370,337
2005 14,482,575
2004 10,956,675
2003 2,917,065 செப்டம்பர்-திசம்பர் 2003

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Ridership". Rapid Rail Performance Update. RapidKL. 26 July 2024. Archived from the original on 7 August 2024. பார்க்கப்பட்ட நாள் 8 August 2024.
  2. 2.0 2.1 Ming, Ong Kian (5 October 2017). "Public transport ridership falling, despite the billions spent". Malaysiakini. பார்க்கப்பட்ட நாள் 17 March 2023.
  3. "Statistik Tahunan Pengangkutan" (PDF). பார்க்கப்பட்ட நாள் 17 March 2023.
  4. "8 painful things only KL monorail users will understand". The Rakyat Post. 7 November 2019. பார்க்கப்பட்ட நாள் 19 April 2023.
  5. "KL Monorail may have other roles to play". The Malaysian Reserve. 9 July 2019. பார்க்கப்பட்ட நாள் 19 April 2023.
  6. Azliana Ahmad (1999). Peranan Sistem Transit Aliran Ringan (STAR) dalam mengatasi masalah pengangkutan awam di bandar Kuala Lumpur (in மலாய்). Universiti Malaya: Jabatan Antropologi dan Sosiologi, Fakulti Sastera dan Sains Sosial, Universiti Malaya, 1998/99. pp. Lampiran 2.
  7. "KL Infrastructure Group". 10 April 2005. Archived from the original on 10 April 2005. பார்க்கப்பட்ட நாள் 14 July 2023.
  8. "KLIG in talks to exit monorail business". New Straits Times (Business Times) (Kuala Lumpur). 25 April 2007. http://www.btimes.com.my/Current_News/BT/Wednesday/Nation/BT619739.txt/Article/. [தொடர்பிழந்த இணைப்பு]
  9. Abu Bakar, Dalila (24 September 2004). "MTrans upbeat on mass transit project in W. Asia". New Straits Times (Business Times) (Kuala Lumpur) இம் மூலத்தில் இருந்து 13 February 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070213183247/http://www.monorail.com.my/pressclippings1.htm. 
  10. Prasarana: First Pair Of New 4-Car Monorail In Operations In Third Quarter 2014 பரணிடப்பட்டது 28 மே 2014 at the வந்தவழி இயந்திரம் [sic]; Malaysia Industry-Government group for High Technology; 9 April 2014. URL last accessed 3 December 2014.
  11. "Syarikat Prasarana Negara in talks to take over KL monorail". The Edge (Kuala Lumpur). 24 April 2007 இம் மூலத்தில் இருந்து 27 April 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070427021353/http://www.theedgedaily.com/cms/content.jsp?id=com.tms.cms.article.Article_23c10dc8-cb73c03a-166c1140-6c7f06b2. 
  12. "Bursa Malaysia Announcement: Default in Payment Pursuant to Practice Note No. 1/2001 of the Listing Requirements of Bursa Malaysia Securities Berhad". 15 May 2007. Archived from the original on 3 March 2016.
  13. "Statistic of Rail Transport". Ministry of Transport (Malaysia). Archived from the original on 9 January 2022. பார்க்கப்பட்ட நாள் 12 February 2022.
  14. "Prasarana's Ridership". 14 January 2023. Archived from the original on 14 January 2023. பார்க்கப்பட்ட நாள் 14 January 2023.

மேலும் காண்க

தொகு

வழித்தட வரைபடங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலாலம்பூர்_மோனோரெயில்&oldid=4147590" இலிருந்து மீள்விக்கப்பட்டது