எம்ஆர்டி சுற்று வழித்தடம்
எம்ஆர்டி சுற்று வழித்தடம் அல்லது பெரும் விரைவு தொடருந்து சுற்று வழித்தடம் (ஆங்கிலம்: MRT Circle Line மலாய்: Laluan MRT Lingkaran என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் திட்டமிடப்பட்டு உள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து வழித்தடம் (Mass Rapid Transit) (MRT) ஆகும்.
எம்ஆர்டி சுற்று வழித்தடம் MRT Circle Line Laluan MRT Lingkaran | |||
---|---|---|---|
13 | |||
கண்ணோட்டம் | |||
நிலை | எதிர்காலத் திட்டம் | ||
உரிமையாளர் | எம்ஆர்டி நிறுவனம் | ||
வழித்தட எண் | CC13 நீல ஊதா | ||
வட்டாரம் | கிள்ளான் பள்ளத்தாக்கு | ||
முனையங்கள் |
| ||
நிலையங்கள் | 32 (2 தற்போது) | ||
இணையதளம் | mrt3 | ||
சேவை | |||
வகை | விரைவுப் போக்குவரத்து | ||
அமைப்பு | ரேபிட் கேஎல் | ||
சேவைகள் | சுற்று வழித்தடம் | ||
செய்குநர்(கள்) | ரேபிட் ரெயில் | ||
பணிமனை(கள்) | கம்போங் புவா கிடங்கு தாமான் மீடா கிடங்கு | ||
சுழலிருப்பு | TBD | ||
வரலாறு | |||
தொடங்கப்பட்டது | 2026 (கணிப்பு) | ||
திட்டமிட்ட திறப்பு | 2032 (கணிப்பு) | ||
தொழில்நுட்பம் | |||
வழித்தட நீளம் | 50.8 km (31.6 mi)[1] உயர்த்தப்பட்ட வழித்தடம்: 40.1 km (24.9 mi) நிலத்தடி: 10.7 km (6.6 mi) | ||
தட அளவி | 1,435 mm (4 ft 8 1⁄2 in) | ||
மின்மயமாக்கல் | 750 V DC | ||
கடத்தல் அமைப்பு | தானியங்கி தொடருந்து | ||
இயக்க வேகம் | 100 km/h (62 mph) | ||
|
இந்த வழித்தடம், மலேசியாவில் முழு ஓட்டுநர் இல்லாத தானியங்கி தொடருந்து அமைப்புகளில் ஐந்தாவது வழித்தடம் ஆகும். ஏற்கனவே, இந்த வழித்தடத்திற்கு மிக அருகில் உள்ள கிளானா ஜெயா வழித்தடம் அந்தத் தானியங்கி அமைப்பைக் கொண்டுள்ளது.
பொது
தொகுஇந்த வழித்தடம் கட்டி முடிக்கப்பட்டதும், கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பில் இந்த வழித்தடம் ஒரு சுற்றுவட்டத் தொடருந்துப் பாதையை உருவாக்கும். அதிகாரப்பூர்வ போக்குவரத்து வரைபடங்களில் வழித்தடத்தின் எண் 13 என்றும் நீல ஊதா நிறத்திலும் இருக்கும்.[2]
4 சூலை 2024-க்கு முன்னர் இந்த வழித்தடம், வழித்தடத்தின் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் சாம்பல் நிறத்தில் இருந்தது.[3] கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் கீழ் திட்டமிடப்பட்ட மூன்று விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்துப் பாதைகளில் இதுவும் ஒன்றாகும். 2015-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வழித்தடம் கட்டும் திட்டம் மீண்டும் தலைதூக்கியது.[4]
மே 2018-இல் முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமதுவால் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.[5][6] ஆனால் பின்னர் நவம்பர் 2020-இல் புத்துயிர் பெற்றது.[7]
32 நிலையங்கள்
தொகுகட்டுமானப் பணிகள் 2026-இல் தொடங்கும் என்றும் 2032-க்குள் நிறைவு அடையும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. கட்டுமானச் செலவு சுமார் RM ரிங்கிட் 31 பில்லியனாக இருக்கும்; அதே வேளையில் தனியார் நிலங்களைக் கையகப்படுத்தும் செலவு RM ரிங்கிட் 8.4 பில்லியனாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[8] 50.8 கிமீ (31.6 மைல்) நீளம் கொண்ட இந்த வழித்தடத்தில் 25 உயர்த்தப்பட்ட நிலையங்கள்; மற்றும் 7 நிலத்தடி நிலையங்கள் (மொத்தம் 32 நிலையங்கள்) கட்டப்படும்.
இந்த வழித்தடம், மொன்ட் கியாரா, சிகாம்புட், கோலாலம்பூர் புறநகர்ப்பகுதி, தித்திவாங்சா, செதாபாக், செத்தியாவங்சா, அம்பாங், சாலாக் சவுத், பாண்டான் இண்டா, பந்தாய் டாலாம், செராஸ் மற்றும் மலாயா பல்கலைக்கழகம் போன்ற மக்கள் அடர்த்தியான பகுதிகளை உள்ளடக்கப்படும்.
கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடங்கள்
தொகு- பத்துமலை–புலாவ் செபாங் வழித்தடம்
- தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம்
- அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
- அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
- கிளானா ஜெயா வழித்தடம்
- கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து
- கேஎல்ஐஏ போக்குவரத்து
- கோலாலம்பூர் மோனோரெயில்
- காஜாங் வழித்தடம்
- கேஎல் சென்ட்ரல்–இஸ்கைபார்க்
- சா ஆலாம் வழித்தடம்
- புத்ராஜெயா வழித்தடம்
- எம்ஆர்டி சுற்று வழித்தடம்
- சன்வே விரைவுப் பேருந்து வழித்தடம்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Azhar, Danial (15 March 2022). "'Final piece' of KL transit system, MRT3 back on track". Free Malaysia Today. FMT Media Sdn Bhd.
- ↑ MRT Corp (4 July 2024). "Infographic of Circle Line (MRT3)" (PDF). MRT Corp. Archived (PDF) from the original on 4 July 2024. பார்க்கப்பட்ட நாள் 5 July 2024.
- ↑ "MRT Corp Conducts RFI Briefing Session for MRT3 Circle Line Project". MRT Corp (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-07.
- ↑ Wong, Joseph (5 February 2015). "Eyes now on MRT Line 3". The Ant Daily. Archived from the original on 19 May 2015.
- ↑ "PM Mahathir : Malaysia's planned MRT3 cancelled". The Edge Markets. 2018-05-30. http://www.theedgemarkets.com/article/pm-mahathir-malaysias-planned-mrt3-cancelled.
- ↑ "Govt slams brakes on MRT3 and HSR projects" (in en). NST Online. 2018-05-30. https://www.nst.com.my/news/nation/2018/05/374796/govt-slams-brakes-mrt3-and-hsr-projects.
- ↑ "Focus turns to structure for MRT3". The Star (Malaysia). 10 Nov 2020. பார்க்கப்பட்ட நாள் 18 Jan 2021.
- ↑ Gan, Caroline (2022-03-15). "MRT3 Circle Line to cost RM39.4bil, to start operating in phases from 2028". NST Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-29.