தானியங்கி தொடருந்து

தானியங்கி தொடருந்து இயக்கம் அல்லது தானியங்கி தொடருந்து (ஆங்கிலம்: Automatic Train Operation அல்லது Automatic Train) (ATO) என்பது மனித உள்ளீடு இல்லாமல் தானாக இயங்கும் தானியங்கி தொடருந்து அமைப்பைக் கொண்ட ஒரு தொடருந்து இயக்கம் ஆகும்.

சிங்கப்பூர், தாம்சன் எம்ஆர்டி வழித்தடத்தில், சேவையில் உள்ள காவாசாக்கி தானியங்கி தொடருந்து (2023)

இந்த வகைத் தொடருந்துகளை இயக்கவும் அல்லது கண்காணிக்கவும் மனித உள்ளீடுகள் தேவை இல்லை. அவை மின்னியல் முறைமையில் தன்னியக்கமாகவே செயல்படுகின்றன.[1]

இந்த வகை தானியங்கி தொடருந்துகள் திட்டமிடப்பட்டபடி நிறுத்துவது; வேகத்தைக் கட்டுப்படுத்துவது; கதவுகளைத் திறப்பது அல்லது மூடுவது போன்ற செயல்பாடுகளை, மனித வழிக்காட்டல்கள் இல்லாமலேயே நிறைவேற்றுகின்றன.[2]

பொது

தொகு

தானியக்கத்தின் அளவு தானியக்கத் தரத்தால் குறிக்கப்படுகிறது (ஆங்கிலம்: Grade of Automation) (GoA). மேலும், தானியக்கத்தின் தரங்கள் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டு, தரம் 1-இல் இருந்து தரம் 5 வரை என வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்தத் தானியக்கத் தரத்தில் தரம் 4 (GoA4) வரையிலான தொடருந்துகளில், ஊழியர்கள் எவரும் இல்லாமல் அவை தாமாகவே செயல்படுத்திக் கொள்கின்றன.[3]

தரம் 1-இல் இருந்து தரம் 5 வரையிலான குறைந்த தர தானியக்கத்திற்கான செயல்பாடுகளில், அவசரநிலை இடர்பாடுகளைக் கண்காணிக்க ஓர் ஓட்டுநர் இருப்பது வழக்கம்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "IEC 60050 - International Electrotechnical Vocabulary - Details for IEV number 821-09-01: "automatic train operation"". www.electropedia.org. பார்க்கப்பட்ட நாள் 23 January 2024.
  2. IEEE Standard for Communications-Based Train Control (CBTC) Performance and Functional Requirements. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1109/IEEESTD.2004.95746. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7381-4487-8. பார்க்கப்பட்ட நாள் 28 January 2024.
  3. "Thales and Knorr-Bremse will jointly develop ATO for freight trains". RailTech.com. 4 November 2022. https://www.railtech.com/rolling-stock/2022/11/04/thales-and-knorr-bremse-will-jointly-develop-ato-for-freight-trains/. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தானியங்கி_தொடருந்து&oldid=4136793" இலிருந்து மீள்விக்கப்பட்டது