தன்னியக்க வங்கி இயந்திரம்

தன்னியக்க வங்கி இயந்திரம் அல்லது தன்னியக்க காசளிப்பு இயந்திரம் எனப்படுவது பணம் வைப்பது, பெறுவது, கணக்கைப் பார்ப்பது போன்ற சில பணிகளை வாடிக்கையாளரே செய்ய ஏதுவாக்கும் ஒரு கணினி மயப்படுத்தப்பட்ட இயந்திரம். இந்தக் கருவி வங்கியில் வழமையாக காசாளாரால் செய்யப்பட்டு வந்த பல பணிகளை இயந்திரமாக்கி, தன்னியக்கமாக்கியது. பொதுவாக இந்த இயந்திரத்தில் ஒரு கணக்கு அட்டையை இட்டு, வாடிக்கையாளரே தமது வேலையை செய்து விடுவர். இந்த இயந்திரம் 1967ஆம் ஆண்டு முதல் ஐக்கிய இராச்சியத்தில் பரந்த பயன்பாட்டுக்கு வந்தது. ஏ.டி.எம். (ATM) எனப்படும் தானியங்கி பணப் பட்டுவாடா எந்திரத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் (சூன் 23 1925மே 20 2010) ஆவார். மனைவியின் ஏடிஎம் அட்டையை கணவன் பயன்படுத்துவது சட்டப்படி தவறு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.[1]

தன்னியக்க வங்கி இயந்திரம்

சான்றுகள் தொகு

  1. Malaiarasu (2018-06-07), "`மனைவியின் ஏடிஎம் கார்டை கணவன் பயன்படுத்தக் கூடாது' - எஸ்.பி.ஐ விதிமுறையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்!", Vikatan, பார்க்கப்பட்ட நாள் 2018-06-10