கேஎல்ஐஏ போக்குவரத்து
கேஎல்ஐஏ போக்குவரத்து அல்லது கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலைய கேஎல்ஐஏ போக்குவரத்து (ஆங்கிலம்; மலாய்: KLIA Transit; சீனம்: 吉隆坡机场支线) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்குச் சேவை செய்யும் கொமுட்டர் தொடருந்துச் சேவை ஆகும்.[3]
கேஎல்ஐஏ போக்குவரத்து KLIA Transit | |
---|---|
கண்ணோட்டம் | |
உரிமையாளர் | விரைவுத் தொடருந்து இணைப்பு |
வழித்தட எண் | நீல பச்சை |
வட்டாரம் | கோலாலம்பூர் - பண்டார் தாசேக் செலாத்தான் - புத்ராஜெயா - சாலாக் திங்கி - கேஎல்ஐஏ |
முனையங்கள் |
|
நிலையங்கள் | 6 |
சேவை | |
வகை | பயணிகள் தொடருந்து சேவை வானூர்தி நிலையத் தொடருந்து இணைப்பு |
அமைப்பு | விரைவுத் தொடருந்து இணைப்பு |
செய்குநர்(கள்) | விரைவுத் தொடருந்து இணைப்பு |
சுழலிருப்பு | 4 4-பெட்டி Siemens Desiro; ET 425 M Articulated EMU 2 4-பெட்டி CRRC Changchun Equator Articulated EMU |
தினசரி பயணிப்போர் | 15,931 (Q1 2024)[1] |
பயணிப்போர் | 5.143 மில்லியன் (2023)[2] |
வரலாறு | |
திறக்கப்பட்டது | கோலாலம்பூர் சென்ட்ரல் - கேஎல்ஐஏ T1 நிலையம் 14 ஏப்ரல் 2002 |
கடைசி நீட்டிப்பு | கேஎல்ஐஏ T1 நிலையம் - கேஎல்ஐஏ T2 நிலையம் 1 மே 2014 |
தொழில்நுட்பம் | |
வழித்தட நீளம் | 57 km (35.4 mi) |
குணம் | பெரும்பாலும் தரைவழி |
தட அளவி | 1,435 mm (4 ft 8 1⁄2 in) |
மின்மயமாக்கல் | 25 kV 50 Hz |
கடத்தல் அமைப்பு | மனித உள்ளீடு |
இது கோலாலம்பூரின் முக்கியத் தொடருந்து நிலையமான கோலாலம்பூர் சென்ட்ரலில் இருந்து கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் கேஎல்ஐஏ T1 (KLIA T1) மற்றும் கேஎல்ஐஏ T2 (KLIA T2) நிலையங்களுக்குச் சேவை செய்கிறது.
இந்த கேஎல்ஐஏ போக்குவரத்துச் சேவை, கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்துச் சேவையின் அதே வழித்தடங்களையும் பகிர்ந்து கொள்கின்றது. இந்த வழித்தடம் விரைவுத் தொடருந்து இணைப்பு (Express Rail Link Sdn. Bhd) (ERL) மூலம் இயக்கப்படுகிறது.
பொது
தொகுஇந்த கேஎல்ஐஏ போக்குவரத்துச் சேவை (KLIA Transit) அனைத்து தொடருந்து நிலையங்களிலும் நின்று செல்லும் சேவையை வழங்குகிறது. அதே வேளையில், இதன் நட்புச் சேவையான கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து (KLIA Ekspres) சேவை; கோலாலம்பூர் சென்ட்ரல் மற்றும் கேஎல்ஐஏ T1; கேஎல்ஐஏ T2 ஆகிய நிலையங்களுக்கு மட்டும் நேரடிச் சேவையில் ஈடுபடுகிறது.
இந்த வழித்தடம், கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்புக் கூறுகளில் (Klang Valley Integrated Transit System) ஒன்றாகும். அதிகாரப்பூர்வ போக்குவரத்து வரைபடங்களில் இந்த வழித்தடத்திற்கு என குறியீடும் நீல பச்சை நிறத்தில் உள்ளது.[4]
24 ஆகஸ்டு 2010 அன்று, கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்தில் இரு கேஎல்ஐஏ தொடருந்துகள் மோதிக் கொண்டன. அதுவே கேஎல்ஐஏ போக்குவரத்துச் சேவையின் முதல் விபத்து ஆகும். அந்த விபத்தில் 3 பயணிகள் காயமடைந்தனர்.
கேஎல்ஐஏ
தொகுகேஎல்ஐஏ (KLIA) என்பது கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் (Kuala Lumpur International Airport) சுருக்கமாகும். கேஎல்ஐஏ, மலேசியாவின் பிரதான வானூர்தி நிலையம் ஆகும். மேலும் தென்கிழக்காசியாவின் முக்கிய வானூர்தி நிலையங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. கேஎல்ஐஏ (KLIA) என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்றது.
20-ஆம் நூற்றாண்டில், உலகின் தொழில்நுட்ப அதிசயங்களில் ஒன்றாக இந்த வானூர்தி நிலையம் அறியப் படுகின்றது. இந்த வானூர்தி நிலையத்தின் முழுமையான செயல்பாடுகளும் கணினி தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன.
அதிவிரைவு தொடருந்துச் சேவை
தொகுமலேசியத் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து ஏறக்குறைய 65 கி.மீ தொலைவில் சிலாங்கூர் மாநிலத்தின் சிப்பாங் மாவட்டத்தில் அமைந்து உள்ளது. அதிவிரைவு தொடருந்துச் சேவையின் வழி, இந்தப் பன்னாட்டு நிலையத்தை 28 நிமிடங்களில் சென்று அடையும் வகையில் நவீனமான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தப் பன்னாட்டு நிலையம் 27 சூன், 1998-இல் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. இதை அமைக்க 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்; ஏறக்குறைய 12 பில்லியன் மலேசிய ரிங்கிட் செலவாயிற்று. ஒவ்வோர் ஆண்டும் 35 மில்லியன் பயணிகள் இந்த வானூர்தி நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையத்தின் வழியாக 1.2 மில்லியன் டன்கள் சரக்குகளும் கொண்டு செல்லப் படுகின்றன.
கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடங்கள்
தொகு- பத்துமலை–புலாவ் செபாங் வழித்தடம்
- தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம்
- அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
- அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
- கிளானா ஜெயா வழித்தடம்
- கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து
- கேஎல்ஐஏ போக்குவரத்து
- கோலாலம்பூர் மோனோரெயில்
- காஜாங் வழித்தடம்
- கேஎல் சென்ட்ரல்–இஸ்கைபார்க்
- சா ஆலாம் வழித்தடம்
- புத்ராஜெயா வழித்தடம்
- எம்ஆர்டி சுற்று வழித்தடம்
- சன்வே விரைவுப் பேருந்து வழித்தடம்
வழித்தடம்
தொகுகேஎல்ஐஏ போக்குவரத்து தொடருந்து நிலையங்கள்
தொகுகேஎல்ஐஏ போக்குவரத்து தொடருந்து (KLIA Transit) வழித்தடத்தில் 6 நிலையங்கள் உள்ளன. அந்த நிலையங்களின் விவரங்கள்:
நிலையக் குறியீடு | தோற்றம் | நிலையத்தின் பெயர் |
KT1 | கோலாலம்பூர் சென்ட்ரல் | |
KT2 | பண்டார் தாசேக் செலாத்தான் நிலையம் | |
KT3 | புத்ராஜெயா சென்ட்ரல் | |
KT4 | சாலாக் திங்கி நிலையம் | |
KT5 | கேஎல்ஐஏ T1 நிலையம் | |
KT6 | கேஎல்ஐஏ T2 நிலையம் |
பயணிகள்
தொகுகேஎல்ஐஏ போக்குவரத்து தொடருந்து பயணிகள் [5] | |||
---|---|---|---|
ஆண்டு | பயணிகள் | குறிப்பு | |
2023 | 5,143,373 | ||
2022 | 3,375,314 | ||
2021 | 724,997 | கோவிட்-19 | |
2020 | 2,189,136 | கோவிட்-19 | |
2019 | 6,788,122 | மிக உயர்வு | |
2018 | 6,540,177 | ||
2017 | 6,443,667 | ||
2016 | 6,485,272 | ||
2015 | 6,496,617 | ||
2014 | 6,310,323 | ||
2013 | 4,374,220 | ||
2012 | 3,723,536 | ||
2011 | 3,236,795 | ||
2010 | 2,626,121 | ||
2009 | 1,794,080 | ||
2008 | 2,508,886 | ||
2007 | 2,449,842 | ||
2006 | 2,369,763 | ||
2005 | 1,829,224 | ||
2004 | 1,734,614 | ||
2003 | 970,598 | ||
2002 | 187,848 | 20 சூன் 2002-இல் செயல்பாடுகள் தொடங்கின |
காட்சியகம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்சான்றுகள்
தொகு- ↑ "Number of Passengers for Rail Transport Services, First Quarter, 2024" (PDF) (in மலாய் and ஆங்கிலம்). Ministry of Transport, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 20 September 2024.
- ↑ "Number of Passengers for Rail Transport Services, Fourth Quarter, 2023" (in மலாய் and ஆங்கிலம்). Ministry of Transport, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 20 September 2024.
- ↑ "KLIA Ekspres is the fastest non-stop train transfer between the Kuala Lumpur city center and the Kuala Lumpur International Airport (KLIA Terminal 1 & KLIA Terminal 2) with a total journey time of only 33 minutes". klia2.info. பார்க்கப்பட்ட நாள் 8 November 2024.
- ↑ "The KLIA (Kuala Lumpur International Airport) Ekspres and Transit trains are airport rail link services that aim to provide expedited travel between the two principal terminals KLIA (main terminal) and KLIA2 (low-cost carrier terminal), and KL Sentral, Kuala Lumpur's main intercity railway station". Tunnel Time. பார்க்கப்பட்ட நாள் 8 November 2024.
- ↑ "Statistic of Rail Transport". Ministry of Transport (Malaysia). Archived from the original on 9 January 2022. பார்க்கப்பட்ட நாள் 12 February 2022.
வழித்தட வரைபடங்க்ள்
தொகு- Route search - Interactive transport guide of Kuala Lumpur public transport system
- Route Map from malaysiaexpat.com
- Route Map from ktmb.com.my
- Route Map from prasarana.com.my
- Route Map from stesensentral.com
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Express Rail Link தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- KLIA Ekspres – official website
- The KLIA Transit at the official KLIA Ekspres website.