பண்டார் தாசேக் செலாத்தான் நிலையம்
பண்டார் தாசேக் செலாத்தான் நிலையம் (ஆங்கிலம்: Bandar Tasik Selatan Station (BTS); மலாய்: Stesen Bandar Tasik Selatan) என்பது மலேசியா, கோலாலம்பூர், பண்டார் தாசேக் செலாத்தான் புறநகரில் அமைந்துள்ள ஒரு பெரிய இடைமாற்று நிலையமாகும். இந்த நிலையம் சிரம்பான் வழித்தடத்தை பயன்படுத்தும் கேடிஎம் கொமுட்டர் கேடிஎம் இடிஎஸ் தொடருந்துகள்; செரி பெட்டாலிங் வழித்தடம் மற்றும் கேஎல்ஐஏ போக்குவரத்து ஆகியவற்றுக்கான நிறுத்தமாகவும் பரிமாற்ற முனையமாகவும் செயல்படுகிறது.[1]
பண்டார் தாசேக் செலாத்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
KB04 SP15 KT2 பல்வகை போக்குவரத்து முனையம் Bandar Tasik Selatan Station | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாசேக் செலாத்தான் நிலையம் (2007) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அமைவிடம் | கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2, பண்டார் தாசேக் செலாத்தான், கோலாலம்பூர், மலேசியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 3°4′34″N 101°42′38″E / 3.07611°N 101.71056°E | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து பிரசரானா மலேசியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தடங்கள் | மலாயா மேற்கு கடற்கரை சிரம்பான் வழித்தடம் செரி பெட்டாலிங் வழித்தடம் கேஎல்ஐஏ போக்குவரத்து ETS கேடிஎம் இடிஎஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 (KTM) 2 (LRT) 4 (ERL) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இணைப்புக்கள் | பெர்செப்பாடு செலாத்தான் பேருந்து முனையம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | கட்டணம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நிலையக் குறியீடு | KB04 SP15 KT2 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 10 நவம்பர் 1995 (KTM) 11 சூலை 1998 (LRT) 20 சூன் 2002 (ERL) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
அத்துடன் கொமுட்டர் தொடருந்துகளுக்கும்; இலகு விரைவு தொடருந்துகளுக்கும்; மற்றும் நீண்டதூர பேருந்துகளுக்கும் ஒரு பல்வகை போக்குவரத்து முனையமாகவும் (Terminal Bersepadu Selatan) (TBS) இயங்குகிறது. இருப்பினும், பயணப் பாதையை மாற்ற விரும்பும் பயணிகள் தங்களின் பயணச் சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும்; ஏனெனில் ஒவ்வொரு வழித்தடத்திற்கும் பயன்படுத்தப்படும் டிக்கெட் அமைப்பு வேறுபட்டது.[2]
நவம்பர் 1, 2011 முதல், கோலாலம்பூரில் இருந்து இங்குள்ள பல்வகை போக்குவரத்து முனையத்திற்கு தொடருந்து சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளன.
பொது
தொகுஇந்த நிலையம் 10 நவம்பர் 1995-இல் கோலாலம்பூர் - காஜாங் கேடிஎம் கொமுட்டர் சேவை தொடங்கியபோது திறக்கப்பட்டது. 1998-ஆம் ஆண்டு சூலை 11-ஆம் தேதி எல்ஆர்டி இசுடார் (LRT STAR) சேவையின் இரண்டாம் கட்டம் செயல்படத் தொடங்கியபோது; இந்த நிலையத்தின் கேடிஎம் கொமுட்டர் சேவையானது எல்ஆர்டி இசுடார் சேவையுடன் இணைக்கப்பட்டது.[3]
இந்த இரண்டு சேவைகளும் தங்களுடைய சொந்த நிலையக் கட்டிடங்களைக் கொண்டவை; அந்த இரு கட்டிடங்களும், தடங்களும் பாதசாரிகள் நடைபாதை மூலமாக இணைக்கப்பட்டுள்ளன.
ஈப்போ-கோலாலம்பூர்-சிரம்பான் சேவை
தொகுபின்னர், 20 ஜூன் 2002-இல், விரைவு தொடருந்து இணைப்பு, கேஎல்ஐஏ தொடருந்து சேவையை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்த நிலையத்திற்கு கேஎல்ஐஏ தொடருந்து சேவை அறிமுகமானது.[4]
2008 இல், கேடிஎம் இடிஎஸ்; ஈப்போ-கோலாலம்பூர்-சிரம்பான் சேவையை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்த நிலையத்திற்கு கேடிஎம் இடிஎஸ் சேவை செய்யத் தொடங்கியது. இருப்பினும், 2015-இல் மீண்டும் கேடிஎம் இடிஎஸ் சேவை தொடங்கப்படுவதற்கு முன்னர், பல ஆண்டுகளுக்கு இந்த நிலையத்தில் கேடிஎம் இடிஎஸ் சேவை நிறுத்தப்பட்டது.[4]
பல்வகை போக்குவரத்து முனையம்
தொகு9-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ், பண்டார் தாசேக் செலாத்தான் நிலையம், தெற்கு நோக்கிச் செல்லும் விரைவுப் பேருந்துகளுக்கான போக்குவரத்து மையமாக மாற்றப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்தில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் பேருந்துகள் இங்கு மாற்றப்பட்டன. RM 570 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்ட பல்வகை போக்குவரத்து முனையம், 1 சனவரி 2011 முதல் இயங்குகிறது.
ஒரே ஒரு ஒருங்கிணைந்த மையமாக இல்லாமல், பண்டார் தாசேக் செலாத்தான் நிலையம், மூன்று வெவ்வேறு நிலையங்களாக அருகருகே அமைக்கப்பட்டு உள்ளது.
சிரம்பான் வழித்தடம்
தொகுசிரம்பான் வழித்தடம் அல்லது சிரம்பான் தொடருந்து வழித்தடம் (Seremban Line) என்பது மலேசியாவின் மத்திய மாநிலப் பகுதிகளில் (KTM Komuter Central Sector), மலாயா தொடருந்து நிறுவனம், வழங்கி வரும் மூன்று தொடருந்து சேவைகளின் வழித்தடங்களில் ஒன்றாகும்.
இந்தச் வழித்தடம், மின்சார இரயில்கள் மூலமாக இயக்கப்படுகிறது. பத்துமலை; புலாவ் செபாங்; தம்பின் ஆகிய மூன்று நகரங்களை இந்தச் சேவை இணைக்கின்றது.
ரவாங் தம்பின் இணைப்பு
தொகுஇந்தச் சேவையில் சில தொடருந்து வண்டிகள் சிரம்பான் நகரத்துடன் தங்களின் பயணச் சேவைகளை நிறுத்திக் கொள்கின்றன.
15 டிசம்பர் 2015-க்கு முன்பு, இந்தச் சேவை கோலாலம்பூர் ரவாங் நகரங்களுக்கு இடையில் மட்டுமே இருந்தது. ஆறு பெட்டிகள் கொண்ட 37 தொடருந்துகள் இந்தச் சேவையில் இப்போது ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
மேற்சான்றுகள்
தொகு- ↑ Chia Mui Wee (1998). Persepsi pengguna terhadap penggunaan perkhidmatan pengangkutan Sistem Transit Aliran Ringan. Universiti Malaya: Bahagian Pentadbiran Perniagaan,Fakulti Ekonomi dan Pentadbiran, Universiti Malaya. p. 87.
- ↑ "Bandar Tasik Selatan LRT Station is a Malaysian interchange station located next to and named after Bandar Tasik Selatan, in Kuala Lumpur, the capital city of Malaysia. The station serves as both a stop and interchange for KTM Komuter, Sri Petaling Line, and the Express Rail Link's KLIA Transit & KLIA Ekspres trains, and RapidKL buses". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 10 August 2023.
- ↑ "The Bandar Tasik Selatan LRT station is a Malaysian interchange station located next to the Terminal Bersepadu Selatan (TBS)". பார்க்கப்பட்ட நாள் 10 August 2023.
- ↑ 4.0 4.1 "The interchange station serves as both a stop and interchange for KTM Komuter, Ampang Line LRT, and the Express Rail Link (ERL)'s KLIA Transit trains, and RapidKL buses". பார்க்கப்பட்ட நாள் 10 August 2023.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Terminal Bersepadu Selatan தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- பொதுவகத்தில் Bandar Tasik Selatan Railway Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- பொதுவகத்தில் Bandar Tasik Selatan LRT Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- The official Terminal Bersepadu Selatan website