கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2
கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 அல்லது மலேசிய கூட்டரசு சாலை 28 (ஆங்கிலம்: Malaysia Federal Route 28; அல்லது Kuala Lumpur Middle Ring Road 2 (MRR2); மலாய்: Laluan Persekutuan Malaysia 28 அல்லது Jalan Lingkaran Tengah 2 Kuala Lumpur) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலம்; மற்றும் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம் ஆகிய இரு மாநிலப் பகுதிகளின் எல்லைகளுக்கு அருகில் உள்ள சுற்றுப்புறங்களை இணைக்க மலேசிய பொதுப்பணித் துறை (ஜேகேஆர் - JKR) கட்டிய ஒரு வட்டச் சாலை ஆகும்.[1]
மலேசிய கூட்டரசு சாலை 28 Malaysia Federal Route 28 Laluan Persekutuan Malaysia 28 | |
---|---|
கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 Kuala Lumpur Middle Ring Road 2 Jalan Lingkaran Tengah 2 Kuala Lumpur (MRR2) | |
வழித்தடத் தகவல்கள் | |
AH141 (கிரீன்வூட்–வடக்கு கோம்பாக் மாற்றுச் சாலை) இன் பகுதி | |
நீளம்: | 65.0 km (40.4 mi) |
பயன்பாட்டு காலம்: | 1992 – |
வரலாறு: | கட்டுமானம் 2002 |
முக்கிய சந்திப்புகள் | |
வடமேற்கு முடிவு: | பண்டார் செரி டாமன்சாரா |
சுங்கை பூலோ நெடுஞ்சாலை B22 பத்துமலை சாலை B125 பத்துமலை பிங்கிரான் B31 அம்பாங் சாலை | |
தென்கிழக்கு முடிவு: | செரி பெட்டாலிங் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | கெப்போங்; பத்துமலை; கோம்பாக்; கிள்ளான் கேட்ஸ்; தாமான் மெலவாத்தி; உலு கிள்ளான்; அம்பாங் ஜெயா; பாண்டான் இண்டா; செராஸ்; பண்டார் துன் ரசாக்; பண்டார் தாசேக் செலாத்தான்; சுங்கை பீசி |
நெடுஞ்சாலை அமைப்பு | |
65.0 கிமீ (40.4 மைல்) நீளம் கொண்ட இந்த வட்டச்சாலையை, மலேசிய கூட்டரசு சாலை 28; டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை; சா ஆலாம் விரைவுச்சாலை ஆகிய மூன்று சாலைகள் ஒன்று சேர்ந்து உருவாக்குகின்றன.
அந்த மூன்று சாலைகளில் மிக முக்கியப் பங்கு வகிப்பது மலேசிய கூட்டரசு சாலை 28 ஆகும். ஏனென்னில், கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2-இன் மூன்றில் இரண்டு பாகம் மலேசிய கூட்டரசு சாலை 28-இன் பகுதியாகும்.
பொது
தொகுகோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2-இன் 0 கிலோமீட்டர் என்பது செரி டாமன்சாரா மாற்றுச் சாலையில் அமைந்துள்ளது. கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2-இன் முதல் கிலோமீட்டர், மலேசிய கூட்டரசு சாலை 54, டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை (Damansara–Puchong Expressway) மற்றும் டூத்தா–உலு கிள்ளான் விரைவுச்சாலை (Duta–Ulu Klang Expressway) ஆகிய விரைவுச் சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கெப்போங் மேம்பாலம் (Kepong Flyover) கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2-ஐ, மலேசிய கூட்டரசு சாலை 54-இல் இருந்து திசை திருப்புகிறது. கோம்பாக்கில், கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2, மீண்டும் மலேசிய கூட்டரசு சாலை 2-யைச் சந்தித்து, மேல் அடுக்குச் சாலை வழியாகக் கடந்து செல்கிறது.
கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2, மலேசிய கூட்டரசு சாலை 28; ஆகிய இரு சாலைகளும், செரி பெட்டாலிங் மாற்றுச் சாலையில் (Sri Petaling Interchange) முடிவடைகின்றன. அங்கு அவை சா ஆலாம் விரைவுச்சாலையாக (Shah Alam Expressway) மாற்றம் காண்கின்றன.
வரலாறு
தொகுகோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2-இன் கட்டுமானம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. அந்தக் கட்டங்கள்:
- பண்டார் செரி டாமன்சாரா–கெப்போங்–பத்து மலை–கோம்பாக் - (Bandar Sri Damansara–Kepong–Batu Caves–Gombak)
- கோம்பாக்–உலு கிள்ளான்–அம்பாங் - (Gombak–Ulu Klang–Ampang)
- அம்பாங்–பாண்டான்–செராஸ்–செரி பெட்டாலிங் - (Ampang–Pandan–Cheras–Sri Petaling)
கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2-இன் கட்டுமானம் RM 880 மில்லியன் செலவில், 12 தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டது. இந்தத் திட்டம் மலேசிய பொதுப்பணித் துறை மற்றும் பூமி நெடுஞ்சாலை நிறுவனம் (Bumi Hiway Sdn Bhd) ஆகிய நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டது.
முன்னோடி பாதைகள்
தொகுகோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2-இன் கட்டுமானமானது; பின்வரும் பல முக்கியச் சாலைகளைக் கையகப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது:[2]
நெடுஞ்சாலை சின்னம் |
சாலைகள் | பிரிவுகள் |
---|---|---|
சுங்கை பூலோ நெடுஞ்சாலை | பண்டார் செரி டாமன்சாரா–கெப்போங் | |
B21 | கெப்போங்–செலாயாங் நெடுஞ்சாலை | கெப்போங்–தாமான் டாயா |
B22 | பத்து மலை சாலை | பத்து மலை–தாமான் கிரீன்வூட் |
கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலை | தாமான் கிரீன்வூட்–வடக்கு கோம்பாக் | |
தாமான் மெலாத்தி சாலை | தாமான் மெலாத்தி–தாமான் மெலாவத்தி | |
B23 | உலு கிள்ளான் சாலை | தாமான் மெலாவத்தி–அம்பாங் ஜெயா |
பாண்டான் உத்தாமா சாலை | பாண்டான் ஜெயா–பாண்டான் இண்டா | |
செராஸ் பாரு சாலை | குவாரி சாலை–செராஸ் வட்டச்சுற்று வழி | |
மீடா உத்தாமா சாலை | செராஸ் வட்டச்சுற்று வழி–தாமான் மீடா | |
பண்டார் தாசேக் செலாத்தான் சாலை | பண்டார் மேவா–பண்டார் தாசேக் செலாத்தான் |
காட்சியகம்
தொகுவிளக்கம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.
- ↑ Statistik Jalan Raya Malaysia 2018, KKR