பண்டார் செரி டாமன்சாரா
பண்டார் செரி டாமன்சாரா (மலாய்; ஆங்கிலம்: Bandar Sri Damansara); சீனம்: 斯里白沙罗镇) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் (Petaling District) 5.49 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி ஆகும்.
பண்டார் செரி டாமன்சாரா Bandar Sri Damansara
PJU9 | |
---|---|
ஆள்கூறுகள்: 3°11′N 101°36′E / 3.183°N 101.600°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | பெட்டாலிங் மாவட்டம் |
மாநகராட்சி | பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி |
அமைவு | 1996 |
பரப்பளவு | |
• மொத்தம் | 5.49 km2 (2.12 sq mi) |
மக்கள்தொகை (அக்டோபர் 2022) | |
• மொத்தம் | 5,01,000 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 52200 |
பண்டார் செரி டாமன்சாரா நகரியம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது; வடக்கில் SD1-SD5 பிரிவு; மற்றும் தெற்கில் SD7-SD15 பிரிவு; இந்த இரண்டு பிரிவுகளும் கோலா சிலாங்கூர்-கெப்போங் நெடுஞ்சாலையால் பிரிக்கப்பட்டுள்ளன.
அமைவு
தொகுஇந்த நகரியம், வணிக மற்றும் குடியிருப்புப் பகுதிகளின் கலவைகள் கொண்ட அமைப்பைக் கொண்டுள்ளது. பண்டார் செரி டாமன்சாரா என்பது பெட்டாலிங் ஜெயா உத்தாரா 9 (Petaling Jaya Utara 9) (PJU 9) எனும் மாவட்டக் குறியீட்டுடன், கிள்ளான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு; மற்றும் வணிக மண்டலமாகும்.
பண்டார் செரி டாமன்சாரா நகரியத்தின் வடக்கே டாமன்சாரா பெர்டானா (Petaling Jaya Utara 8) (PJU 8) குடியிருப்பு பகுதியும்; கிழக்கே டாமன்சாரா டாமாய் (Petaling Jaya Utara 10) (PJU 10) குடியிருப்பு பகுதியும் உள்ளன.
அருகாமை குடியிருப்புகள்
தொகு- கெப்போங்
- கோத்தா டாமன்சாரா (PJU 5)
- பண்டார் உத்தாமா டாமன்சாரா (PJU 6)
- முத்தியாரா டாமன்சாரா (PJU 7)
- பண்டார் மஞ்சலாரா
- சியராமாஸ்
- வலென்சியா
பெட்டாலிங் ஜெயாவில் கோலாலம்பூரின் அஞ்சல் குறியீட்டைப் பயன்படுத்தும் ஒரே நகரியம் இந்தப் பண்டார் செரி டாமன்சாரா ஆகும்.
சாலை போக்குவரத்து
தொகுபண்டார் செரி டாமன்சாராவிற்குக் கீழ்க்காணும் சாலைகளின் வழியாகச் செல்லலாம்.[1]
- கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை
- வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, வடக்கு வழித்தடம்
- இசுபிரிண்ட் விரைவுச்சாலை பெஞ்சாலா இணைப்பு
- கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2
- கோலா சிலாங்கூர்-கெப்போங் நெடுஞ்சாலை
- டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை
- டூத்தா–உலு கிள்ளான் விரைவுச்சாலை
எம்ஆர்டி போக்குவரத்து
தொகுபண்டார் செரி டாமன்சாராவிற்குக் கீழ்க்காணும் எம்ஆர்டி தொடருந்து நிலையங்களின் வழியாகச் செல்லலாம்.[2]
PY06 செரி டாமன்சாரா பாராட் எம்ஆர்டி நிலையம்
PY08 செரி டாமன்சாரா தீமோர் எம்ஆர்டி நிலையம் புத்ராஜெயா வழித்தடம்
பேருந்து போக்குவரத்து
தொகுபண்டார் செரி டாமன்சாராவிற்குக் கீழ்க்காணும் ரேபிட் கேஎல் பேருந்துகளின் மூலமாகச் செல்லலாம்.
காட்சியகம்
தொகு-
Bandar Sri Damansara, 2023
-
Persiaran Jati, 2023
-
Persiaran Ara, 2023
-
Persiaran Meranti, 2022
-
Persiaran Perdana-Persiaran Margosa Intersection, 2023
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sri Damansara Link | DUKE Highway".
- ↑ "PKNS pilih nama Kota Damansara". Berita Harian (New Straits Times Press). 29 April 1999. https://www.klik.com.my/item/story/1957732/pkns-pilih-nama-kota-damansara.