கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து

கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (ஆங்கிலம்: Klang Valley Mass Rapid Transit (MRT System); மலாய்: Transit Aliran Deras Lembah Klang) என்பது கிள்ளான் பள்ளத்தாக்கு; மற்றும் பெரும் கோலாலம்பூர் ஆகிய பகுதிகளுக்கான மூன்று வழித்தடங்களைக் கொண்ட விரைவு போக்குவரத்து (எம்ஆர்டி) திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் கோலாலம்பூர் மாநகரமும் அடங்கும்.[1]


கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து
KVMRT
Klang Valley Mass Rapid Transit
புத்ராஜெயா வழித்தடத்தில் எம்ஆர்டி தொடருந்து
தகவல்
உரிமையாளர்எம்ஆர்டி நிறுவனம்
அமைவிடம்கிள்ளான் பள்ளத்தாக்கு, மலேசியா
போக்குவரத்து
வகை
விரைவு தொடருந்து
மொத்தப் பாதைகள்3
நிலையங்களின்
எண்ணிக்கை
காஜாங் வழித்தடம் (31)
புத்ராஜெயா வழித்தடம் (35)
சுற்று வழித்தடம் (31)
இணையத்தளம்mymrt.com.my
இயக்கம்
பயன்பாடு
தொடங்கியது
காஜாங் வழித்தடம் (16.12.2016)
புத்ராஜெயா வழித்தடம் (16.06.2022)
Operation will start டிசம்பர் 2028
இயக்குனர்(கள்)ரேபிட் ரெயில்
நுட்பத் தகவல்
அமைப்பின் நீளம்மொத்தம் 153.2 கிமீ
காஜாங் வழித்தடம் 46 கிமீ
புத்ராஜெயா வழித்தடம் 57.7 கிமீ
சுற்று வழித்தடம் 50.8 கிமீ
இருப்புபாதை அகலம்1,435 மிமீ (4 அடி 8 12 அங்) Standard gauge
வழித்தட வரைபடம்

Greater KL / Klang Valley Integrated Transit Map
Source: SPAD as at May 2018

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அதிகரித்து வரும் சிக்கலான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். அத்துடன் தற்போதுள்ள தொடருந்து வலையமைப்பை ஒருங்கிணைப்பது; அதே வேளையில் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியின் தொடருந்து வலையமைப்பை விரிவுபடுத்துவதும் இந்தத் திட்டத்தின் பிற நோக்கங்கள் ஆகும்.[2]

பொது

தொகு

மலேசிய அரசாங்கத்தின் பொருளாதார மாற்று அமைப்புத் திட்டத்தின் கீழ் (National Key Economic Area under the Economic Transformation Program) இந்தத் திட்டமும் ஒன்றாகும். இந்தத் திட்டம் பற்றி சூன் 2010-இல் மலேசிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது; மற்றும் அதே ஆண்டு டிசம்பரில் இந்தத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. இந்த எம்ஆர்டி வழித்தடத்தின் முதல் கட்டுமானம் ஜூலை 2011-இல் தொடங்கியது. [3]

வரலாறு

தொகு

சூன் 2010-இல், மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக், 10-ஆவது மலேசியப் பொருளாதார மாற்று அமைப்புத் திட்டம் பற்றி (2011-2015) அறிவித்த போது, ​​கிள்ளான் பள்ளத்தாக்கிற்கான ஒரு எம்ஆர்டி திட்டம் பற்றியும் அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாகவும் அறிவித்தார்.[4] சிங்கப்பூரின் பெரும் விரைவு போக்குவரத்து திட்ட அமைப்பின் (Singapore's Mass Rapid Transit) வெற்றிகரமான விளைவுகளினால் கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து திட்டமும் ஈர்க்கப் பட்டதாக அறியப்படுகிறது.

2010 டிசம்பர் மாதம், எம்ஆர்டி திட்டத்தைச் செயல்படுத்த மலேசிய அரசாங்கம் ஒப்புதல் அளித்தது; மற்றும் கமுடா நிறுவனம் (Gamuda Berhad); எம்எம்சி நிறுவனம்( MMC Corporation Berhad) ஆகிய நிறுவனங்களின் கூட்டு அமைப்பை; கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து திட்டத்தின் பங்காளராக நியமித்தது.

கமுடா எம்எம்சி நிறுவனங்கள்

தொகு

16 டிசம்பர் 2016-இல், சுங்கை பூலோ நகரத்தில் இருந்து செமந்தான் நகரம் வரையிலான 23 கிமீ நீளமுள்ள காஜாங் வழித்தடத்தின் முதலாம் கட்ட எம்ஆர்டி கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. அதே நாளில் பொதுமக்களுக்கும் திறக்கப்பட்டது. காஜாங் வழித்தடத்தின் இரண்டாம் கட்டம், செமந்தான் நகரில் இருந்து காஜாங் நகரம் வரையிலான பகுதி; 17 சூலை 2017-இல் கட்டி முடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு