புத்ராஜெயா வழித்தடம்

புத்ராஜெயா வழித்தடம் அல்லது புத்ராஜெயா கொமுட்டர் வழித்தடம் (ஆங்கிலம்: Putrajaya Line அல்லது Putrajaya Komuter Line; மலாய்: Laluan Putrajaya அல்லது Laluan Komuter Putrajaya) என்பது மலேசியா, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள எம்ஆர்டி (Mass Rapid Transit) தொடருந்து வழித்தடம் ஆகும்.

புத்ராஜெயா வழித்தடம்
Putrajaya Line
புத்ராஜெயா வழித்தடத்தில் தானியங்கித் தொடருந்து
கண்ணோட்டம்
பூர்வீக பெயர்Laluan Putrajaya Line
நிலைசெயலில் உள்ளது
உரிமையாளர்மலாயா தொடருந்து நிறுவனம்
வழித்தட எண் மஞ்சள்
வட்டாரம்கிள்ளான் பள்ளத்தாக்கு
முனையங்கள்
நிலையங்கள்41[1]
இணையதளம்myrapid.com.my
சேவை
வகைவிரைவுப் போக்குவரத்து
அமைப்பு ரேபிட் கேஎல்
சேவைகள்குவாசா டாமன்சாரா எம்ஆர்டி
புத்ராஜெயா சென்ட்ரல்
பாதை எண்1
செய்குநர்(கள்)மலாயா தொடருந்து நிறுவனம்
பணிமனை(கள்)சுங்கை பூலோ
செர்டாங்
சுழலிருப்பு49 தொடருந்துகள்
(KTM Class 92 Komuter CSR EMU)
Hyundai Rotem Four-Car Trainsets
வரலாறு
திறக்கப்பட்டது14 ஆகத்து 1995; 29 ஆண்டுகள் முன்னர் (1995-08-14)
தொழில்நுட்பம்
வழித்தட நீளம்57.7 km (35.9 mi)[2]
மேம்பாலம்: 44.2 km (27.5 mi)
சுரங்கப்பாதை: 13.5 km (8.4 mi)
தட அளவி1,000 மிமீ (3 அடி 3 38 அங்)
மின்மயமாக்கல்750 V DC
கடத்தல் அமைப்புதானியங்கி தொடருந்து இயக்கம்
இயக்க வேகம்++ 100 km/h (62 mph)

இந்த வழித்தடம் மலேசிய நாட்டின் மூன்றாவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து வழித்தடமாக அறியப்படுகிறது. முன்பு இந்த வழித்தடம் எம்ஆர்டி சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தடம் (MRT Sungai Buloh–Serdang–Putrajaya Line) (SSP Line) என அறியப்பட்டது.

குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையத்தில் இருந்து புத்ராஜெயா சென்ட்ரல் வரை நீண்டு செல்லும் இந்த வழித்தடமானது; செரி டாமன்சாரா, கெப்போங், பத்து, ஈப்போ சாலை, செந்தூல், கம்போங் பாரு, துன் ரசாக் சாலை, கோலாலம்பூர் கோபுரம், துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச், கூச்சாய் லாமா, செரி கெம்பாங்கான் மற்றும் சைபர்ஜெயா போன்ற மக்கள் அடர்த்தியான பகுதிகள் வழியாகச் செல்கிறது.

பொது

தொகு

குவாசா டாமன்சாரா மற்றும் கம்போங் பத்து ஆகிய புறநகர்ப் பகுதிகளின் இடையிலான பாதையின் முதல் கட்டச் செயல்பாடுகள் 16 சூன் 2022-இல் தொடங்கின.[3] 2023 மார்ச் 16-ஆம் தேதி நிலத்தடி சுரங்கப்பாதை உட்பட மீதமுள்ள பாதையை உள்ளடக்கிய 2-ஆம் கட்டம் திறக்கப்பட்டது.[4]

அதிகாரப்பூர்வ போக்குவரத்து வரைபடங்களில், இந்த வழித்தடத்தின் எண் 12 என மஞ்சள் நிறத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த வழித்தடம் எம்ஆர்டி நிறுவனத்திற்கு (MRT Corp) சொந்தமானது.

11 நிலத்தடி நிலையங்கள்

தொகு

ஆனாலும் ரேபிட் ரெயில் (Rapid Rail) நிறுவனத்தின் மூலம் ரேபிட் கேஎல் (Rapid KL) சேவையின் ஒரு பகுதியாக இயக்கப்படுகிறது. அத்துடன் இது கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு (Klang Valley Integrated Transit System) எனும் இயக்கத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது.

இந்த வழித்தடம் மொத்தம் 57.7 கிமீ (35 மைல்) நீளம் கொண்டது. இது மலேசியாவின் மிக நீளமான மெட்ரோ பாதையாகும். இந்த வழித்தடத்தில் 13.5 கிமீ நிலத்தடி சுரங்கப் பகுதி உள்ளது. மொத்தம் 41 நிலையங்கள்; அவற்றில் 11 நிலையங்கள் நிலத்தடியில் கட்டப்பட்டு உள்ளன.

கட்டுமானம்

தொகு
 
குவாசா டாமன்சாரா நிலையம்
 
குவாசா டாமன்சாரா நிலையத்தில் இரண்டாவது மாடியில் நடைபாதை தீவு
 
அனைத்து நிலையங்களிலும் நடைபாதைகளில் பயணிகள் பாதுகாப்பு தடைக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

புத்ராஜெயா வழித்தடத் திட்டம் மார்ச் 2015-இல் மத்திய அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. மற்றும் 2015-ஆம் ஆண்டு மலேசிய வரவு செலவு திட்டத்தில் இந்த வழித்தட அமைப்பிற்காக RM 23 பில்லியன் ஒதுக்கப்பட்டது.[5] நவம்பர் 2015 இல் கட்டுமானம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.[6]

செப்டம்பர் 2016-இல், முன்னாள் மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களால் புத்ராஜெயா சென்ட்ரல் நிலையத்தின் தளத்தில் அடிக்கல் நாட்டு விழாவுடன் அதிகாரப்பூர்வமாக கட்டுமானம் தொடங்கியது.

புதிய மத்திய அரசு

தொகு

மே 2018-இல் பாரிசான் நேசனல் தலைமையிலான மத்திய அரசு வீழ்ச்சி அடைந்தது. அதன் பிறகு, புதிய பாக்காத்தான் அரப்பான் தலைமையிலான மத்திய அரசு எம்ஆர்டி2 MRT2 எனும் புத்ராஜெயா வழித்தடத் திட்டத்தை தள்ளி வைத்தது. அதற்கு, நாட்டில் பெருகிவரும் தேசியக் கடன் பிரச்சினை; மற்றும் நேரடி ஒப்பந்தச் செயல்முறை (Direct Negotiation Tender Process) தொடர்பான பிரச்சினைகளை மேற்கோள் காட்டியது.[7]

இந்த முடிவு புத்ராஜெயா வழித்தடத்தின் முதன்மைக் கட்டுமான குத்தகையாளரான எம்எம்சி கமுடா நிறுவனத்திடம் (MMC-Gamuda) இருந்தும்; மற்றும் அந்த நிறுவனத்தின் தொழிலாளர்களிடம் இருந்தும் நிறைய எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. ஏனெனில் சுமார் 20,000 தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழக்கும் நிலையில் இருந்தனர்.[8][9]

புதிய குத்தகை

தொகு

எனினும் பல்வேறு தரப்புகளில் இருந்து ஏற்பட்ட தாக்கத்தினால் மறு குத்தகைக்கு முன்மொழியப்பட்டது. எம்எம்சி கமுடா நிறுவனம் புதிய குத்தகைக்கு உடன்பட்டது. அந்த நிறுவனத்தினால் முன்மொழியப்பட்ட கட்டுமானச் செலவுகள் முன்பு இருந்ததை விட பாதியாகக் குறைந்தது.[10]

நிலத்தடிச் சுரங்கப் பகுதியைக் கட்டுவதற்கான செலவு மட்டும் RM 13.11 பில்லியன் ஆகும். புதிய குத்தகையின் மூலம் இந்தத் திட்டத்திற்கான மொத்தச் செலவு RM 39.35 பில்லியனில் இருந்து RM 30.53 பில்லியனாகக் குறைந்தது. அத்துடன் இதன் தொடர்ச்சியாக, எம்எம்சி கமுடா நிறுவனம், கட்டுமானத்தை மீண்டும் தொடங்கியது. அதன் பின்னர் கட்டுமான வேலைகள் சிற்சில பிரச்சினைகளுடன் சுமுகமாக நடைபெற்றது.[11]

மொத்தச் செலவு 30.53 பில்லியன் ரிங்கிட்

தொகு

எம்ஆர்டி2 புத்ராஜெயா வழித்தடத் திட்டம் 16 மார்ச் 2023 மார்ச் 16-ஆம் தேதி, பிற்பகல் 3 மணிக்கு செர்டாங் கொமுட்டர் நிலையத்தில் மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகீம் அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டது. 16 மார்ச் 2023 முதல் 31 மார்ச் 2023 வரை; புத்ராஜெயா வழித்தடத்தில் இலவசப் பயணங்களும் வழங்கப்பட்டன.[12][13]

இந்தத் திட்டத்திற்கான மொத்தச் செலவு RM 30.53 பில்லியன். (3053 கோடி மலேசிய ரிங்கிட்) நிலத்தடிச் சுரங்கப் பகுதியைக் கட்டுவதற்கான செலவு மட்டும் RM 13.11 பில்லியன் (1311 கோடி மலேசிய ரிங்கிட்).

கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடங்கள்

தொகு

புத்ராஜெயா வழித்தடக் காட்சி

தொகு
 
குவாசா டாமன்சாரா நிலையத்தில் இருந்து புத்ராஜெயா நிலையம் வரையிலான இடை நிலையங்களை விளக்கும் காட்சிப்படம்

புத்ராஜெயா வழித்தட நிலையங்கள்

தொகு

புத்ராஜெயா வழித்தடத்தில் 41 நிலையங்கள் உள்ளன. அவற்றுள் 28 நிலையங்கள் உயர்த்தப்பட்ட நிலையங்கள்; பகுதி நிலத்தடி 1 நிலையம்; நிலத்தடி நிலையங்கள் 4;

குறியீடு பெயர் நிலையம் திறப்பு நடைபாதை தளவமைப்பு
 PY01  குவாசா டாமன்சாரா எம்ஆர்டி   16 சூன் 2022 அடுக்குத் தீவு நடைமேடை உயர்த்தப்பட்ட நிலையம்
 PY02  ரப்பர் ஆய்வுக்கழகம் எம்ஆர்டி
-
-
-
-
 PY03  கம்போங் செலாமாட் எம்ஆர்டி   16 சூன் 2022 பக்க நடைமேடை உயர்த்தப்பட்ட நிலையம்
 PY04  சுங்கை பூலோ தொடருந்து நிலையம்   16 சூன் 2022 அடுக்குத் தீவு நடைமேடை உயர்த்தப்பட்ட நிலையம்
 PY05  டாமன்சாரா டாமாய் எம்ஆர்டி   16 சூன் 2022 தீவு நடைமேடை உயர்த்தப்பட்ட நிலையம்
 PY06  செரி டாமன்சாரா பாராட் எம்ஆர்டி   16 சூன் 2022 தீவு நடைமேடை உயர்த்தப்பட்ட நிலையம்
 PY07  செரி டாமன்சாரா சென்ட்ரல்   16 சூன் 2022 பக்க நடைமேடை உயர்த்தப்பட்ட நிலையம்
 PY08  செரி டாமன்சாரா தீமோர் எம்ஆர்டி   16 சூன் 2022 தீவு நடைமேடை உயர்த்தப்பட்ட நிலையம்
 PY09  மெட்ரோ பிரைமா எம்ஆர்டி   16 சூன் 2022 தீவு நடைமேடை உயர்த்தப்பட்ட நிலையம்
 PY10  கெப்போங் பாரு எம்ஆர்டி   16 சூன் 2022 தீவு நடைமேடை உயர்த்தப்பட்ட நிலையம்
 PY11  ஜிஞ்சாங் எம்ஆர்டி   16 சூன் 2022 தீவு நடைமேடை உயர்த்தப்பட்ட நிலையம்
 PY12  செரி டெலிமா எம்ஆர்டி   16 சூன் 2022 தீவு நடைமேடை உயர்த்தப்பட்ட நிலையம்
 PY13  கம்போங் பத்து எம்ஆர்டி   16 சூன் 2022 தீவு நடைமேடை உயர்த்தப்பட்ட நிலையம்
 PY14  கண்டோன்மண்ட் எம்ஆர்டி   16 சூன் 2022 பக்க நடைமேடை உயர்த்தப்பட்ட நிலையம்
 PY15  ஈப்போ சாலை எம்ஆர்டி   16 சூன் 2022 தீவு நடைமேடை பாதி நிலத்தடி
 PY16  மேற்கு செந்தூல் எம்ஆர்டி   16 சூன் 2022 தீவு நடைமேடை நிலத்தடி நிலையம்
 PY17  தித்திவாங்சா எம்ஆர்டி
 
hkl
16 சூன் 2022 தீவு நடைமேடை நிலத்தடி நிலையம்
 PY18  கோலாலம்பூர் மருத்துவமனை எம்ஆர்டி   16 சூன் 2022 திசைமாறி தீவு நடைமேடை நிலத்தடி நிலையம்
 PY19  ராஜா ஊடா எம்ஆர்டி   16 மார்ச் 2023 தீவு நடைமேடை நிலத்தடி நிலையம்
 PY20  அம்பாங் பார்க் எம்ஆர்டி   16 மார்ச் 2023 அடுக்கு நடைமேடை நிலத்தடி நிலையம்
 PY21  கேஎல்சிசி எம்ஆர்டி   16 மார்ச் 2023 அடுக்கு நடைமேடை நிலத்தடி நிலையம்
 PY22  கோன்லே எம்ஆர்டி   16 மார்ச் 2023 தீவு நடைமேடை நிலத்தடி நிலையம்
 PY23  துன் ரசாக் எக்சேஞ்ச் எம்ஆர்டி   16 மார்ச் 2023 அடுக்கு தீவு நடைமேடை நிலத்தடி நிலையம்
 PY24  சான் சோ லின் எம்ஆர்டி   16 மார்ச் 2023 தீவு நடைமேடை நிலத்தடி நிலையம்
 PY25  பண்டார் மலேசியா உத்தாரா எம்ஆர்டி   16 மார்ச் 2023
-
-
 PY26  பண்டார் மலேசியா செலாத்தான் எம்ஆர்டி   16 மார்ச் 2023
-
-
 PY27  கூச்சாய் எம்ஆர்டி   16 மார்ச் 2023 தீவு நடைமேடை உயர்த்தப்பட்ட நிலையம்
 PY28  தாமான் நாகா இமாஸ் எம்ஆர்டி   16 மார்ச் 2023 தீவு நடைமேடை உயர்த்தப்பட்ட நிலையம்
 PY29  சுங்கை பீசி எம்ஆர்டி   16 மார்ச் 2023 பக்க நடைமேடை உயர்த்தப்பட்ட நிலையம்
 PY30  தெக் பார்க் எம்ஆர்டி
-
16 மார்ச் 2023
-
உயர்த்தப்பட்ட நிலையம்
 PY31  செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி   16 மார்ச் 2023 தீவு நடைமேடை உயர்த்தப்பட்ட நிலையம்
 PY32  செர்டாங் ராயா செலாத்தான் எம்ஆர்டி   16 மார்ச் 2023 தீவு நடைமேடை உயர்த்தப்பட்ட நிலையம்
 PY33  செர்டாங் ஜெயா எம்ஆர்டி   16 மார்ச் 2023 தீவு நடைமேடை உயர்த்தப்பட்ட நிலையம்
 PY34  யுபிஎம் எம்ஆர்டி   16 மார்ச் 2023 தீவு நடைமேடை உயர்த்தப்பட்ட நிலையம்
 PY35  தாமான் யுனிவர்சிட்டி எம்ஆர்டி   16 மார்ச் 2023 பக்க நடைமேடை உயர்த்தப்பட்ட நிலையம்
 PY36  தாமான் இக்குயின் எம்ஆர்டி   16 மார்ச் 2023 தீவு நடைமேடை உயர்த்தப்பட்ட நிலையம்
 PY37  தாமான் பெர்மாய் எம்ஆர்டி   16 மார்ச் 2023 தீவு நடைமேடை உயர்த்தப்பட்ட நிலையம்
 PY38  சியாரா 16 எம்ஆர்டி   16 மார்ச் 2023 தீவு நடைமேடை உயர்த்தப்பட்ட நிலையம்
 PY39  சைபர்ஜெயா உத்தாரா எம்ஆர்டி   16 மார்ச் 2023 தீவு நடைமேடை உயர்த்தப்பட்ட நிலையம்
 PY40  சைபர்ஜெயா சிட்டி எம்ஆர்டி   16 மார்ச் 2023 தீவு நடைமேடை உயர்த்தப்பட்ட நிலையம்
 PY41  புத்ராஜெயா சென்ட்ரல்   16 மார்ச் 2023 தீவு நடைமேடை உயர்த்தப்பட்ட நிலையம்

மேற்கோள்கள்

தொகு
  1. "PUTRAJAYA LINE STATIONS". Archived from the original on 15 January 2021. பார்க்கப்பட்ட நாள் 1 January 2021.
  2. "MRT Putrajaya Line opens - we've tried it; here's our experience and guide to KV's new rail line - paultan.org". Paul Tan's Automotive News (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-03-15. பார்க்கப்பட்ட நாள் 2023-03-17.
  3. "MRT Corp". www.facebook.com (in ஆங்கிலம்). Archived from the original on 19 May 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-03-20.
  4. "Putrajaya MRT line set for full opening on March 16". Free Malaysia Today. பார்க்கப்பட்ட நாள் 3 March 2023.
  5. "MRT line 2 from Sg Buloh to Putrajaya gets green light". The Rakyat Post இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304091806/http://www.therakyatpost.com/business/2014/03/16/mrt-line-2-gets-green-light-says-mrt-corp/. 
  6. Ch'ng, Brenda (3 December 2014). "Building of new MRT second line to begin next November". The Star. Star Publication (Star) இம் மூலத்தில் இருந்து 2 December 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201202044925/https://www.thestar.com.my/News/Community/2014/12/03/Building-a-new-artery-MRT-Corp-says-work-on-second-line-to-begin-next-November/. 
  7. "23% saved on MRT2 above-ground works, underground part to be retendered says Guan Eng - Nation | The Star Online". www.thestar.com.my. Archived from the original on 6 November 2018. பார்க்கப்பட்ட நாள் 6 November 2018.
  8. "Termination of MMC-Gamuda MRT2 contract a Cabinet decision, says Guan Eng - Nation | The Star Online". www.thestar.com.my. Archived from the original on 6 November 2018. பார்க்கப்பட்ட நாள் 6 November 2018.
  9. "Azmin confirms setting up of Cabinet committee to review MRT2 contract - Nation - The Star Online". www.thestar.com.my. Archived from the original on 6 November 2018. பார்க்கப்பட்ட நாள் 6 November 2018.
  10. "MoF: MMC-Gamuda to continue underground MRT2, costs cut to RM13.11b". The Edge Markets. 26 October 2018 இம் மூலத்தில் இருந்து 29 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181029150452/http://www.theedgemarkets.com/article/mof-mmcgamuda-continue-mrt2-project-higher-cost-cut-underground-works. 
  11. "Cabinet accepts MMC-Gamuda offer - Business News - The Star Online". www.thestar.com.my. Archived from the original on 6 November 2018. பார்க்கப்பட்ட நாள் 6 November 2018.
  12. "Putrajaya MRT line set for full opening on March 16". Freemalaysiatoday. 3 March 2023. https://www.freemalaysiatoday.com/category/nation/2023/03/03/putrajaya-mrt-line-set-for-full-opening-on-march-16/. 
  13. "Free rides on Putrajaya MRT till March 31". Freemalaysiatoday. 16 March 2023. https://www.freemalaysiatoday.com/category/nation/2023/03/16/free-rides-on-putrajaya-mrt-till-march-31/. 

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்ராஜெயா_வழித்தடம்&oldid=4145923" இலிருந்து மீள்விக்கப்பட்டது