கேடிஎம் கொமுட்டர் வடக்கு பகுதி

கேடிஎம் கொமுட்டர் வடக்கு பகுதி (மலாய்: KTM Komuter Sektor Utara ஆங்கிலம்: KTM Komuter Northern Sectorr; சீனம்: 马来亚铁道通勤铁路北马区); என்பது தீபகற்ப மலேசியாவின் வடக்குப் பகுதி நகரங்களுக்கு இடையிலான மின்சாரத் தொடருந்து சேவைகளை வழங்கும் கேடிஎம் கொமுட்டர் சேவையின் வடக்குப் பகுதியைக் குறிப்பதாகும். மலாயா தொடருந்து நிறுவனம் (Keretapi Tanah Melayu Berhad) (KTMB) எனும் நிறுவனத்தின் 5 சேவைகளில் இந்தச் சேவையும் ஒன்றாகும்.

கேடிஎம் கொமுட்டர் வடக்கு பகுதி
KTM Komuter Northern Sector
 1   2 
கேடிஎம் கொமுட்டர்
கேடிஎம் 83 ரக கொமுட்டர் வண்டி
கண்ணோட்டம்
உரிமையாளர்மலாயா தொடருந்து நிறுவனம்
வட்டாரம்பினாங்கு பெருநகரம், பேராக், கெடா, பெர்லிஸ்
முனையங்கள்
நிலையங்கள்20
இணையதளம்www.ktmb.com.my
சேவை
வகைபயணி தொடருந்து
அமைப்புகேடிஎம் கொமுட்டர்
சேவைகள் 1   Padang Besar  பட்டர்வொர்த்பாடாங் ரெங்காஸ்
 2   Padang Rengas  பட்டர்வொர்த்பாடாங் பெசார்
பாதை எண்1, 2
செய்குநர்(கள்)மலாயா தொடருந்து நிறுவனம் (கொமுட்டர் பிரிவு)
பணிமனை(கள்)புக்கிட் தெங்கா
சுழலிருப்புKTM Class 81 3-car formation
KTM Class 83 3-car formation
KTM Class 92 6-car formation
வரலாறு
திறக்கப்பட்டது11 செப்டம்பர் 2015 (2015-09-11)
தொழில்நுட்பம்
வழித்தட நீளம்பட்டர்வொர்த்பாடாங் ரெங்காஸ்: 104 km (65 mi)
பட்டர்வொர்த்பாடாங் பெசார்: 169.8 km (105.5 mi)
தட அளவி1,000 மிமீ (3 அடி 3 38 அங்)
மின்மயமாக்கல்25 kV 50 Hz
இயக்க வேகம்120 km/h (75 mph)
வழி வரைபடம்
வார்ப்புரு:KTM Komuter Northern Sector

கேடிஎம் கொமுட்டர் சேவை பன்முக மின்சாரத் தொடருந்துகளை (Electric Multiple-Unit) (EMU) பயன்படுத்துகிறது. இதுவே மலேசிய தொடருந்து நிறுவனத்தால் இயக்கப்பட்ட முதலாவது மின்சாரத் தொடருந்து சேவையாகும். இதற்குப் பின்னர்தான் கேடிஎம் இண்டர்சிட்டி (KTM Intercity); கேடிஎம் இடிஎஸ் (KTM ETS); ஆகிய இரு சேவைகளும் பயன்பாட்டிற்கு வந்தன.[1]

பொது

தொகு

2014 டிசம்பர் மாதம் ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டம் நிறைவு அடைந்ததைத் தொடர்ந்து 2015 செப்டம்பர் 11-ஆம் தேதி இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் சேவை பின்னர் ஈப்போ தொடருந்து நிலையத்தில் இருந்து பாடாங் பெசார் வரை கேடிஎம் இடிஎஸ் சேவை என நீட்டிக்கப்பட்டது.[2]

தற்போது, கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகள் வடக்கு பகுதியில் இரண்டு வழித்தடங்களைக் கொண்டுள்ளது; அதாவது பட்டர்வொர்த்பாடாங் பெசார் வழித்தடம்; மற்றும் பட்டர்வொர்த்பாடாங் ரெங்காஸ் வழித்தடம்.[3][4][5]

அத்துடன் கேடிஎம் இடிஎஸ் சேவையின் மற்ற வழித்தடங்களையும் கேடிஎம் கொமுட்டர்பகிர்ந்து கொள்கின்றது. கேடிஎம் இடிஎஸ் தொடருந்துகளால் சேவை செய்யப்படாத நிலையங்களுக்கு கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகள் செல்கின்றன.

வழித்தடங்கள், நிலையங்கள்

தொகு

கேடிஎம் கொமுட்டர் வடக்குப் பிரிவு இரண்டு வழித்தடங்களைக் கொண்டுள்ளது:[6]

நிலையம் நடைபாதை  2 
நிறுத்தம்
 1 
நிறுத்தம்
குறிப்புகள்
பாடாங் பெசார் 2 தீவு நடைபாதைகள் வடக்குப் பகுதியின் இறுதி நிலையம்
பிக்கிட் கெத்ரி 2 தீவு நடைபாதைகள்
ஆராவ் 2 தீவு நடைபாதைகள்
கொடியாங் 2 பக்க நடைபாதைகள்
அனாக் புக்கிட் 2 பக்க நடைபாதைகள் 5 முதல் 8 நிமிடங்களில் சுல்தான் அப்துல் அலிம் வானூர்தி நிலையம்
அலோர் ஸ்டார் 2 பக்க நடைபாதைகள்
கோபா 2 பக்க நடைபாதைகள்
குரூண் 2 தீவு நடைபாதைகள்
சுங்கை பட்டாணி 2 பக்க நடைபாதைகள்
தாசேக் குளுகோர் 1 தீவு நடைபாதை 1 பக்க நடைபாதை
புக்கிட் மெர்தாஜாம் 2 தீவு நடைபாதைகள் இடமாற்று நிலையம்
புக்கிட் தெங்கா 2 தீவு நடைபாதைகள்
பட்டர்வொர்த் 2 தீவு நடைபாதைகள் ஜார்ஜ் டவுன் நகருக்கு ரேபிட் பெரி மூலம் அணுகல்; இடமாற்றம்.
புக்கிட் தெங்கா 2 தீவு நடைபாதைகள்
புக்கிட் மெர்தாஜாம் 2 தீவு நடைபாதைகள் இடமாற்று நிலையம்
சிம்பாங் அம்பாட் 2 பக்க நடைபாதைகள்
நிபோங் திபால் 2 பக்க நடைபாதைகள்
பாரிட் புந்தார் 2 பக்க நடைபாதைகள்
பாகன் செராய் 2 பக்க நடைபாதைகள்
கமுந்திங் 2 தீவு நடைபாதைகள்
தைப்பிங் 2 பக்க நடைபாதைகள்
பாடாங் ரெங்காஸ் 2 தீவு நடைபாதைகள் நீல வழித்தடத்தின் தெற்கு முனைய நிறுத்தம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Commuter rail to service north soon". The Star. 25 August 2015. http://www.thestar.com.my/News/Nation/2015/08/25/Commuter-rail-to-service-north-soon/. 
  2. "Northern KTM Komuter service pending SPAD approval". The Star. 24 August 2015. http://www.thestar.com.my/News/Nation/2015/08/24/KTM-Utara-waiting-SPAD-ok/. 
  3. "Northern folks to enjoy new mode of transportation". The Star. 11 September 2015 இம் மூலத்தில் இருந்து 27 ஆகஸ்ட் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170827085852/http://www.thestar.com.my/videos/2015/09/11/northern-folks-to-enjoy-new-mode-of-transportation/. 
  4. "KTM Commuter service connecting Kamunting and Gurun launched". The Star. 11 September 2015. http://www.thestar.com.my/News/Nation/2015/09/11/KTMB-northern-region-new-service/. 
  5. "KTM Komuter service from Butterworth to Padang Besar launched". The Star. 1 January 2016. http://www.thestar.com.my/news/nation/2016/01/01/ktm-komuter-service-butterworth-padang-besar/. 
  6. "Penamatan Perkhidmatan Tren Ets Butterworth – Padang Besar – Butterworth EG9501 Dan EG9502, Bermula 01 Januari 2016" (PDF). Archived from the original (PDF) on 2 பெப்பிரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2016.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

பரணிடப்பட்டது 2009-03-23 at the வந்தவழி இயந்திரம்